Bloody Daddy Review: பிளடி ஸ்வீட் இல்லை.. பிளடி டாடி.. தூங்க வைத்த தூங்காவனம் இந்தி ரீமேக்!

Rating:
2.0/5

நடிகர்கள்: ஷாகித் கபூர், டயானா பென்டி, ரோனித் ராய்

ஓடிடி: ஜியோ சினிமா

நேரம்: 121 நிமிடங்கள்

இயக்கம்: அலி அப்பாஸ் ஜாஃபர்

சென்னை: ஜியோ சினிமா தனது ஓடிடி நிறுவனத்தை மற்ற முன்னணி ஓடிடி நிறுவனங்களுக்குப் போட்டியாக கொண்டு வரும் முயற்சியில் பல படங்களை இலவசமாக இறக்கி வருகிறது.

சமீபத்தில், விஜய்சேதுபதி நடித்த மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைக்கார் வெளியான சுவடே தெரியாமல் சொதப்பிய நிலையில், தூங்காவனம் படத்தின் இந்தி ரீமேக்காக பிளடி டாடி படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.

Shahid Kapoors Bloody Daddy Review in Tamil

ஐபிஎல் முடிந்த உடனே பலரும் ஜியோ ஆப்பை அன் இன்ஸ்டால் செய்து வரும் நிலையில், இப்படி மொக்கை படங்களை கொடுத்தால் அவர்களை எப்படி தக்க வைக்க முடியும் என்கிற ட்ரோல்களும் பறக்கின்றன.

பிளடி டாடி கதை: கமல்ஹாசன், த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஃபிளாப் ஆன தூங்காவனம் படம் பிரெஞ்சு மொழியில் வெளியான ஸ்லீப்லெஸ் நைட் படத்தின் ரீமேக் ஆகும். அதே ஸ்லீப்லெஸ் நைட் படத்தின் ரீமேக்கைத் தான் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இப்போ ரீமேக் செய்து நடித்து ரசிகர்கள் காதில் மீண்டும் ரத்தம் வர வைத்துள்ளார்.

பிரெஞ்ச் படமான ஸ்லீப்லெஸ் நைட் படமே சுமார் படம் தான். ஆனால், அதை தமிழில் ரீமேக் செய்தே அடி வாங்கியது கூடத் தெரியாமல் ஷாகித் கபூர் தானாக சென்று தலையை கொடுத்து விட்டாரே என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

50 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கையகப்படுத்தும் அதிகாரியின் மகனை போதைப் பொருள் கடத்தல் கும்பல் கடத்திச் செல்ல தனது மகனை ஹீரோ எப்படி ஒரே இரவுக்குள் காப்பாற்றுகிறார் என்கிற கதை தான் பிளடி டாடி.

எல்லாமே வொர்ஸ்ட்: கபீர் சிங், ஜெர்ஸி, ஃபர்ஸி என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களையும் வெப்சீரிஸ்களையும் கொடுத்து வந்த ஷாகித் கபூர் ஒரு மாத காலத்தில் ஜியோ சினிமாவுக்கு ஒரு படம் என்றதுமே ஓகே சொல்லி விட்டார் போலத்தான் தெரிகிறது.

Shahid Kapoors Bloody Daddy Review in Tamil

பெரிய சம்பளத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்ட அவர், கதை பற்றியோ இயக்குநர் பற்றியோ எந்தவொரு கவலையும் படாத நிலையில், அது அவரது நடிப்பிலும் தெரிகிறது.

ரத்தம் சொட்டச் சொட்ட சண்டை போடும் அடுத்த காட்சியிலேயே எப்படி ஷாகித் இவ்ளோ பிரெஷ்ஷா ஒரு கீறல் கூட இருக்கிறீங்க என்கிற கேள்வி தான் எழுகிறது. ஜான் விக் படத்தை போல ஆக்‌ஷனில் மிரட்டி விட்டால் படம் ஓடிவிடும் என நினைத்து விட்டார் போல இயக்குநர் அலி அபாஸ் ஜாஃபர். ஆனால், ஒரு சீன் கூட படத்தை பார்க்கும் ரசிகர்களை ஈர்க்காமல் சொதப்புகிறது.

பிளஸ்: படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுகின்றன. பின்னணி இசையும் தாறுமாறாக உள்ளது. ஃபர்ஸி வெப்சீரிஸ் ஹிட் அடித்த நிலையில், ஷாகித் கபூர் அதிரடி காட்டி உள்ளார். அவரது மனைவியாக டயானா பென்ட்டி நடித்துள்ளார். தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டது ரசிகர்களின் பணத்தை சேவ் செய்துள்ள விஷயம் பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.

மைனஸ்: படத்தின் கதை மற்றும் திரைக்கதையை விட 36 நாட்களில் இந்த படத்தை அவசர கதியில் உருவாக்கி கெடுத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். நிறைய கன்டினியுட்டி மிஸ்ஸிங் எல்லாம் இத்தனை டெக்னாலஜி வளர்ந்த பின்னரும் வருவது இயக்குநரின் திறமையை தான் கேள்விக் கேட்கத் தூண்டுகிறது.

பிளடி ஸ்வீட் என லியோ விஜய் ஸ்டைலில் சொல்ல முடியாத பிளடி டாடியாக நிற்கிறார் ஷாகித் கபூர்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X