Kick Review: டிடி ரிட்டர்ன்ஸ் போல காமெடியில் கலக்கினாரா சந்தானம்.. கிக் பட விமர்சனம் இதோ!

Rating:
3.0/5
Star Cast: சந்தானம், தன்யா ஹோப்
Director: பிரசாந்த் ராஜ்

இசை: அர்ஜுன் ஜன்யா

சென்னை: இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம், தன்யா ஹோப் நடிப்பில் உருவாகி உள்ள காமெடி கலாட்டா திரைப்படமான 'கிக்' இன்று வெளியானது.

ஜெயிலர் படத்துக்கு முன்னாடி ரசிகர்களை தியேட்டருக்கு வர வைத்த படம் என்றால் அது சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தான். இரண்டு வாரங்கள் சும்மா அரங்கு நிறைந்த காட்சிகளாக சிரிப்பு சத்தத்துடன் தியேட்டர்கள் ஆர்பரித்தன.

Santhanams Kick Movie Review in Tamil

இந்நிலையில், ஓடிடியில் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் வெளியாகி உள்ள இதே நாளில் தியேட்டரில் வெளியாகி உள்ள கிக் திரைப்படம் அதே போல ரசிகர்களை சிரிக்க வைத்ததா? அல்லது சோதித்ததா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

கிக் கதை: சந்தோஷ் (சந்தானம்) ஒரு விளம்பர கம்பெனியை நடத்தி வருகிறார். எப்படியாவது என்ன தில்லாலங்கடி செய்ததாவது விளம்பரங்களை பிடித்து காசு பார்த்து வருகிறார். அதே நேரத்தில் அவருக்கு ஆப்போசிட்டாக நேர்மையான முறையில் விளம்பர கம்பெனியை நடத்தி வரும் மனோபாலாவின் விளம்பர கம்பெனியில் ஹீரோயின் தன்யா ஹோப் வேலை பார்த்து வருகிறார்.

Santhanams Kick Movie Review in Tamil

இவருக்கும் இடையே நடக்கும் காதல், மோதல்களை காமெடி கலந்த ரகளையுடன் சொல்ல முயற்சித்துள்ள படம் தான் இந்த கிக்.

பிளஸ்: வழக்கம் போல ஹீரோவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களுடன் சந்தானம் ரசிகர்களை கவர்கிறார். தாராள பிரபு படத்தில் நடித்து அசத்திய தன்யா ஹோப் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து அழகிலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். தம்பி ராமைய்யா சந்தானத்துடன் இந்த படத்தில் காமெடி டிராக்கில் பல வெரைட்டிகளை செய்துள்ளார். மேலும், செந்தில், கோவை சரளா என நகைச்சுவை நடிகர்களின் நட்சத்திர பட்டாளம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

Santhanams Kick Movie Review in Tamil

மைனஸ்: ஆனால், டிடி ரிட்டர்ன்ஸ் அளவுக்கு எல்லாம் இந்த படம் காமெடி சரவெடியாக இருக்கும் என நினைத்தால் ரசிகர்கள் சற்றே ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் அதிகம். இது வேற ஒரு டிராக்கில் பயணிக்கிறது. திரைக்கதை மற்றும் காமெடி காட்சிகள் இன்னமும் வலுவாக இருந்தால் படம் தூள் கிளப்பி இருக்கும். சந்தானம் ரசிகர்களுக்கு செம கிக்கை கொடுக்கும் இந்த கிக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X