பட விமர்சனம்
ஷங்கரின் இந்தி "முதல்வன்" ஊத்திக்கிச்சாம்.
நாயக் என்ற பெயரில் படுபிரமாண்டமாக, தமிழில் கையாண்டதை விட அதி அற்புத கிராபிக்ஸ்களையெல்லாம் கையாண்டும், புதிதாக இரண்டு பாடல்களைச்சேர்த்தும் கூட நாயக் காலை வாரி விட்டதாம்.
படத்தின் தோல்விக்கு பல காரணங்களைச் சொல்லலாமாம். அனில் கபூர் சரியாக நடிக்கவில்லை என்கிறார்கள். சில காட்சிகள் அவருக்குப்பொருத்தமானதாக இல்லையாம்.
அர்ஜூன் அளவுக்கு சண்டைக் காட்சிகள், உடல் வலு ஆகியவற்றில் அனில் கபூர் பிரகாசிக்காமல் இருந்ததும் படம் தோல்வி கண்டதற்குப்பிரதானமான காரணமாம்.
படத்தின் கருவும் இந்திக்காரர்களுக்கு பிடிக்கவில்லை போலும்.
நாயக்கில் அனில் கபூர் கேரக்டரின் பெயர் என்ன தெரியுமா? சிவாஜி ராவ்! நம்ம சூப்பர் ஸ்டாரின் ஒரிஜினல் பெயர் அதுதான் என்பது உங்களுக்குத்தெரியும்தானே?
கூட்டிக் கழித்துப் பாருங்க, கணக்கு சரியா இருக்கும்!


Click it and Unblock the Notifications











