twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல்... சர்கார் முதல் விமர்சனம்! #sarkar

    சர்கார் படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படத்தைப் பார்த்த சினிமா விமர்சகர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    |

    சென்னை: விஜயின் சர்கார் திரைப்படத்தில் மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும், விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார் சினிமா விமர்சகரான உமைர் சந்து.

    துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளி ரிலீசான இப்படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

    Sarkar twitter reaction

    இந்நிலையில் யுஏஇ சென்சார் போர்டு உறுப்பினரான உமைர் சந்து, சர்கார் படத்தைப் பார்த்து விட்டு தனது விமர்சனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Sarkar twitter reaction

    அதில் அவர், " சர்கார் படத்தின் முதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல். ஐ எம் எ கார்ப்பரேட் கிரிமினல் வசனம் தெறிக்கிறது. சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸ். ஏ.ஆர். ரகுமான் சிறப்பாக இசையமைத்துள்ளார். முருகதாஸ் சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். நிச்சயமாக சர்கார் படத்தை பார்க்கலாம். மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும், விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள்" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஆரம்பம் முதல் இறுதி வரை சர்கார் ஒரு விஜய் படம் என்பதை நிரூபிக்கிறது. விஜய் தனது ரசிகரகளை ஏமாற்றவில்லை. அதிக சண்டைக்காட்சிகள், விறுவிறுப்பான கதை, அசர வைக்கும் நடனங்கள், அதிரடி பஞ்ச் டயலாக்குகள் என படம் முழுவதும் விஜய் மாஸ் காட்டுகிறார். நிச்சயமாக சர்கார் தீபாவளி பிளாக்பஸ்டர் படமாக இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

    உமைர் சந்துவின் இந்த விமர்சனத்தால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    In twitter fans are sharing there comments about Sarkar movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X