twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டபுள் ஆக்ஷன் படம் என்று சொல்லி டபுள் டார்ச்சர் செய்கிறார்கள்

    |

    Recommended Video

    SANGATHAMIZHAN MOVIE PUBLIC REVIEW | VIJAY SETHUPATHI, SOORI | FILMIBEAT TAMIL

    Rating:
    2.5/5

    நடிகர்கள்: விஜய்சேதுபதி, ராசி கண்ணா , நிவேதா பெத்துராஜ், நாசர்,ஸ்ரீமன்

    இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்

    இயக்குனர்: விஜய் சந்தர்

    சென்னை: தென்னிந்திய நடிகர்களில் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பவர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். அந்தவகையில் அவர் நடித்திருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தில் ரெட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று நம்ப பட்டு வந்தது . எல்லா நடிகர்களுக்கும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் இந்த வாய்ப்பு ஒரு சில கலைஞர்களுக்கு மட்டுமே அமைகிறது அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இந்த படத்தில் எவ்வாறு தன்னை 2 கதாபாத்திரங்களில் வித்தியாசப்படுத்தி இருக்கிறார் என்று பார்த்தால் ரொம்பவும் பழைய ஸ்க்ரின்ப்ளே .இரண்டு கதாபாத்திரங்கள் மட்டும் இல்லைங்க 2 ஹீரோயின்களுடனும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

    sanga tamilan released finally

    சங்கத் தமிழன் என்ற தலைப்புக்கு ஏற்ப கதாநாயகன் சங்ககால தமிழ் சினிமா அரைத்து துவைத்து காயப்போட்ட கிராமத்தை சேர்ந்தவர், ஹீரோ பீல்ட் அப் செய்து மாஸ் காட்டினாலும் நமக்கு தோன்றுவதோ "இன்னும் மா டா?? இந்த கொலவெறி "

    sanga tamilan released finally

    ஒரு வில்லன் நகரத்தை சேர்ந்த தொழிலதிபராக வருகிறார் அவருடைய மகளாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் ஒரு ப்ராஜெக்ட் சம்பந்தமாக கதாநாயகன் விஜய் சேதுபதியை சந்திக்க இருவரும் காதல் வலையில் விழுகிறார்கள். சம்பந்தமே இல்லாமல் படம் முழுவதும் கதாநாயகனுடன் உலா வருகிறார் ராசிகண்ணா. இடைவேளை வரைக்கும் விஜய் சேதுபதியின் ஒரு கதாபாத்திரத்தை கொண்டே கதை நகர்கிறது.இன்டெர்வல் பிளாக் வரும்போது தான் இன்னொரு கேரக்டர் இன்ட்ரோ செய்கிறார்கள். முதல் பாதி எப்படியோ அட்ஜஸ்ட் செய்து பார்த்து விடலாம் , காரணம் கலகலப்பான ஹீரோயின் ,பாட்டு கொஞ்சம் பைட் என்று ஏதோ ஓடிவிடுகிறது .

    இரண்டாம் பாதியில் பிளாஷ் பாக் சொல்றேன் என்று இயக்குனர் நம்மை ஒட்டுமொத்தமாக கரும்பு ஜூஸ் புழிவது போல் மடக்கி மடக்கி புழிந்து நம்மை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்.
    வழக்கமான கிராமத்தில் ஒரு எம்எல்ஏ வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். பதவிக்கு ஆசை படும் எம்எல்ஏ சூழ்ச்சி செய்வது எல்லாம் ரொம்ப ரொம்ப போர் .

    sanga tamilan released finally

    சூரி மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. நடிகை நிவேதா பெத்துராஜ் அழகான கிராமத்து பெண்ணாக மரங்கள் செடிகொடிகளை பாதுகாக்க விரும்பும் பெண்ணாக தன்னுடைய கதாபாத்திரத்தை இன்ட்ரோ செய்திருக்கிறார். தன்னுடைய முயற்சிக்கு உதவி புரிகிறார் கிராமத்து விஜய் சேதுபதி

    முருகன் என்ற கதாபாத்திரத்தில் சிட்டி ஹீரோவாகவும் சங்கத்தமிழன் என்ற பெயரில் கிராமத்து ஹீரோவாகவும் வந்து டார்ச்சர் செய்ய வைத்து இருக்கிறார் டைரக்டர் .

    sanga tamilan released finally

    சூரி மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு ஒரு நகைச்சுவை விருந்தாக இருக்கிறது. மொட்டை ராஜேந்திரன் மொக்கை போட்டுக் ஒரே காட்சியில் வெளியேறுகிறார்.

