Salaar Review: சாலா பாகுந்தி.. சலார் ட்விட்டர் விமர்சனம்.. தியேட்டர்களில் தீபாவளி கொண்டாட்டம்!

ஹைதராபாத்: 2017ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி நடிகர் பிரபாஸுக்கு உலகளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 6 வருடங்களாக அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களுக்கு முதல் நாள் ஓப்பனிங் நல்லா இருந்தாலும் படங்கள் சொதப்பிய நிலையில், வெற்றி கிடைக்காமல் பிரபாஸ் தவித்து வந்தார்.

ராஜமெளலிக்கு பிறகு பிரபாஸுக்கு கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் கைகொடுத்துள்ளார். தெலங்கானாவில் நள்ளிரவு 1 மணிக்கு காட்சி வெளியானது. உலகின் பல இடங்களில் 4 மணி முதல் சலார் ஓடி வருகிறது.

Salaar Twitter Review in Tamil: Prabhas fans started their mega festival at theaters

அனைத்து இடங்களிலும் பிரபாஸ் ரசிகர்கள் தியேட்டர்களில் இன்று இன்னொரு தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். படத்தை பற்றி ரசிகர்கள் அளித்துள்ள விமர்சனங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

பிளாக்பஸ்டர்: பிரசாந்த் நீல், பிரபாஸ் மற்றும் அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் இவை தான் சலார் படத்தின் பாசிட்டிவ். படம் வேற லெவலில் இருக்கு பிளாக்பஸ்டர் ஹிட். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டார்லிங் பிரபாஸ் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கப் போகிறார் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

தென்னிந்தியாவில் திருவிழா: இந்த படத்தை பார்க்கும் போது தென்னிந்தியாவில் திருவிழா என்றே தெரிகிறது. பாவம் ஷாருக்கான் ரசிகர்கள் டங்கியை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. டைனோசரஸ் அவ்வளவு வெறித்தனமாக வந்திருக்கிறது என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

சாலா பாகுந்தி: நான் என்டிஆர் ரசிகன் தான். ஆனால், பிரபாஸ் சலார் படத்தில் தெறிக்க விட்டு இருக்கிறார். சாலா பாகுந்தி என இந்த ரசிகர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். பூஸ்தபிதாம்.. நிலாமட்டம் என இன்னொரு ரசிகர் பப்ளிக் ரிவ்யூவில் பிரபாஸ் படத்தைக் கொண்டாடி தீர்த்துள்ளார். கேஜிஎஃப் பட இயக்குநர் பிரபாஸ் ரசிகர்களை கொஞ்சமும் ஏமாற்றவில்லை என்றே தெரிகிறது.

பல தோல்விகளுக்குப் பிறகு: தொடர்ந்து ஹாட்ரிக் டிசாஸ்டர் படங்களை கொடுத்த பிரபாஸ் பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்றிருப்பது சந்தோஷம் என பவன் கல்யாண் படத்தின் காட்சியை போட்டு இந்த ரசிகர் ஹேப்பி ஆகி உள்ளார்.

ஃபயரா இருக்கு: கான்சார் எனும் ராஜ்ஜியத்தை உருவாக்கி பிரபாஸ், பிருத்விராஜ் நட்பு என பக்காவான ஒரு டிராமாவை உருவாக்கி உள்ளனர். ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சலார் படத்தில் மொத்தமே 4 சண்டைக் காட்சிகள் மட்டும் தான். அதிகளவிலான டிராமா மற்றும் எமோஷன்கள் அந்த 4 சண்டைக் காட்சிகளுக்கான பக்கா பில்டப்பாக உள்ளது. ஆண்டு இறுதியில் ஒரு செம பாக்ஸ் ஆபிஸ் வேட்டை. சலார் ஃபயரா இருக்கு என ரசிகர்கள் தம்ப்ஸ் அப் காட்டி வருகின்றனர்.


3.5 ரேட்டிங்: தேவா கதாபாத்திரத்தில் பிரபாஸ், வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் என இருவரும் படத்தில் மிரட்டி உள்ளனர். ஸ்பெக்டாக்குலராக சலார் உள்ளது. உக்ரம், கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 என ஹாட்ரிக் அடித்த பிரசாந்த் நீல் சலார் படத்தின் மூலம் மீண்டும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறார். சலார் சீஸ் ஃபயர் மிரட்டல். அடுத்து இரண்டாம் பாகமான சவுர்யங்க பர்வத்துக்கு வெயிட்டிங் என மனோபாலா விஜயபாலன் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

மொக்கை கதை: படத்தில் கதை என சொல்லிக் கொள்ளும்படி புதிதாக எதுவும் இல்லை. அதே நண்பன் முதுகுல குத்துற கதை தான். பிரபாஸ் நடிப்பு மட்டுமே ஆறுதல். சில ஓவர் பில்டப் காட்சிகள் கடுப்பை கிளப்புகிறது என இந்த நெட்டிசன் நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X