twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயன் + சூரி + பொன்ராம் = ஹாட்ரிக் வெற்றி ?... 'சீமராஜா' விமர்சனம்!

    வருத்தபடாத வாலிபன் பொறுப்பான ராஜாவாக மாறும் படம் சீமராஜா.

    |

    Recommended Video

    முதல் நாளிலே 13 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயன் சீமராஜா- வீடியோ

    Rating:
    2.5/5
    Star Cast: சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன்
    Director: பொன்ராம்

    சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் போஸ் பாண்டி, பொறுப்பான ராஜாவாக மாறியிருக்கும் படம் 'சீமராஜா'.

    சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ராஜா நெப்போலியனின் ஒரே ஆண் வாரிசு சீமராஜா (சிவகார்த்திகேயன்). கணக்குப்பிள்ளை அரவிந்த்சாமியுடன் (சூரி) சேர்ந்து ஊதாரியாக ஊர் சுற்றி திரிகிறார். புளியம்பட்டி வில்லன் குடும்பமான காத்தாடி கண்ணன் (லால்) காளிஸ்வரி தம்பதிக்கும் (சிம்ரன்), சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்துக்கும் இடையே பல ஆண்டு காலப்பகை. இதனால் ஊருக்கு பொதுவான சந்தை யாராலும் பயன்படுத்த முடியாமல் பூட்டிக்கிடக்கிறது. உள்ளூர் பள்ளியில் பி.டி. ஆசிரியையாக பணிபுரியும் புளியம்பட்டி சுதந்திர செல்வி (சமந்தா) மீது சீமராஜாவுக்கு காதல் மலர்கிறது. அவரது காதலை பெற ஊர் சந்தையை திறந்து வம்பில் சிக்குகிறார் சீமராஜா. வில்லன் கும்பலிடம் இருந்து சந்தையை சீமராஜா மீட்டாரா? காதலியை கரம் பிடித்தாரா என்பது தான் படம்.

    Seemaraja movie review

    சீமராஜாவாக அசத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். உள்ளூரில் ஊதாரித்தனமாக சுற்றித்திரிவது, சார்ட் வண்டியில் வந்து சைட் அடிப்பது, சமந்தாவை காதலிப்பது, சூரியுடன் சேர்ந்து காமெடி செய்வது என தனது வழக்கமான துறுதுறு நடிப்பால் கவர்கிறார். ஆனால் அதே லுக்குடன் காஸ்ட்டியூமை மட்டும் மாற்றி கடம்பவேல் ராஜாவாக வலம் வர நினைத்திருப்பது ஒர்க்கவுட் ஆகவில்லை.

    சாதாரண எண்டர்டெயினர் படம் என்பதை தாண்டி மாஸ் ஹீரோ எண்டர்டெயினர் படமாக சீமராஜாவை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஓபனிங் பைட், ஓபனிங் சாங், பன்ச் டயலாக்ஸ் என மாஸ் ஹீரோ படத்துக்கு தேவையான அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.

    Seemaraja movie review

    'நான் வேசமில்லா பாசக்காரன்... ஏழைக்கு ஏற்ற ஏரோப்ளேன்... இவ்வளவு நாள் என்ன சீமராஜாவா தானப் பார்த்த, இனி ராஜாதிராஜாவா பார்ப்ப... நீ யாரா வேணா இரு... எவனா வேணா இரு.... ஆனா எங்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியிரு'. இதுபோன்ற வரிகள் பாடல்கள் மற்றும் வசனங்களில் இடம்பெற்றிருப்பது அதற்கான சான்று.

    சிவகார்த்திகேயன் எண்ட்ரியைவிட மாஸான எண்ட்ரி காளிஸ்வரி சிம்ரனுக்கு. 'பொம்பளையா இவ' என நம் தாய்மார்களே திட்டும் அளவுக்கு செம பெர்பாமன்ஸ். ஆனால் சவுண்ட் பார்ட்டியாக எண்ட்ரியாகி, பின்னர் சைலண்ட் மோடுக்கு தாவி விடுகிறார்.

    சிலம்பம் சுற்றும் சுதந்திர செல்வியாக அசால்ட் செய்திருக்கிறார் சமந்தா. சிவகார்த்திகேயனுடனான அந்த லவ் கெமிஸ்ட்ரி சூப்பர். நன்றாகவே கம்பும் சுற்றுகிறார். தனது பணியை செம்மையாக செய்திருக்கிறார்.

