Sikandar Twitter Review: ஏ.ஆர்.முருகதாஸ் முடிச்சுவிட்டீங்க போங்க... மதராஸி என்ன கதி ஆக போகுதோ
மும்பை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்பம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளத்தில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிக்கந்தர் பூர்த்தி செய்ததா... ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் எப்படி இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா பற்றியும் படத்தை பற்றியும் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இதில் காணலாம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தில், சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரிதோம் சக்ரோபர்த்தி, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கிறதா என்பதை தங்கள் மனதில் பட்டதை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சல்மான்கான் ரிட்டயர்மென்ட்: படம் ஓபனிங் காட்சி போன்றே எதிர்பார்ப்போடு ரிவியூவை பார்த்தால் ஆரம்பமே முகம் சுழிக்கும் வகையில் ரசிகர்களும் சிக்கந்தர் படத்தை பார்த்து கோபத்தோடு பதிவிட்டு வருகின்றனர். பழைய படத்தை காபி அடித்து எடுத்தது போல் இருக்கிறது. எதையும் பிரடிக்ட் பன்ற அளவுக்கு காட்சிகள் இருந்தால் ஓகே. ஆனால் படம் முழுக்க பார்த்த காட்சியை திரும்ப பார்ப்பது போலவே இருந்ததாக ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கடும் கோபக்காரராக இருக்கிறார். இது ஏ.ஆர்.முருகதாஸ் படம் தானா என்பது சந்தேகமாக இருக்கிறது. சல்மான்கான் பேய் மாதிரி இயக்கி நடித்திருப்பார் போல. பேசாமல் சினிமாவிற்கு ரிட்டயர்மென்ட் கொடுத்து விட்டு சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக நடத்தலாம் என பதிவிட்டிருக்கிறார்.

காஜல் அகர்வால் மாஸ்: ஒரு ரசிகர் சல்மானை புகழ்ந்து பேசியிருக்கிறார். சல்மான்கான் நடிப்பும் உணர்ச்சி பொங்க இருக்கிறது. ஆக்சன் காட்சிகள் நன்றாக இருக்கிறது என ஒருவர் தெரிவித்திருக்கிறார். சிக்கந்தர் படம் பார்க்க வந்து டைம் தான் வேஸ்ட் ஆகிடுச்சு. உண்மையை சொல்லனும்னா காஜல் அகர்வால் செம அழகா இருக்காங்க. இந்த படத்தில் ஆறுதலான விசயம் என்னவென்று பார்த்தால் காஜலோட அழகுதான். ராஷ்மிகா மந்தனா வரும் காட்சிகள் வெறுப்பாக இருக்கிறதாம். காஜல் அகர்வால் செமயா பண்ணிருக்காங்க என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
ரசிகர்கள் ரோஸ்ட்: ரசிகர்கள் எப்போதும் பிற நடிகர்களின் படத்தை தான் ரோஸ்ட் செய்வார்கள். ரிவியூவ் கொடுப்பவர்களை காரசாரமாக சமூகவலைதளத்தில் திட்டி பேசுவார்கள். ஆனால், சல்மான்கான் ரசிகர்களே இப்படத்தை ரோஸ்ட் செய்வது தான் கவலைகரமான செய்தியாக இருக்கிறது. சத்யராஜ் - சல்மான்கான் சண்டை காட்சிகளை பார்க்கும் போது தூக்கம் தான் வருகிறதாம். படத்தில் கதை இல்லாட்டியும் பரவாலை படம் பார்த்த காசுதான் வேஸ்ட் ஆகிடுச்சு என பொலம்புகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் நம்பியதற்கு நல்லா வச்சு செய்துவிட்டார் என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ள சிக்கந்தர் படத்திற்கு மோசமான முறையிலேயே விமர்சனங்கள் வந்துள்ளன. இதனால், படக்குழு அதிருப்தியில் இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் கரியர் காலி என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சிக்கந்தர் படத்தின் வரவேற்பை பொறுத்துதான் மதராஸி படத்தை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்போடு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தால் மதராஸியின் வசூலையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயனும் அப்செட்டில் இருக்கிறாராம். மதராஸியின் ரிசல்டும் இப்படித்தான் இருக்க போகிறது என ரசிகர்கள் மன வருத்தத்தில் இருக்கின்றனர். அமரன் போன்ற பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு ஒரு தோல்வி படமா என சிவகார்த்திகேயன் கலக்கத்தில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











