Sinners Review: சின்னர்ஸ் விமர்சனம்.. ஆஸ்கரில் 16 நாமினேஷன்.. அப்படி இந்த பேய் படத்தில் என்னதான் இருக்கு?

Rating:
4.0/5
Star Cast: மைக்கேல் பி. ஜோர்டன், மைல்ஸ் கீட்டன்
Director: ரியான் கூக்ளர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: தி சப்ஸ்டன்ஸ் (The Substance) எனும் ஹாரர் திரைப்படம் கடந்த ஆண்டு அதிக பிரிவுகளில் நாமினேட் ஆகி ஆஸ்கர் விருது விழாவில் அதிகபட்சமாக 5 ஆஸ்கர் விருதுகளையும் தட்டித் தூக்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் நாமினேஷனையே டாமினேட் செய்திருப்பது ஒரு ஹாரர் திரைப்படம் தான்.

ஏற்கனவே 2 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற சின்னர்ஸ் திரைப்படம் கிராமி விருதுகள் போட்டியிலும் அதிகப்படியான பரிந்துரைகளை பெற்றுள்ள நிலையில், நேற்று இரவு வெளியான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் புதிய வரலாற்று சாதனையையே படைத்துள்ளது.

Sinners Review in Tamil  Why this movie got 16 Nominees at Oscars 2026
Photo Credit:

ஒட்டுமொத்தமாக 16 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சின்னர்ஸ் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள நிலையில், அப்படி இந்த படத்தில் என்னதான் இருக்கு என பார்த்துவிடுவோம் என பார்த்த நிலையில், இதோ உங்களுக்காக விரிவான விமர்சனம்..

சின்னர்ஸ் கதை: க்ரீட், பிளாக் பாந்தர் படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் எழுதி இயக்கி கடந்த ஆண்டு வெளியான படம் தான் சின்னர்ஸ். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பி. ஜோர்டன் ஸ்டாக் மற்றும் ஸ்மோக் என டபுள் ஆக்‌ஷனில் நடித்து அசத்தியுள்ளார். கருப்பு - வெள்ளை இன மக்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்களை இசையுடன் கலந்து பேய் படமாக இயக்குநர் கொடுத்துள்ள நிலையில் தான் இப்படி ஆஸ்கர் வரை இந்த படத்துக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், பல சர்வதேச விருதுகளையும் இந்த படம் வாங்கிக் குவித்துள்ளது.

சரி, படத்தின் கதை என்ன என்பது குறித்து பார்ப்போம், ஒரு வெள்ளைக்கார ஓனரிடம் ஒரு சா மில்லை கொள்ளை, கொலைகளை செய்யத் தயங்காத இரட்டை சகோதரர்களான ஸ்டாக் மற்றும் ஸ்மோக் வாங்குகின்றனர். கருப்பர்களை அடிமையாக மட்டுமே வெள்ளையர்கள் நடத்தி வந்த 1932ம் ஆண்டு மிசிசிபியில் இந்த படம் நடப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Sinners Review in Tamil  Why this movie got 16 Nominees at Oscars 2026
Photo Credit:

நம்ம இன மக்கள் மட்டும் ஆடிப்பாடி கொண்டாட நைட் கிளப் பார் ஒன்றை வாங்கிய இடத்தில் ஸ்டாக் மற்றும் ஸ்மோக் உருவாக்குகின்றனர். அதன் திறப்பு விழாவில் இசையால் அங்கே வருபவர்களை ஆட்டம் போட வைக்க தங்களது உறவினரான சாமுவேலை (மைக்கேல் கீட்டன்) உடன் அழைத்துச் செல்கின்றனர். சூரிய உதயத்தில் பருத்தி தோட்டத்தில் வேலையை முடித்து விட்டு தனது கிட்டாரை தேடி வீட்டுக்குச் செல்ல, அங்கே அது இல்லாத நிலையில், பாதிரியாரான அப்பா ஜபக் கூடத்துக்கு எடுத்துச் சென்றதை அறிந்து அங்கே சென்று அந்த கிட்டாரை வாங்கிக் கொண்டு இவர்களுடன் செல்கிறார். அந்த கிட்டார் தான் பின்னாடி பெரிய சம்பவம் செய்யப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

நைட் கிளப் தொடங்கி சாமி கிட்டார் இசையமைக்க அவனுக்கு ஒரு ஜோடி கிடைக்க சில சில்மிஷங்களும் அரங்கேறுகின்றன. அந்த கிளப்புக்கு திடீரென 3 வெள்ளையர்கள் நாங்களும் உள்ளே வருகிறோம், எங்களிடம் காசு இருக்கு, உங்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்புகிறோம் என சொல்ல, அவர்களை உள்ளே அனுமதிக்காமல் விரட்டி அடிக்கின்றனர்.

உண்மையில் அவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை, ரத்தக் காட்டேரிகள். அன்றிரவு கருப்பர்களின் நைட் கிளப்பை வெள்ளை ரத்தக் காட்டேரிகள், கருப்பினத்தவர்களையும் ரத்தக் காட்டேரிகளாக மாற்றி எப்படி சூறையாடினர். எல்லாம் எதற்காக, ஹீரோ என்ன செய்தார்? கடைசியில் தப்பித்தது யார்? இதன் மூலம் இயக்குநர் சொல்ல வரும் குறியீடு அரசியல் என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: மைக்கேல் பி ஜோர்டன் ஸ்டாக் மற்றும் ஸ்மோக் என 2 வேடங்களில் சரியான வேரியேஷன் காட்டி நடித்திருப்பார். அந்த கிட்டார் வாசிக்கும் சாமியின் நடிப்பு கிளைமேக்ஸில் மிரட்டி விடும். பாடல்கள் மூலம் இந்த வெள்ளை - கருப்பு இன அரசியலை பேய் படமாக கொடுத்து ரியான் கூக்ளர் புதிய புரட்சியையே செய்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

138 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் முதல் 60 நிமிடங்கள் சோதித்து எடுத்து விடும். ஹாரர் படம்னு சொல்லிட்டு பேயே காட்டலையேன்னு தோன்றும். ஆனால், அதன் பின்னர், படத்தில் காட்டப்படும் ஹாரர் காட்சிகள் அதை தாண்டிய அரசியல் கடைசி கிளைமேக்ஸ் முடிந்து போஸ்ட் கிரெடிட்ஸ் வரை கூஸ்பம்ப்ஸ் கொடுத்து விடுகிறது. பெரிதாக நிர்வாணக் காட்சிகள் இல்லை என்றாலும், சில உடலுறவு காட்சிகள் உள்ளன. அதனால், குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

மார்ச் 15ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவில் அதிகபட்சம் இந்த படம் எத்தனை விருதுகளை அள்ளப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X