    Seemaraja movie review

    சிக்ஸ் பேக் அரவிந்த்சாமியாக சூரி, சிக்சர் அடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கு தான் உங்க ஸ்பேலிங் மிஸ்டேக் உளறல் காமெடியை ரசிப்பது புரோ. பரோட்டாவில் இருந்து பீட்சா, பர்கர்னு கொஞ்சம் அப்பேட் ஆகுங்க. பல இடங்கள்ல உங்க வேலையையும் சிவாவே பார்த்திடுறார். ராமர், ஆஞ்சநேயர் காமெடி எபிசேட் மட்டும் செம கலகல.

    ராணி வேடத்தில் கேமியோ செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த கெட்டப்பில் பார்க்கும் போது சாவித்திரி ஞாபகம் தான் வருகிறது. கம்பீர ராஜா நெப்போலியன், அடாவடி வில்லன் லால், தொட்டி தாத்தா என படத்தில் வரும் அனைவருமே நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்கள். அனைவரது காஸ்டியூம்சும் ரசிக்க வைக்கிறது.

    சிவகார்த்திகேயன் மற்றும் சூரியுடன் கூட்டணி அமைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய இரண்டு வெற்றிப்படங்கள் கொடுத்த பொன்ராம் தான் இப்படத்திற்கு எழுத்து - இயக்கம். கடந்த இரண்டு படங்களின் கதை களத்தை மற்றும் மாற்றி, கடம்பவேல் ராஜா, 14ம் நூற்றாண்டு, முகலாயர், போர், விவசாய நிலம் போன்ற விஷயங்களை சொருகி, அந்த படங்களில் வந்த லவ் பெயிலியர் பாடலை மட்டும் நீக்கிவிட்டு சீமராஜாவை தந்திருக்கிறார்.

    ஒரே மாதிரியான திரைக்கதை க்ளைமாக்ஸ் காட்சி வரை யூகிக்க வைத்துவிடுகிறது. கடம்பவேல் ராஜா பிளாஷ் பேக் காட்சிகளின் மேக்கிங் ஆசம்... ஆசம். ஆனால் அது அவ்வளவு வலுவானதாக இல்லை. இரண்டு நிமிட அனிமேஷனில் சொல்ல வேண்டிய விஷயத்தை, காடு, மலை, முகலாயப் படை, வேல் வியூகம் என பிரமாண்டமாக சொல்லியிருப்பதால் படத்தின் நீளம் அதிகரித்து கொட்டாவி விட வைக்கிறது. இந்த வாக்கியத்தை போலவே.

    Seemaraja movie review

    சிவகார்த்திகேயனை அடுத்து படத்தை தாங்கி பிடித்திருப்பது டி.இமானின் இசையும், பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் தான். மச்சக்கன்னி கேட்டுப்பாறேன் பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. உன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாடல் சூப்பர் காதல் மெலடி. பின்னணி இசையை மட்டும் மியூட் செய்துவிட்டால், பல காட்சிகள் சிரிப்பை வரவைத்திருக்கும். படத்தின் ஜீவனே இமானின் இசை தான்.

    ஒரு மாஸ் கமர்சியல் படத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நேர்மையாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். அந்த போர் காட்சிகள் ஸ்பார்டன்ஸ் படத்தை நினைவூட்டுகிறது. அந்தளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கலை, ஸ்டன்ட் என மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பும் ஸ்கிரீனில் தெரிகிறது.

    விவசாயிகளை பற்றி எல்லா படங்களிலும் பேசுவது போல் இந்த படத்திலும் பக்கம் பக்கமாக பேசுகிறார்கள். ஒருவேளை விவசாயம் தான் டிரெண்ட் என நினைத்து காட்சிகளை வைத்தது போலவே தெரிகிறது.

    சீமராஜா, தமிழ் மன்னன் என ஏகத்துக்கு பில்டப் செய்திருக்கக் கூடாது என்றே தோன்றுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு சென்றால், படத்தை ரசிக்கலாம்.

    சிவகார்த்திகேயன் + சூரி + பொன்ராம் = காமெடியை தவிர வேறொன்றும் இல்லை.

    English summary
    The tamil movie Seemaraja, starring Sivakarthikeyan, Samantha in the lead roles is commercial comedy entertainer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X