    இரண்டு கெட்டப் ஹீரோ , இரண்டு கதாநாயகிகள் , இரண்டு வில்லன்கள் , எல்லாமே டபுள் டார்ச்சர் தான்.
    வில்லனாக வரும் தொழிலதிபரும் எம்எல்ஏவும் சேர்ந்து கிராமத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிடுகின்றனர் .இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் சொல்ல படாத அற்புதமான ட்விஸ்ட் . எப்படி தான் விஜய் சேதுபதி இந்த கதையை ஒப்புக்கொண்டு நடித்தார் என்று தெரியவில்லை.

    sanga tamilan released finally

    இதை எதிர்த்து விவசாய நிலத்தை காக்க போராடுகிறார் ஹீரோவான விஜய் சேதுபதி .விஜய்சேதுபதிக்கு உதவுகிறார் நடிகர் நாசர் மற்றும் ஒட்டு மொத்த பாசமான குடும்பம். இந்த சூழ்நிலையில் கதாநாயகனை பழிவாங்க வேண்டும் என்று கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் குடும்பத்தை கொல்ல முயற்சிக்கிறார்கள்.
    தீ விபத்தில் திருவிழாவை நாசம் செய்து குடும்பத்தில் பலரை கூண்டோடு சாவடித்து பார்த்து கொண்டு இருக்கும் நம்மையும் சாவடிக்கிறார் இயக்குனர்.

    sanga tamilan released finally

    இந்த விபத்தில் தமிழ் இறந்துவிட்டதாக வில்லன்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் கதையில் நுழைகிறார் விஜய் சேதுபதி. ஆனால் தமிழன் சாகவில்லை தமிழன் தான் இந்த முருகன், முருகன் தான் தமிழன் என்று உலகத்தரமான சீன்களை வைத்து சில்மிஷம் செய்கிறார் இயக்குனர்.

    மீண்டும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே ஒரு பெரிய சண்டை, முடியாதா படம் என்று சீட்டில் நெளியும் ஆடியன்ஸ் . நீதிமன்றத்தில் கிராமத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹீரோ வெற்றி பெற கதாநாயகியான ராசிக் கண்ணாவுடன் இணைகிறார்.

    கிராமத்துக் கதை என்றாலே கதாநாயகனை பழிவாங்கும் இரண்டு வில்லன்கள் இரண்டு கதாநாயகிகள் மூன்று பாடல்கள் மரத்தை சுத்தி , ஆங்காங்கே நகைச்சுவை காட்சிகள், சில சண்டை காட்சிகள் , கோவில் திருவிழா காட்சிகள் என்று பொதுவான கான்செப்ட்டை துளி கூட மாற்றம் இல்லாமல் அச்சு அசலாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்சந்தர் . என்ன ஆச்சு பாஸ் உங்களுக்கு ?

    sanga tamilan released finally

    இந்த படம் விஜய் சேதுபதிக்கு சினிமா கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று விஜய்சந்தர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே பலமுறை சொன்ன விஷயத்தை மீண்டும் இந்த படத்தில் பார்ப்பதற்கு சலிப்பை கொடுத்திருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஸ்டெர்லைட் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்த பொழுது வந்து இருக்க வேண்டிய படம் , கால தாமதம் படத்தில் கதையையும் காலாவதி ஆக்கிவிட்டது .

    டீ கடை பட்டர் பிஸ்கெட் காட்சியில் ராசிகன்னாவுடன் விஜய்சேதுபதி செய்யும் நகைச்சுவை கொஞ்சம் ஒர்க் அவுட் ஆனது . " கமலா கலாசா " என்ற பாடல்
    மக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றிருக்கிறது .இந்த பாட்டில் விஜய் சேதுபதியும் ராசி கண்ணாவும் போடும் குத்தாட்டம் மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருந்தது கொஞ்சம் ஆறுதல்.

    விஜய்சேதுபதி பாடி லாங்குவேஜ் , உச்சரிப்பு எல்லாமே ரசிகர்களுக்கு பிடிக்கும் தான் இருந்தாலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ரசிகர்களே பல இடங்களில் இட்ச் கொட்டிக்கொண்டு கஷ்டப்பட்டு படம் பார்த்தது அவர்களுக்கு கிடைத்த தண்டனை.

    'உதயநிதியை நேரில்கூட பார்த்தது இல்லை'உதயநிதியை நேரில்கூட பார்த்தது இல்லை".. பாலியல் புகார் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த ஸ்ரீரெட்டி

    தொட்டிஜெயா சிம்புவாக ஒரே காட்சியில் செம்ம கைதட்டல் வாங்குகிறார் சூரி. சிம்பு தான் பாவம்.
    படத்தில் மிக பெரிய பலவீனம் இரண்டாம் பாதி தான். அடுத்து அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை மிக எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது .

    சங்கத்தமிழன் ரீலீஸ் தேதி பிரச்சனையை விட திரைகதையில் இருக்கும் பிரச்சனைகள் அதிகம். சங்கத்தமிழன் என்று பெயர் வைத்து சாமான்ய தமிழனாக விஜய்சேதுபதி நடித்திருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் சங்கத்தமிழன் வசூல் செய்வதில் சந்தேக தமிழன் தான்

    English summary
    "Vijay sethupathi is always eager to act in a different kinds of roles in that way he tried doing double role with simple costume changes in the script. but his double role is actually single role cheating the audience with promotional activities of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X