twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு? குடும்பத்துடன் பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

    |

    சென்னை: சிம்பு படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கலாமா என்கிற கேள்வி எழுவது சகஜம் தான். ஆனால், இந்த ஈஸ்வரனை குடும்பத்தோடு தான் கொண்டாட வேண்டும்.

    பக்கா ஃபேமிலி என்டர்டெயினராக இந்த பொங்கல் பண்டிகைக்கு ஈஸ்வரன் படம் வெளியாகி உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஈஸ்வரன் படம் சிம்புவுக்கு சரியான கம்பேக்காக அமைந்துள்ளதா? இல்லையா? படம் எப்படி இருக்கு என ட்விட்டர் வாசிகள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் வாங்க..

    ஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்!ஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்!

    பொங்கல் வின்னர்

    பொங்கல் வின்னர்

    ஈஸ்வரன் படம் பார்த்துட்டேன்.. ரொம்ப புடிச்சிருக்கு.. குறிப்பா சிம்புவின் நடிப்பு அபாரம்.. கண்டிப்பா இந்த படம் தான் இந்த பொங்கல் வின்னர் என இந்த ரசிகர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ஈஸ்வரன் படத்திற்கு அதிகளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    அட்லாண்டாவிலும் ஈஸ்வரன்

    அட்லாண்டாவிலும் ஈஸ்வரன்

    இப்போதான் அட்லாண்டாவில் ஈஸ்வரன் திரைப்படத்தை பார்த்தேன்.. அமெரிக்காவில் சிம்புவுக்கு இப்படியொரு கிரேஸ் இருக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த படம் சிம்புவுக்கு பர்ஃபெக்ட் கம்பேக். சிம்பு, பாரதிராஜாவின் காட்சிகள் அட்டகாசம்.

    கொஞ்சம் இழுவை

    கொஞ்சம் இழுவை

    ஈஸ்வரன் படம் சிம்பு ரசிகர்களுக்கு பட்டாசாய் இருக்கு.. பக்கா ஃபேமிலி என்டர்டெயினர். திரைக்கதையில் ஏதும் புதிதாக இல்லை. இரண்டாவது பாதியில் கொஞ்சம் இழுவை தான். ஆனாலும், இந்த பொங்கலுக்கு குடும்பத்தோடு கண்டு ரசிக்கக் கூடிய தரமான படம் தான் ஈஸ்வரன்.

    பாசிட்டிவ் விமர்சனங்கள்

    பாசிட்டிவ் விமர்சனங்கள்

    சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் 2019ம் ஆண்டு பொங்கலுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கு போட்டியாக வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், 2021ல் மாஸ்டர், பூமி படங்களுடன் போட்டியாக வந்துள்ள ஈஸ்வரன் படத்திற்கு அதிகளவிலான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    முதல் பாதி செம ஸ்பீடு

    வெறும் 28 நாட்களில் உருவாக்கப்பட்ட ஈஸ்வரன் திரைப்படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் நகர்ந்ததாகவும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை மனதில் வைத்தும், குடும்பங்களை மனதில் வைத்தும் எடுக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. சுசீந்திரனுக்கும் சிம்புவுக்கும் இந்த படம் வெற்றிப் படம் தான் என கொண்டாடி வருகின்றனர்.

    ஈஸ்வரனிலும் அஜித்

    ஈஸ்வரனிலும் அஜித்

    இந்த பொங்கலுக்கு அஜித் படம் எதுவும் வரவில்லை என்றாலும், தல ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஈஸ்வரன் படத்திலும் அஜித் ரெஃபரன்ஸ் இடம் பெற்று இருப்பது தியேட்டர்களில் அவர்களும் கொண்டாடும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்து இருக்கிறது. ஈஸ்வரன் படத்திற்கு அஜித் ரசிகர்கள் முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    English summary
    Simbu’s Eeswaran movie twitter review is here. Netizens verdict after watching FDFS, it’s a pakka family entertainer for this Pongal 2021.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X