twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் நடக்கும் சண்டை... 'சந்தோஷத்தில் கலவரம்'! விமர்சனம்

    வழக்கமான பேய் கதையை தத்துவார்த்தமாக அணுகியிருக்கும் படம் சந்தோஷத்தில் கலவரம்.

    |

    Rating:
    2.0/5

    சென்னை: நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்கும் இடையே நடக்கும் கலவரமே சந்தோஷத்தில் கலவரம் படத்தின் மையக் கரு.

    ஒரே கல்லூரியில் பொறியியல் படித்த எட்டு இளைஞர்கள் (நான்கு ஆண்கள், நான்கு பெண்கள்), ஒரு காட்டுப் பகுதிக்கு சுற்றுலா செல்கிறார்கள். இவர்களுடன் நாயகன் வேணுவும் (நிராந்த்) பயணிக்கிறார். எப்போதும் நிதானமாக செயல்படும் வேணு, தியானம், யோகா என ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். இவர்கள் அனைவரும் அந்தப்புரத்தில் (காட்டுப்பகுதியில் உள்ள ஊருக்கு தான் இப்படி பெயர் வைத்திருக்கிறார்) உள்ள நண்பரின் வீட்டில் தங்குகிறார்கள். அங்கு ஒரு பேய் இருக்கிறது. அது இந்த எட்டு இளைஞர்களில் ஒருவரான விக்கியை கொல்லத் துடிக்கிறது. அந்த பேயிடம் இருந்து விக்கியையும், மற்றவர்களையும் நாயகன் வேணு எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.

    Santhoshathil kalavaram movie review

    வழக்கமான பேய் படக் கதையை தத்துவார்த்தமாக சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் கிராந்தி பிரசாத். நான்கு ஆண்கள், நான்கு பெண்கள், அவர்களுக்குள் ரொமான்ஸ், தமாஷ், சண்டை என வழக்கமான திரைக்கதை.

    விட்டலாச்சாரியா காலத்தில் நாம் பார்த்த பேயை, கிராபிக்ஸ் மூலம் லேசாக உருமாற்றி பயமுறுத்த நினைத்திருக்கிறார்கள். நம்முள் எப்போதும் பாசிடிவ் வைப்ரேஷன் இருந்தால், தீய சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனார். ஆனால் அது படமாக இல்லாமல், பிரச்சாரமாக மாறிவிடுவதால், இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பு ஏற்படுகிறது. இந்த கதையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் கிராந்தி பிரசாத்.

    நாயகன் என்ன தான் பாசிடிவான ஆளாக இருந்தாலும் பேயை பார்த்ததும் நண்பா என அழைத்து பிரச்சினையை கேட்பதெல்லாம் டூ டூ மச் நண்பா. இருந்தாலும் பேய்க்கு கூட பரிவு காட்டும், உங்க நேர்மை எங்களுக்கு பிடிச்சிருக்கு பாஸ்.

    Santhoshathil kalavaram movie review

    நாயகன் நிராந்த் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். அவரைத் தவிர மற்ற அனைவருமே சும்மா திரையில் தோன்றி இருக்கிறார்கள். படத்தில் ரவி மரியாவும் இருக்கிறார் என ஒரு வாக்கியம் சேர்த்துக் கொள்ளலாம், அவ்வளவு தான்.

    தொழில்நுட்ப ரீதியாகவும் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதுபோலத்தான் இசையும். ஆனால் படத்தில் வரும் அந்தப்புரம் மாளிகையும், வனமும் மனதுக்கு இதமளிக்கின்றன. இதை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் பாலிஸ் கோந்திஜேவாஸ் (அமெரிக்கா), ஹரிசன் லோகன் ஹோயஸ் (அமெரிக்கா), ஸ்ரவன் குமார்.

    Santhoshathil kalavaram movie review

    திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால், இந்த கலவரத்தை சந்தோஷமாக பார்த்திருக்கலாம்.

    English summary
    The tamil movie Santhoshathil kalavaram is a horror movie with positive energy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X