80s Buildup Review: சந்தானத்தின் 80ஸ் பில்டப் எப்படி இருக்கு?.. ஒர்த்தா?.. ஓவர் பில்டப்பா?

சென்னை: இயக்குநர் எஸ். கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 80ஸ் பில்டப் திரைப்படம் இன்று வெளியான நிலையில், அதன் விமர்சனங்களை நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெற்றிப் பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து வெளியான கிக் படம் ஓடவில்லை.

Santhanams 80S Buildup Review done by fans in Tamil

இந்நிலையில், 80ஸ் பில்டப் படம் தேறுமா? தேறாதா? என ரசிகர்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

காமெடி ஹீரோ சந்தானம்: யோகி பாபு, சூரி, வடிவேலு எல்லாம் காமெடியை தாண்டி தங்களால் கண்ணீர் வரவழைக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த முடியும் என நிரூபித்து வருகின்றனர். ஆனால், இப்பவும் நான் ரசிகர்களின் என்டர்டெயின்மென்ட் நாயகன் தான் என தொடர்ந்து காமெடி படங்களை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு இந்த 80ஸ் பில்டப் படம் கை கொடுத்ததா? இல்லையா? என்பது குறித்து பார்ப்போம்.

டீசன்ட்டா இருக்கு: 80ஸ் பில்டப் திரைப்படம் முதல் பாதி டீசன்ட்டா இருக்கு, சில இடங்களில் காமெடி நல்லா ஒர்க்கவுட் ஆகி உள்ளது என இந்த ரசிகர் 80ஸ் பில்டப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

அதுல ஒண்ணும் இல்லை: பெரும் பில்டப் செய்யப்பட்ட 80ஸ் பில்டப் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எந்த காமெடியும் சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்றும் அதில் ஒன்றும் இல்லை கீழே போட்டுரு என சுந்தர்ராஜன் சீனையே போட்டு அவர் நடித்த படத்தை ட்ரோல் செய்துள்ளனர். இந்த படத்தில் சந்தானத்தின் தாத்தாவாக சுந்தர்ராஜன் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தடவை பார்க்கலாம்: கமல்ஹாசன் மற்று ரஜினி ரசிகர்கள் மன்றங்கள் இடையே நடைபெற்ற பிரச்சனையை ஜாலியாக வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றும் சந்தானம் நல்லா நடிச்சிருக்காரு என இந்த ரசிகர் ஆதரவு கொடுத்துள்ளார்.

மொக்கை: 80ஸ் பில்டப் படம் முழுக்கவே ஒரே வெத்து பில்டப் தான். ஒரு நல்ல காமெடி கூட இல்லை, சரியான மொக்கப்பா.. முதல் பாதியே இப்படின்னா இரண்டாம் பாதி சொல்லவா வேணும் என இந்த நெட்டிசன் போட்டு பொளந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X