For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சர்தார் விமர்சனம்: தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்த பி.எஸ். மித்ரன்.. கார்த்தியின் புதுப்படம் எப்படி இருக்கு?

  |

  நடிகர்கள்: கார்த்தி, ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன்

  இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

  இயக்கம்: பி.எஸ். மித்ரன்

  Rating:
  3.5/5

  சென்னை: விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் சர்தார் படம் தீபாவளி ரிலீஸாக இந்த ஆண்டு ஹாட்ரிக் அடித்துள்ளது.

  இரும்புத்திரை படத்தில் டெக்னாலஜி யூஸ் பண்ணி பணத்தை எப்படி திருடுகின்றனர் என்பதை காட்டிய பி.எஸ். மித்ரன், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் அறிவுத் திருட்டு பற்றி படம் எடுத்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

  இந்நிலையில், சர்தார் படத்தில் தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் பி.எஸ். மித்ரன். கார்த்தி டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள சர்தார் திரைப்படம் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகி உள்ளது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

  வேள்பாரி நாவல் தான் சூர்யா 42 திரைப்படமா?: விருமன் ஆடியோ ரிலீஸில் சூர்யா சொன்னது சரியா இருக்குதே! வேள்பாரி நாவல் தான் சூர்யா 42 திரைப்படமா?: விருமன் ஆடியோ ரிலீஸில் சூர்யா சொன்னது சரியா இருக்குதே!

  சர்தார் கதை

  சர்தார் கதை

  சர்தார் கதை தேசத்துரோகி என்று முத்திரைக் குத்தப்பட்ட சர்தார் (கார்த்தி) என்ன ஆனார் என்றே தெரியாத நிலையில், அவரது மகன் கார்த்தி பப்ளிசிட்டிக்கு அலையும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். வழக்கறிஞராக நாயகி ராஷி கன்னா ஆடிப் பாடி லவ் பண்ணுகிறார். நீண்ட நாள் கழித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த லைலாவை காட்டும் போது தான் கதை ஆரம்பிக்கிறது.

  வாட்டர் பாட்டில் பிரச்சனை

  வாட்டர் பாட்டில் பிரச்சனை

  நயன்தாராவின் ஓ2 படத்தில் உடல் நலக் கோளாறு பாதித்த சிறுவனாக நடித்த ரித்து ராக்ஸ் இந்த படத்திலும் நோய்வாய்ப்பட்ட சிறுவனாகவே நடித்துள்ளார். தண்ணீரில் பிரச்சனை இல்லை என்றும் வாட்டர் பாட்டிலில் பிரச்சனை அதன் காரணமாக தனது மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டதை எண்ணி வருத்தப்படும் லைலா, தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை செய்கிறார். கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் சினேகா நடித்த அதே கதாபாத்திரத்தை லைலாவுக்கு இங்கே காப்பி பேஸ்ட் செய்துள்ளனர்.

  யாரு அந்த சர்தார்

  யாரு அந்த சர்தார்

  லைலாவின் போர்ஷனை பார்த்தாலே அவர் கதையை முடித்து விடுவார்கள் என எதிர்பார்த்ததை போலவே அவரது கதை முடிய, அவருக்கு பின்னாடி இருந்து இந்த பிரச்சனையை கிளப்பும் அந்த நபர் யார் என்கிற கதை விரிகிறது. யூகி சேதுவும் அடிக்கடி சர்தாருக்கான பில்டப்புகளை கொடுத்து வருகிறார். கடைசியில் அதுவும் இன்னொரு கார்த்தி தான் என்பது தெரிய வருகிறது.

  விஜயகாந்த் ஸ்டைல் ஃபிளாஷ்பேக்

  விஜயகாந்த் ஸ்டைல் ஃபிளாஷ்பேக்

  போஸ் எனும் நாடக கலைஞராக வெளி உலகத்துக்கு தெரியும் அப்பா கார்த்தி மறைமுக சீக்ரெட் ஏஜெண்ட் சர்தார். காப்பான் படத்தில் சூர்யா செய்த வேலைகளை இங்கே தம்பி கார்த்தி செய்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை என அப்படியே விஜயகாந்த் பட பாணி கதை கொஞ்சம் போர் அடிக்க செய்கிறது. ஒன் இந்தியா ஒன் பைப் லைன் என வில்லன் டீம் செய்யும் மோசடியை எப்படி அப்பா கார்த்தியும் மகன் கார்த்தியும் இணைந்து தடுக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை.

  பலம்

  பலம்

  படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் கார்த்தி தான். அப்பா, மகன் என டபுள் ஆக்‌ஷன் ஒரு பக்கம். ஸ்பை கேரக்டருக்காக ஏகப்பட்ட கெட்டப்புகள், நாடக கலைஞராக வேஷம் போட்டு நடிப்பது என ரவுண்டு கட்டி நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு பிரம்மாண்ட காட்சிகளை கண்முன்னே அழகாக படைத்துள்ளது. லைலாவின் கம்பேக்கும் மிகப்பெரிய பிளஸ் என்று தான் சொல்ல வேண்டும்.

  பலவீனம்

  பலவீனம்

  ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுத்து விட்டு சர்தார் ஃபிளாஷ்பேக்கில் பெரியளவில் புதுமையை இயக்குநர் பி.எஸ். மித்ரன் புகுத்த தவறி விட்டார் என்பது பலவீனமாக மாறி உள்ளது. ராணுவம், தேசத்துரோகம் உள்ளிட்ட விஷயங்கள் சமீபத்தில் பார்த்த சீதா ராமம் படத்தை நினைவுப்படுத்துகிறது. இயக்குநர் கே.வி. ஆனந்த் இல்லாத குறையை பி.எஸ். மித்ரன் தீர்த்து வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் சில தொய்வுகளையும் காதல் பாடல்களையும் தவிர்த்து இருந்தால் சர்தார் இன்னமும் சரவெடியாய் இந்த தீபாவளிக்கு இருந்திருக்கும்!

  English summary
  Karthi's Sardar Movie Review in Tamil (சர்தார் திரைவிமர்சனம்): Director PS Mithran took Water bottle problem and doing a spy thriller movie on this and Karthi did his job very well.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X