twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செயல் - படம் எப்படி இருக்கு?

    செயல் என்று வரும் போது வீரம் முக்கியமல்ல என்பதை சொல்லும் கதை

    |

    Rating:
    2.0/5

    சென்னை: வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் அளவுக்கு பலம் இருந்தும், செயல் தான் முக்கியம் என அவர்களிடம் அடிவாங்கும் ஹீரோவின் கதை.

    நடிகர்கள் - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, ரேணுகா, முனீஸ்காந்த், வினோதினி, சூப்பர்குட் சுப்பிரமணியன், தீப்பேட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா, சமக் சந்திரா, இயக்குனர் - ரவி அப்புலு, தாயாரிப்பு - சி.ஆர்.ராஜன், இசை - சித்தார்த் விபின், ஒளிப்பதிவு -வி.இளையராஜா, படத்தொகுப்பு - நிர்மல், ஸ்டன்ட் - கனல் கண்ணன்
    வடசென்னையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பெரிய ரவுடி தண்டபாணி (சமக் சந்திரா). தங்கசாலை மார்கெட்டை மையமாக வைத்து தன் 'ரவுடி தொழிலை' செய்து வருகிறார். வடசென்னையே நடுநடுங்கி அவருக்கு மாமுல் தருகிறது. சாதாரண மிடில்கிளாஸ் பையன் கார்த்திக் (ராஜன் தேஜேஸ்வர்). தாய் லட்சுமி (ரேணுகா) சொல்லும் வேலைக்காக தங்கசாலை மார்கெட்டுக்கு செல்லும் கார்த்திக்குக்கும், ரவுடி தண்டபாணிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தண்டபாணியை அடி அடி என அடித்து உதைத்து துவம்சம் செய்கிறார் கார்த்திக் (நிஜமாதான் சொல்றேன்). இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் தீயாக பரவ, தண்டபாணியின் ரவுடி தொழிலே அடியோடு அழிகிறது. வருமானம் இல்லாததால் கார் உள்பட அனைத்தும் கையைவிட்டு போகின்றன. மனைவி சாந்தியும் (வினோதினி) அவரைவிட்டு சென்றுவிடுகிறார். இதனால் மார்கெட்டை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கார்த்திக்கை தான் அடிவாங்கிய அதே இடத்தில் வைத்து போட்டுதள்ள முடிவு செய்கிறார். இதற்கிடையே, தண்டபாணியை அடித்து முடித்த கையோடு வேலைக்காக கேரளா சென்றுவிடுகிறார் கார்த்திக். அங்கு தன் பள்ளி தோழி ஆர்த்தியை (தருஷி) எதேச்சையாக சந்திக்க, ஒருதலை காதல் மீண்டும் மலர்கிறது. தன்னை வெறுக்கும் ஆர்த்தியை துரத்தி துரத்தி காதலிக்க, ஒருகட்டத்தில் ஆர்த்தியும் கார்த்தி மீது காதல் கொள்கிறார். இதற்கிடையே, வில்லன் தண்டபாணி கார்த்திக்கை சென்னை வரவழைப்பதற்காக பல பிரயத்தனங்களை செய்கிறார். கார்த்திக் மீண்டும் சென்னை வந்தாரா, தாண்டபாணி அவரை அடித்து மார்கெட்டை கைப்பற்றினாரா? இல்லை கார்த்திக்கிடம் அடி வாங்கினாரா என்பது மீதிக்கதை.

    Seyal movie review

    ஷாஜகான் படத்தின் மூலன் விஜயை இயக்கிய ரவி அப்புலு தான் இந்த படத்தின் இயக்குனர். இவ்வளவு வருடங்கள் கழித்து ஒரு படம் தருகிறார். ஆனால் எந்த அப்டேட்டும் இல்லை. அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். ஒரு சின்ன பையன் ஒரு ரவுடியை வெளுத்து வாங்குவது என்பதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக சண்டகோழி விஷால் ரேஞ்சுக்கு சண்டை போடுவதெல்லலாம் டூ மச் பாஸ். வில்லனை படு சீரியசான கேரட்டராக காட்டிவிட்டு, சிறிது நேரத்திலேயே அவரை காமெடி பீசாக மாற்றி இருக்கிறார் இயக்குனர். அவர் நல்லவரா கேட்டவரா என பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. கார்த்திக்கை மீண்டும் மார்கெட் வரவழைப்பதற்காக வில்லன் செய்யும் காரியங்கள் சிரிப்பை வரவைக்கின்றன. ஆனால் அதையே தொடர்ந்து இழுத்திருப்பதால், 'அப்பா கார்த்திக்கு நீ வருவியா மாட்டியா, நாங்க வீட்டுக்கு போகனும்' என ஆடியன்சை கெஞ்ச வைத்திருக்கிறார்கள்.

    அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர் முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவாக முயன்றிருக்கிறார். பெட்டர் லக் கெஸ்ட் டைம். முதல்ல நல்லா நடிக்க கத்துக்கோங்க தேஜேஸ்வர்.

    இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மேலும் அழகு தேவதை இறக்குமதியாகி இருக்கிறார். கதாநாயகி தருஷிக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. கார்த்திக்கை திட்டுவது, சண்டை போடுவது, பின்னர் காதலிப்பது, டூயட் பாடுவது இவ்வளவு தான் அவருக்கான வேலை. ஓரளவுக்கு ஓ.கே. தான்.

    வழக்கமான அம்மா கேரக்டரில் ரேணுகா. அவர் பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார். டிவி தொகுப்பாளர் தீனா ஹீரோவின் நண்பனாக வந்து காமெடி செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார். 'அடடேய்னு அடிக்கத் தோணுது'. காமெடி வேலையையும் வில்லன் சமக் சந்திராவே செய்திருக்கிறார். அவரது கேக் செய்யும் ரகளைகள் மட்டுமே சிரிக்க வைக்கிறது. ஆனால் முனீஸ்காந்த் ராமதாசை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார்கள்.

    Seyal movie review

    சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் சுமார். ஒரு கமர்சியல் மாஸ் மசாலா படத்துக்கு தேவையானதை செய்து கொடுத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் இளையராஜாவும், படத்தொகுப்பாளர் நிர்மலும். ஆனால் ஷூட்டிங்கில் ஆர்டிஸ்டுகளுக்கு மேக்கப் போட்டார்களா என்பதே தெரியவில்லை. அந்தளவுக்கு டல்லாக இருக்கிறது. ஹீரோயின் ஒருவருக்கு மட்டுமே செட் ஆகிறது.

    முதலில் வில்லனை துவம்சம் செய்யும் ஹீரோ, க்ளைமாக்சில் வில்லனின் மகனுக்காக அவனிடமே அடிவாங்குவது புதுமையான விஷயம்தான். என்ன காரியமானாலும் நம்முடைய செயல்தான் முக்கியம் என சொல்ல வருகிறார் இயக்குனர். ஆனால் அதை இன்னும் கொஞ்சம் நல்ல திரைக்கதை அமைத்து சொல்லி இருக்கலாம்.

    ஆக்ஷன் த்ரில்லராக இருக்க வேண்டிய படத்தை இயக்குனர் காமெடியாக்கிவிட்டார்.

    English summary
    The Movie Seyal is all about a revenge action, comedy, family drama between a villain and hero.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X