twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Sillu Karupatti Review: கவித்துவமான, நான்கு கதைகளின் தொகுப்பு... சில்லுக் கருப்பட்டி விமர்சனம்

    By
    |

    Rating:
    3.5/5
    Star Cast: சமுத்திரக்கனி, சுனைனா, பேபி சாரா, லீலா சாம்சன், கே. மணிகண்டன்
    Director: ஹலீதா ஷமீம்

    சென்னை: கவித்துவமான, நான்கு துண்டு கதைகளை ஒன்றாக்கினால் அதுதான், சில்லுக் கருப்பட்டி.

    குப்பைப் பொறுக்கி குப்பத்தில் வாழ்ந்தாலும் நேர்மைகாக்கும் சிறுவன், நோய் என்று தெரிந்ததும் காணாமல் போகும் வருங்கால மனைவிக்கு மத்தியில், அதை அன்பாக மாற்றும் 'கார் ஷேரிங்' தோழி, காதலை நிரூபிக்க கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் வயதான யசோதா, பணம் தேடி ஓடும் வாழ்வில் மனைவி, குழந்தைகளின் உலகத்தை மறக்கும் தனபால், அதை உணர்த்தும் அமுதினி என ஒவ்வொரு கதையும் யதார்த்தம் மீறாத பதார்த்தம்.

    Sillu karupatti Movie review, an anthology romantic film

    குப்பை மேடையும் அதை தோண்டிப் பொருட்கள் தேடும் சிறுவர்களின் வாழ்க்கையையும் மிகையின்றி சொல்கிறது, முதல் எபிசோட். பிங்க் கலர் பேக்கைக் கண்டதும் ஓடி அள்ளிக்கொள்வது, ஷாம்பு கேட்ட தோழிக்காக, அதை ஆசையாகக் கொண்டு வருவது, அங்கு கிடைக்கும் வைரமோதிரத்தை, டேப் ரெக்கார்டரில் கட்டியபடி இடுப்பைப் பிடித்துக்கொண்டு அலைவது என குப்பைக்கார மாஞ்சாவாக ஈர்க்கிறார் ராகுல். அவரோடு வரும், அந்த பொடியனின் டயலாக் டெலிவரியும் நடிப்பும் ஆஹா.

    Sillu karupatti Movie review, an anthology romantic film

    இரண்டாவது எபிசோடில், கட்டி, கேன்சராகலாம் என்றதும் முழுவதுமாக உடைந்து போகும் மணிகண்டன், இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடன் காரை ஷேர் பண்ணும் நிவேதிதா சுரேஷ் அத்தனை அழகு. மனக்கஷ்டத்தில் இருக்கிறார் என்பதைத் புரிந்துகொண்டு, அவராகப் பேச்சுக்கொடுத்து, வாழ்க்கை வெறுத்துப் போனவனின் வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்பதும் அதற்கான உரையாடலும் சுகமான ரசனை.

    Sillu karupatti Movie review, an anthology romantic film

    வயதானவர்களின் பிரச்னையை காதலோடு சொன்ன விதத்தில் மூன்றாவது எபிசோடும் சுவாரஸ்யம்தான். தனிமையில் அவதிபடும் லீலா சாம்சன், அவருக்கு ஆதரவு கரம் கொடுக்கும் ஶ்ரீராம் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள்.

    Sillu karupatti Movie review, an anthology romantic film

    ஆனால், நடிப்பில் நின்று ஆடுவது கடைசி எபிசோட் சுனேனாவும் சமுத்திரக்கனியுமே. மெஷின்போல மூன்று குழந்தைகளைப் பெற்றுவிட்டாலும் அன்புக்கு ஏங்கும் சுனேனா, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் கணவனுக்கு வகுப்பெடுக்கும் ஆவேசம், தன் உணர்வுகளையும் ஆசைகளையும் புரிய வைக்கும் லாவகம் என இதில் வேறொரு முகம் காட்டுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் உலகமறிந்து மாறும் கணவர் சமுத்திரக்கனி, கச்சிதம்.

    Sillu karupatti Movie review, an anthology romantic film

    பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த சாரா, இதில் கொஞ்சம் பெரிய மனுஷியாகி இருக்கிறார். தொலைந்து போன மோதிரம் கிடைத்ததும் சாக்லேட்டுகளாக அள்ளி பைக்குள் திணிக்கும் மகிழ்ச்சியில், அவ்வளவு ஈர்ப்பு.

    Sillu karupatti Movie review, an anthology romantic film

    கார் ஷேரிங் பயணம், தினம் ஒரு பரிசு கொடுக்கும் காகம், மீம் கிரியேட்டரிடம் பேரம் பேசும் அரசியல்வாதி, குழந்தையாகி சறுக்கும் லீலா சாம்சன், டர்டில் வாக், சுனேனாவின் வார்த்தைகளை வார்த்தைகளை அமைதியாகக் கேட்டுப் பதிலளிக்கும் அலெக்ஸா டிவைஸ் என படத்தில் சிலிர்த்து ரசிக்க நிறைய இடங்கள். இதற்காகவே கைகொடுக்கலாம் இயக்குனர் ஹலிதா ஷமீமுக்கு.

    Sillu karupatti Movie review, an anthology romantic film

    நான்கு கதைகளுக்கும் நான்கு விதமாக ஒளிப்பதிவு செய்து கவனிக்க வைக்கிறார்கள் நான்கு ஒளிப்பதிவாளர்களும். பிரதீப் குமாரின் பின்னணி இசையும் அழகாகக் கதைச்சொல்லி இருக்கிறது.

    Sillu karupatti Movie review, an anthology romantic film

    படத்தின் பலம், ரசனையான உரையாடல்கள். அதுவே ஒரு கட்டத்தில் 'பேசிட்டே இருக்காங்கப்பா' என்று சொல்ல வைப்பதையும் தவிர்க்க முடியவில்லை. மணிகண்டன், நிவேதா எபிசோடில் சினிமாத்தனமான இறுதிக் காட்சி, அதிக அறிமுகமில்லாத லீலா சாம்சனிடம் ஶ்ரீராம் முத்த விஷயம் பேசுவது என சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும், இந்தச் சில்லுக் கருப்பட்டியில், டேஸ்ட் நிச்சயம்.

    English summary
    A tamil movie sillu karupatti, acted Samuthrakani, Nivetha suresh, sunaina and others. its an anthology film directed by Halitha sahmeem.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X