Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
Selfie Movie Review: டால் அடித்ததா.. இல்லை டல் அடித்ததா? ஜிவி பிரகாஷின் செல்ஃபி விமர்சனம் இதோ!
நடிகர்கள்: ஜிவி பிரகாஷ் குமார், வர்ஷா பொல்லம்மா, கெளதம் மேனன்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
இயக்கம் - மதிமாறன்
ரேட்டிங் - 3/5.
சென்னை: இசையை தாண்டி தன்னை ஒரு நல்ல நடிகராக மாற்றிக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.
அவர் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கும் மேல் உருவாகி வருகின்றன. இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லாம்மா, கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான செல்ஃபி படம் திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநர் வெற்றிமாறனின் உறவினரான மதிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள செல்ஃபி திரைப்படம் டால் அடித்ததா? இல்லை டல் அடித்ததா? என்கிற விமர்சனத்தை இங்கே காண்போம்..
தரமான படம்… ஜிவி பிரகாஷ்தான் மாஸ்… 'செல்ஃபி' பப்ளிக் ரிவ்யூ!

செல்ஃபி விமர்சனம்
இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கெளதம் மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள படம் செல்ஃபி. ஓய் செல்ஃபி என காதலி பின்னால் ஹீரோ ஜிவி பிரகாஷ் சுற்றிக் கொண்டு இருப்பாரா என எதிர்பார்த்தால், படத்தின் கதை வித்தியாசமான முறையில் 'ரா'வாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

புரோக்கராக
ஜெயில், பேச்சுலர் என கதைகளை கேட்டு நடித்து வந்தாலும், ஜிவி பிரகாஷை எந்த படத்தில் பார்த்தாலும் ஒரே மாதிரி இருப்பது ரசிகர்களுக்கு சற்றே சலிப்பை கொடுக்கிறது. அப்பாவின் வற்புறுத்தலுக்காக இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஜிவி பிரகாஷ் எப்படி தனியார் மருத்துவக் கல்லூரியின் மேனேஜ்மென்ட் சீட்டிற்கு மாணவர்களை பிடித்துக் கொடுக்கும் புரோக்கராக மாறுகிறார் என்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை யார் இப்படி பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டி உள்ளனர்.

கெளதம் மேனன்
இளைஞர்களையும் கல்லூரி மாணவர்களையும் புரோக்கர்களாக மாற்றி கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் நபராக கெளதம் மேனன் நடித்துள்ளார். கெளதம் மேனன் இயக்கும் படங்கள் சமீப காலமாக சொதப்பி வந்த நிலையில், முழு நேர நடிகராகவே மனுஷன் மாறிவிட்டார். ருத்ர தாண்டவம், எஃப்.ஐ.ஆர் என சமீபத்தில் மிரட்டியதை போலவே இந்த படத்திலும் கெளதம் மேனன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கதை தான் பிளஸ்
இயக்குநர் மதிமாறன் எடுத்துக் கொண்ட கதைக்களம் தான் செல்ஃபி படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. மேலும், விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு படத்தை ஒரு 'ரா'வான படம் என்கிற டோனில் அட்டகாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. ஜிவி பிரகாஷ் நடிப்பு, கெளதம் மேனன் நடிப்பு, ஜிவி பிரகாஷின் நண்பராக வந்து திடீரென தற்கொலை செய்து கொள்ளும் குணாநிதியின் கதாபாத்திரம் என எல்லாமே படத்திற்கு பிளஸ் தான்.

டல் அடிக்குது
எடுத்துக் கொண்ட திரைக்கதை ஆரம்பத்திலேயே தெளிவாக புரியும் படி சொல்லாமல், இரண்டாம் பாதிக்கு மேல் கதையை நகர்த்தியதில் இயக்குநர் மதிமாறன் தனது பணியை சரியாக செய்வதில் இருந்து தவறிவிட்டார். மற்ற படங்களுக்கு டாப் டக்கர் இசையை கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் தன் படத்தின் பாடல்களுக்கு ஏன் அட்டகாசமான இசை மற்றும் பாடல்களை கொடுப்பதில்லை என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஜிவி பிரகாஷை அவ்வப் போது வந்து காதலித்து செல்லும் வேலையை செய்யும் வர்ஷா பொல்லாம்மாவையும் ரசிகர்கள் ஹீரோயினாக ஏற்க மறுப்பது போன்ற விஷயங்கள் இந்த படத்திற்கு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.
பார்க்கலாம்
இன்னும் கொஞ்சம் சரியான ஆங்கிளில் வைத்து இந்த செல்ஃபியை இயக்குநர் மதிமாறன் எடுத்திருந்தால் வேற லெவல் மாஸ் செல்ஃபியாக நிச்சயம் இந்த படம் வந்திருக்கும். ஆனாலும், படத்தை பார்க்கும் போது முதல் பாதி மறந்து போய், இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதால், நிச்சயம் தியேட்டரில் ஒரு முறை பார்க்கலாம்.