சாதித்தானா.. சோதித்தானா.. சங்கத்தமிழன் ட்விட்டர் விமர்சனம்!
Recommended Video
சென்னை: விஜய்சேதுபதி போன்ற டாப் ஹீரோக்களுக்கே படம் வெளியாவதில் இப்போதெல்லாம் சிக்கல் உருவாகிறது. படம் ரிலீசாகும் நேரத்தில் அதன் கழுத்தை பிடிக்கும் போக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நிச்சயம் நல்லது அல்ல.
கோடிக்கணக்கில் விளையாடப்படும் சினிமா விளையாட்டில் பலரது வாழ்வாதாரமும் அடங்கியிருக்கிறது.
படங்களின் பட்ஜெட், ஹீரோக்களின் சம்பளம் அதிகமாவது தான் இதற்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சிறு பட்ஜெட்டில் நல்ல படங்களை இயக்குபவர்களுக்கு இரட்டிப்பு லாபமும் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கி அது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றால், ஏற்படும் சிக்கல்கள் தான் தமிழ் சினிமாவை இப்படி ஆட்டிப் படைக்கிறது.
சரி, விஜய்சேதுபதியின் சங்கத் தமிழன் எப்படி இருக்கிறது என நெட்டிசன்கள் சொல்லும் கருத்தை காணலாம்.
போட்டிக்கு வந்தாச்சு
விஷாலின் ஆக்ஷன் படத்துடன் சங்கத்தமிழன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் சங்கத்தமிழன் வெளியாகாத நிலையில், ஆக்ஷன் படம் சோலோ ரிலீசாக வசூலை அள்ளியது. இந்நிலையில், நேற்று இரவு சங்கத்தமிழன் சில திரையரங்குகளிலும், இன்று காலை முதல் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாகி விஷாலின் ஆக்ஷன் படத்துக்கு போட்டியாக வந்துள்ளது.
மக்கள் பிரச்சனை
விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. வழக்கமான மாஸ் மசாலா படமாக இருந்தாலும், சங்கத்தமிழன் எடுத்துள்ள மக்கள் பிரச்சனையை படத்தை ரசிக்க வைப்பதாகவும், விஜய்சேதுபதியின் நடிப்பு அபாரம் என்றும், ராஷி கண்னா கலர்ஃபுல்லாகவும், நிவேதா பெத்துராஜ் ஹோம்லியாகவும் அசத்தியுள்ளனர் என இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.
ஒரே ஒரு நல்ல சீன்
வழக்கமாக அரைத்த மாவையே அரைத்துள்ளதாகவும், மோசமான இன்டெர்வெல் காட்சி என்றும், ஒரே ஒரு நல்ல சீன் படத்தில் இருக்கிறது, ஆனால், அதுவும் கதைக்கு தேவையில்லாத காட்சி என்பதால், படம் சுமார் தான் சொல்லுகிறார் இந்த ட்விட்டர் விமர்சகர்.
இப்படியொரு கவலை
விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படத்துக்கு அஜித் ரசிகர்கள் ஒரே மாதிரியான பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர் என்றும், எப்படியாவது வீரம் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் ஈடு செஞ்சா போதும் என விஜய் ரசிகர் இப்படியொரு கவலை படுகிறார்.
தியேட்டர் போய் பாருங்க
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள சங்கத்தமிழன் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதனால், எல்லாரும் தியேட்டர் போய் பாருங்க படத்தை பிளாக்பஸ்டர் ஹிட்டாக வையுங்க மக்களே என மக்கள் செல்வன் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications










