twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Movie Review ;அப்பா மகன் பாசத்தை காட்டும் "Shang-Chi And The Legend Of The Ten Rings"

    |

    Rating:
    3.5/5
    Star Cast: நடிகர்கள் : சிமுலியூ அக்வாஃபினா மிச்சல் ஃபாலா சென் டோனி லியுங்
    Director: இயக்கம் : டெஸ்டின் டேனியல்

    சென்னை : மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 25-வது படம். பொதுவாக மார்வெல் கலக்ஷன் என்றால் மாங்கு மாங்கு என்று முதல் நாளே பார்த்தாக வேண்டும் என்று இருக்கும் வெறி கொண்ட ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல தீனி .

    புதியதொரு கதாநாயகனை, ஒரு சூப்பர்ஹீரோவை மீண்டும் திரையுலகுக்கு கொண்டு வந்திருக்கிறது மார்வெல். 'அயர்ன்மேன்' கதையின் சில சம்பவங்களையும், சில கதாபாத்திரங்களையும் இதில் மெல்லிய கோட்டில் இணைத்து உள்ளார்கள் . அதேபோல், வேறு சில திரைப்படங்களின் கதாநாயகர்கள் அவர்கள் நடித்த படங்களில் விட்ட கதையும் தொட்ட கதையும் இதில் சேர்த்து இருப்பது மார்வெல் ரசிகர்களுக்கு ஆனந்தமே .

    6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் சம்பாதித்த புகழ்...அப்படி என்ன தான் செஞ்சாரு 6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் சம்பாதித்த புகழ்...அப்படி என்ன தான் செஞ்சாரு

    அவெஞ்சர்ஸ்: எண்டு கேம் படத்துக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களில் - ஷாங்க் சி,அவனின் தங்கை மற்றும் நண்பி என முக்கோண கதையாக நகர்கிறது இந்தப் கதை . ஷாங் சியின் அப்பாவான வென்வு என்கிற தி மேண்டரின், டென் ரிங்ஸ் (பத்து வளையல்கள் ) என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுபாட்டுக்குள் வைக்க பல ஆயிரம் வருடங்கள் போர் செய்கிறார்.

     யாருக்கு வெற்றி

    யாருக்கு வெற்றி

    வித்யாசமான அற்புத சக்திகள் கொண்ட ஒரு கிராமத்தை அவர் கட்டுக்குள் கொண்டு வர ஆசை பட , அவருக்கு எதிராக அவரின் மகனும் மகளுமே வந்து நிற்கிறார்கள். இந்த போரில் தோல்வி யாருக்கு வெற்றி யாருக்கு என்பது தான் திரைக்கதை. இந்தக் குடும்பத்தின் வரலாறு என்ன என்பதை வழக்கமான பாணியில் கேலி ,கிண்டல் , நையாண்டி, அதிரடியான மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகள் எனக் கலந்துகட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைக்கிறார்கள் .

    புராண நிலத்தின் அமைதி

    புராண நிலத்தின் அமைதி

    ஆன்மீக மனதைக் கவரும் இசைக்கு , அழகான அதிரடியான காட்சிகள் கொண்டு . நேர்த்தியான விசுவல்ஸ் உங்களை ஒரு புராண நிலத்தின் அமைதியான நிலப்பரப்புகளுக்கு கொண்டு செல்கின்றன.
    சிஜி க்ளைமாக்ஸில் முதல் பாதி உச்சம் தொடும். இரண்டாம் பாதியில் கணிக்கக்கூடியதாக இருக்கும் பல காட்சிகள் இருந்தாலும் அது ரசிகர்களை எப்போதும் சீட்டின் நுனியில் வைக்கத் தவறுவதில்லை.

    காமெடியில் பட்டய கிளப்பிய

    காமெடியில் பட்டய கிளப்பிய

    ஒரு அற்புதமான ஆன்மீக அமைதியைக் கொண்டு இந்த மார்வெல் திரைப்படம் அதன் செயல்பாட்டிலும் திரைக்கதை ட்ரீட்மெண்ட்டிலும் இதை தனித்துவமாக உணர்த்திக்கிறது .ஷாங்க்சியாக சிமு லியூ ஹுமர் காட்சிகளில் பெரிய அளவில் எடுபடவில்லை என்றாலும், ஆக்‌ஷனும், அழுகையும் நன்றாகவே வருகிறது.
    ஷாங்க்சியின் சகோதரியாக மெங்கர் ஜாங் கொடுத்த வேலையை நன்கு புரிந்து கொண்டு மிகவும் அற்புதமாக நடித்து உள்ளார் . ஆனால் இந்த அண்ணன் தங்கையை மீறி காமெடியில் பட்டய கிளப்பியது "ஷாங்க் சியின் தோழி" கேட்டியாக வரும் அக்வாஃபினா (Awkwafina) தான்.

    பலரும் இப்பவே  சொல்ல

    பலரும் இப்பவே சொல்ல

    இந்த படத்தை பொறுத்தவரையில் நேரடியாக ஆங்கிலத்தில் பார்த்தாலும் தமிழ் டப்பிங்கில் பார்த்தாலும் காமெடி நடிகையும் பாடகியுமான "அக்வாஃபினா" மிரட்டி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். மார்வெல் திரைபடங்களுக்கான புதிய காமெடி கதாபாத்திரம் இவர்தான் என்று பலரும் இப்பவே சொல்ல ஆரம்பித்து விட்டனர் . ஷாங்க் சியின் தந்தை டோனி லியூங் அன்பை பொழிவதிலும் அடிதடி செய்வதிலும் , இரண்டையும் சரியாகக் கொடுத்து மிகவும் ஈர்க்கிறார் . 'அயர்ன்மேன்' படங்களில் விசித்திர என்ட்ரி தரும் பென் கிங்க்ஸ்லீக்கு இந்த படத்திலும் வேற லெவல் கதாபாத்திரம் ஒன்று உண்டு. அதுமட்டும் அல்லாமல் சில காட்சிகளே வந்தாலும், தன் அதிரடி சண்டை காட்சிகள் மூலம் மிரட்டியிருக்கிறார் மிச்சல் என்பது கூடுதல் பலம் .

    பக்கா கமற்சியல்

    பக்கா கமற்சியல்

    மார்வெல் டீம் ஒவ்வொரு படங்களுக்கும் போடும் உழைப்பு இந்த படத்திலும் விஸ்வரூபமாக தெரிகிறது . மார்வெல்லின் படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு எமோஷனல் + காமெடி கலந்த ஆக்‌ஷன்தான் இந்தப் படத்திலும் வெற்றியை தருகிறது . சரியான அளவுகோல் கொண்டு எல்லா உணர்வுகளையும் கலந்து மீண்டும் மீண்டும் ஒரு பக்கா கமற்சியல் படமாக அசத்தியிருக்கிறார்கள்.

    ஜாக்கி சான் ஞாபங்கங்கள்

    ஜாக்கி சான் ஞாபங்கங்கள்

    மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த முறை ஆசியத் தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து இந்த படத்துக்கு மிகவும் பலமாக அதை பயன்படுத்தி நம்மை கன்னெக்ட் செய்கிறார்கள் . இதற்க்கு முன் நாம் மிகவும் ரசித்த பல படங்களில் வரும் சண்டைக் காட்சிகளைப் போல இதிலும் பல சண்டைக் காட்சிகள் உள்ளது . ஜெட்லி, ஜாக்கி சான் ஞாபங்கங்கள் பல இடங்களில் வரும். இருந்தாலும் அவ்வை எல்லாம் கடந்து நம்மை ரசிக்க வைத்தது தான் இந்த படத்தின் வெற்றி . ஸ்டன்ட் காட்சிகளில் வழக்கம்போல ஸ்கோர் செய்திருக்கிறார்கள் மார்வெல் கூட்டணி .

    நான்கு தெருக்கள் மட்டுமே

    நான்கு தெருக்கள் மட்டுமே

    மாய உலகின் கிராமம் உள்ளே செல்ல பல தடைகளை தாண்டி தான் போக வேண்டும் என்று சொல்லி, நிறைய காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தால் மிகவும் எழுமையான சில காட்சிகள் மட்டுமே தந்து நம்மை கொஞ்சம் கடுப்பாகி விட்டார்கள். படத்தில் காட்டும் மாய உலகின் கிராமம் நான்கு தெருக்கள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய செட் நம்மை மீண்டும் நெளிய வைக்கிறது . 'பிளாக் பேந்தர்' படத்தில் வகாண்டா நாட்டை மிக பிரமாண்டமாக காட்டிய மார்வெல்லா இப்படிச் ஒரு செயல் செய்தது என்று நம்மை சிந்திக்க வைக்கும் . ப்ளாஷ்பேக் எமோஷனல் காட்சிகள் கொஞ்சம் போர் அடிப்பது தான் நிதர்சனமான உண்மை . அடிக்கடி கதையை ரீவைண்ட் செய்யும் போதெல்லாம் திரைக்கதை டமால் என்று படுத்து கொள்கிறது . ஆனாலும் கூட கண்டிப்பாக குடும்பத்துடனும் குறிப்பாக குழந்தைகளுடன் காண வேண்டிய ஒரு நல்ல படம் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ட்ராகன் ஃபயிட் , தண்ணீருக்குள் நடுக்கும் காட்சிகள் , மாய சக்திகள் , தீடிர் சண்டைகள் என்று ஒட்டு மொத்தமாக ரசிக்க வைக்கும் .

    Read more about: michelle
    English summary
    The movie "Shang-Chi And The Legend Of The Ten Rings" is been released today and its a long time wait came with lot of expectations with marvel collections and its huge fan following. Different stunts with emotional bonding along with humor added makes the audience very entertaining.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X