My Perfect Husband review: ஏகப்பத்தினி விரதனா? லீலை மன்னனா? மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் விமர்சனம்!

Rating :

Rating:
2.5/5

வெப் தொடர் : மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்

இயக்குநர் : தாமிரா

நடிகர்கள்: சத்யராஜ், சீதா, ரேகா

இசை: வித்யா சாகர்

சென்னை: சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் என்ற வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இதில், சத்யராஜ், சீதா, ரேகா, ரேஷ்மா பசுபுலேட்டி, வர்ஷா, ரக்‌ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிரித்திகா மனோகர், ராகவி என ஏராளமானோர் நடித்துள்ளனர். எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

Sathyaraj  My Perfect Husband  review

இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிசை முகமது ரசித் தயாரித்துள்ளார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் கேமராமேனாக பணியாற்றியுள்ளார். இந்த வெப்சீரிசுக்கு பார்த்தசாரதி எடிட்டிங் செய்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். கலகலப்பான குடும்ப கதையாக இந்த தொடர் உருவாகி உள்ளது.

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்: கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் சத்யராஜ், எந்த பெண்ணையும் தலைநிமிர்ந்தும் பார்க்காதவராக ஒரு ஏக பத்தினி விரதனாக அறிமுகம் ஆகிறார் சத்யராஜ். ஆனால், முதல் எபிசோடிலேயே அவர், ஏக பத்தினி விரதன் இல்லை, லைட்டா சிலிமிஷம் செய்யும், மன்மத லீலைக்காரன் என்பது தெரிய வருகிறது. சத்யராஜின் மனைவியாக சீதா (சரஸ்வதி) என்கிற ரோலில் நடித்துள்ளார். இவர்களின் மகனாக ரக்‌ஷன்,அஜீத் காலிக் நடித்துள்ளனர். மகளாக கிரித்திகா மனோகர் நடித்துள்ளார்.

Sathyaraj  My Perfect Husband  review

முதல் பார்வையில் காதல்: இதில், ரக்ஷன் படித்து முடித்துவிட்டு, சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சம்பாதித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் ரக்ஷனுக்கு கல்யாணப் பேச்சு வர பெண் பார்க்க கேரளாவிற்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து, சத்யராஜூக்கு, கல்லூரியில் செமினார் இருப்பதால் அவரால், பெண் பார்க்க செல்ல முடியாமல் போக, சீதா தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு பெண் பார்க்க செல்கிறார். அங்கு போனதுமே ஷர்ஷாவைப் பார்த்த ரக்ஷனுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.

முன்னாள் காதலி: இதைத்தொடர்ந்து, இருவரும் தனியாக சென்று மனம் விட்டு பேச, அப்போது வர்ஷா, உங்கள் போட்டோவில் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது என்று சொல்ல, ரக்ஷனும் எனக்கும் பிடித்து இருக்கு என்றதும். ரக்ஷன் கையில் இருக்கும் வெள்ளி மோதிரத்தை போட்டு விடும் படி சொல்ல, இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் மானசீகமாக காதலித்துக்கொண்டு இருக்கும் போது தான். திருமணம் குறித்து பேச சத்யராஜ், வர்ஷா வீட்டிற்கு போகும் போது, ஷர்ஷாவின் அம்மா ரேகா தனது கல்லூரி காலத்து காதலி என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.

சத்யராஜ் போட்ட பிளான்: அதன் பின், எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று பல முயற்சிகள் செய்கிறார் சத்யராஜ், ஒரு கட்டத்தில் இவர்களின் திருமண வேலைகள் மும்முரமாக நடக்க, தனது மனைவி சீதாவிடம், ரேகா எனது முன்னாள் காதலி என்று சொல்ல, சீதா இடிந்து போய்விடுகிறாள். பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி வந்த சீதாவிற்கும் இவர் பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் இல்லை, எல்லாம் நடிப்பு என்று தெரிந்து அதிர்ந்து போகிறாள். கடைசியில் ரக்ஷன், ஷர்ஷா திருமணம் நடந்ததா, இந்த கல்யாணம் நடக்க ரக்ஷன் போடும் பிளான் என, எட்டு எபிசோடும் கலகலப்பாக சென்றது.

சத்யராஜ் தான் பிளஸ்: இது நல்ல நகைச்சுவை குடும்ப வெப் தொடராக இருந்தாலும், இந்த வெப்தொடரை பார்ப்பதற்கு கொஞ்சம் இல்லை, ரொம்பவே பொறுமை வேணும். ஏற்கனவே நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன பல காட்சிகள் எபிசோடுக்கு எபிசோடு வந்து நம்மை சோதிக்கின்றன. சத்யராஜின் நடிப்பு எப்போதுமே சூப்பர் தான், அதுவும் ஏகபத்தினி கணவராக கொடுத்த நடிப்பும், அது எல்லாம் சும்மா, நான் அப்படிப்பட்டவன் இல்லை என்று, தெரிய வரும் காட்சியிலும் பொருத்தமாக நடித்து இருக்கிறார். இதேபோல வித்யா சாகரின் இசை ஓகே என்று சொல்லாம். மத்தபடி, வார கடைசியில் பொழுது போகவில்லை என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த வெப் தொடரை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X