'Dikkiloona' Twitter Review: சந்தானத்திற்கு சக்சஸா? சறுக்கலா? டிக்கிலோனா படம் எப்படி இருக்கு?

சென்னை: நடிகர் சந்தானம் முழு நிர்வாணமாக நிற்பது போல வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டிக்கிலோனா படம் டைம் மெஷின் கான்செப்ட், மூன்று சந்தானம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் புரமோட் செய்யப்பட்ட நிலையில், ஜி5 ஒடிடியில் இன்று வெளியாகி இருக்கிறது டிக்கிலோனா.

தியேட்டரை விட ஒடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மீது மக்களின் ஒட்டுமொத்த கவனும் திரும்பி விட்டது. அதிக காசு செலவு இல்லாமல் ஒடிடியில் வீட்டிலேயே குடும்பம் முழுக்க அமர்ந்து படங்களை பார்த்து விடுகின்றனர்.

அப்படி பார்த்து ரசிக்கும் மக்களை சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படம் சிரிக்க வைத்ததா? இல்லையா? என்கிற ட்விட்டர் ரியாக்‌ஷனை இங்கே பார்ப்போம்.

சந்தானத்தின் டிக்கிலோனா

சந்தானத்தின் டிக்கிலோனா

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் டிக்கிலோனா. டைம் மெஷின் கான்செப்டில் ஒரு காமெடி படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடிகளாக அனகா மற்றும் ஷிரின் நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழில் டைம் மெஷின் படம்

தமிழில் டைம் மெஷின் படம்

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், ஆர்யா, கருணாகரன் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படமும் தமிழில் டைம் மெஷின் கான்செப்டில் வெளியான காமெடி படம் தான். அந்த வரிசையில் அடுத்ததாக சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படமும் இணைந்துள்ளது.

ஓ மை கடவுளே கதையா?

ஓ மை கடவுளே கதையா?

டைம் மெஷின் கதையாக இல்லாமல் கடவுள் கொடுக்கும் இரண்டாவது மேஜிக் டிக்கெட் வாய்ப்பாக கடந்த ஆண்டு வெளியான அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படத்தின் கதை போலவே டிக்கிலோனா கதை இருப்பதாகவும், அதில் கடவுளுக்கு பதிலாக டைம் மெஷின் கான்செப்ட்டை இணைத்து இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பேக் டு தி ஃப்யூச்சர் காப்பி

பேக் டு தி ஃப்யூச்சர் காப்பி

சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் எதிர்பார்த்த படி நல்ல என்டர்டெயின்மென்ட்டா இருக்கு என்கிற பாசிட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. படம் ஹாலிவுட் திரைப்படமான பேக் டு தி ஃப்யூச்சர் படத்தை லைட்டா டிக்கரிங் பண்ண மாதிரி இருக்கு என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார். டைம் மெஷின் தொடர்பான பல படங்களுக்கு முன்னோடியே அந்த படம் தான் என்பதால் அதன் சாயல் இல்லாமல் மற்ற படங்கள் வருவது கடினம் தான்.

Recommended Video

IFL Award | Charismatic Actress of 2021 - Shirin Kanchwala | Filmibeat tamil
நிகழ்கால வாழ்க்கை முக்கியம்

நிகழ்கால வாழ்க்கை முக்கியம்

எதிர்காலத்தை பற்றியும் இறந்த காலத்தையும் பற்றி மக்கள் கவலைப்பட்டுக் கொண்டே நிகழ்கால வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். நிகழ்கால வாழ்க்கை தான் நமக்கான வாழ்க்கை அதை விட்டு விடவே கூடாது என்கிற மெசேஜ் உடன் பக்கா காமெடி படமாக இந்த படம் வெளியாகி இருக்கு என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

சிரிப்பதற்காக

சிரிப்பதற்காக

நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களை சிரிக்க வைக்க மட்டுமே இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், மற்ற விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் ஜி5 ஒடிடியில் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க எனக் கூறியுள்ளார்.

பின்றியே அண்ணா

பின்றியே அண்ணா

நடிகர் சந்தானம் காமெடியனாக பல படங்களில் கலக்கி படிப்படியாக ஹீரோவாக முன்னேறியுள்ளார். தொடர்ந்து தனது லுக், டான்ஸ், நடிப்பு என அனைத்தையும் மெருகேற்றி வருகிறார். இந்த படத்தில் எமோஷனல் காட்சிகளிலும் பின்னி இருப்பதாக ரசிகர்கள் மீம்களை போட்டு பாராட்டி வருகின்றனர்.

லவ் பிரேக்கப் ஆகாது

லவ் பிரேக்கப் ஆகாது

டிக்கிலோனா படத்தை பார்த்த பல ரசிகர்கள் இந்த விஷயத்தை மறக்காமல் சொல்லி வருகின்றனர். லவ் பண்றவங்களாம் இந்த படத்தை தங்களோட காதலியோட பார்த்தால், கண்டிப்பா லவ் பிரேக் என்பதே நடக்காது என்றும் பாய் பெஸ்டி எவ்ளோ இரிடேட்டானா விஷயம் என்பதையும் செமயா காட்டி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X