Sikandar Review: சிக்கந்தர் விமர்சனம்.. அவுட்டேட்டட் ஆன ஏ.ஆர். முருகதாஸ்.. சல்மான் கான் சொதப்பல்!

Rating:
2.0/5
Star Cast: சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால்
Director: ஏ.ஆர். முருகதாஸ்

மும்பை: ஆரம்பத்தில் ராஷ்மிகா மந்தனாவை கொன்றுவிட ரசிகர்களையும் சேர்த்தே கொன்று விடுகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இத்தனை கோடி பட்ஜெட்டில் சல்மான் கான் போன்ற முன்னணி நடிகரை வைத்துக் கொண்டு இப்படியொரு படத்தைத் தான் ஏ.ஆர். முருகதாஸால் கொடுக்க முடியுமா? என்கிற கேள்வி படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்கள் மனங்களில் எழத்தான் செய்கிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான மார்ச் 30ம் தேதி வெளியான சிக்கந்தர் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே சகிக்கவில்லை. ஷங்கர் போல ஏ.ஆர். முருகதாஸும் அவுட்டேட்டட் ஆகிவிட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த படம் நிரூபித்துள்ளது.

Sikandar Review in Tamil  A Total Money Waste Outdated Movie

சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை என்ன பண்ணி வச்சிருக்காரோ முருகதாஸ் என்று தான் ரசிகர்கள் இப்போவே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

சிக்கந்தர் கதை: கஜினி படத்தில் வருவது போல சஞ்சய் எனும் கதாபாத்திரத்தில் ராஜ்கோட்டின் ராஜா வீட்டுப்பிள்ளையாகவே வருகிறார் சல்மான் கான். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் இருந்தே தனது கணவருக்கு பாதுகாப்பாக இருக்க பல வேலைகளை செய்து வருகிறார். பலரது குறைகளை தீர்த்து வைத்து வரும் சிக்கந்தர் சல்மான் கான் தன்னுடைய ஆசை மனைவிக்கான நேரத்தை ஒதுக்காமல் இருந்து வரும் சூழலில் ஒரு கட்டத்தில் திடீரென குண்டு வெடிப்பின் போது ஏற்படும் விபத்தில் ராஷ்மிகா மந்தனா உயிரிழக்கிறார். அவரது கண், இதயம், நுரையீரல் என ஒவ்வொரு உறுப்புகளும் 3 நபருக்கு தானம் செய்யப்படுகிறது. மினிஸ்டராக மும்பையில் இருக்கும் சத்யராஜின் மகன் சாக சிக்கந்தர் சல்மான் கான் தான் காரணம் என்று நினைக்கும் சத்யராஜ் சல்மான் கானை பழிவாங்குவதற்கு பதிலாக அந்த மூன்று பேரை கொல்லத் துடிக்கிறார். அவர்களை சல்மான் கான் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் இந்த சிக்கந்தர் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஆரம்பத்தில் ஆடுகளம் கிஷோர் சிக்கந்தர் சல்மான் கானை ஒரு வழக்கில் கைது செய்ய வரும் போது ராஜ்கோட் மக்கள் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கிவிட்டு சல்மான் கானின் பவரை காட்டுகின்றனர். இறுதியில் அதே போல ஒரு சீன் மும்பையிலும் நடைபெறுகிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரே ஓவர் பில்டப் தான். இதில், நடுவே நீ வருவாய் என படம் போல காஜல் அகர்வாலுக்கு ராஷ்மிகாவின் கண்கள் பொறுத்தப்பட அவருடனாவது ரொமான்ஸ் இருக்குமா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசி வரை ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.

பிளஸ்: பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை புரொடக்‌ஷன் வேல்யூ குறையாமல் எடுத்துள்ளது மட்டும் தான் பிளஸ் என்றே சொல்ல முடியும். ராஷ்மிகா மந்தனா இருக்கும் வரை படத்தை தாங்கி பிடிக்க தன்னால் முயன்றளவுக்கு அவர் முயற்சித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் பிஜிஎம் ஓகே ரகம் தான். முதல் பாடல் மற்றும் கடைசியில் படம் முடிந்து எண்ட் கார்டு போடும் போது மீண்டும் ராஷ்மிகாவுடன் ஆடும் பாடல்கள் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதல்.

மைனஸ்: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கம் தான் இந்த படத்துக்கு மிகப்பெரிய மைனஸ். பழைய கதையை எடுத்துக் கொண்டு எப்படி தான் சல்மான் கானுக்கு சொல்லி ஓகே பண்ணாரோ தெரியவில்லை. பல கோடி கொடுத்து படம் எடுக்க சொன்னாலும், படத்தை டெத் ஸ்லோவாகத்தான் எடுப்பேன் என்றும் எந்தவொரு எமோஷனல் கனெக்ட் அல்லது ரசிகர்களுக்கான தியேட்டர் மொமண்ட்ஸ் என எதுவுமே இல்லாமல் ஃபிளாட்டாக ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளார். தம்பி அந்த பக்கம் போயிடாதே என்று தான் எச்சரிக்கத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X