Siren Review: திலக வர்மனாக தெறிக்கவிட்டாரா ஜெயம் ரவி?.. சைரன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சைரன் 108 திரைப்படம் காலை 9:00 மணிக்கு சிறப்பு காட்சியாக ஆரம்பித்துள்ளது. அதன் அறிவிப்பை சற்றுமுன் ஜெயம்ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். முன்னதாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் சைரன் படம் காலை 10:00 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தது. ஆனால், சில திரையரங்குகளில் 9:00 மணிக்கு படம் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் உள்ள சினிப்ரியா தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தைப் பார்த்து வருகிறார் ஜெயம் ரவி. நேற்று சென்னையில் நடைபெற்ற பிரீமியர் ஷோவை கண்டு ரசித்த சினிமா விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் சைரன் படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.

திலக வர்மனமாக ஜெயம் ரவி: பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் ஆக நடித்த ஜெயம் ரவி தற்போது சைரன் படத்தில் திலக வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்குள் தள்ளப்படும் ஜெயம் ரவி பரோலில் வந்து எப்படி தனது எதிரிகளை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. போலீஸ் அதிகாரியாக ஜெயம்ரவி செய்த குற்றங்களை நிரூபிக்க போராடும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சைரன் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்.

தரமான கிளைமேக்ஸ்: ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி உள்ள சைரன் படத்தின் ஹைலைட்டே படத்தின் கதையை தாண்டி ஸ்க்ரீன் பிளேவில் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் காட்டியுள்ள வித்தை தான். ஜெயம் ரவி சீரியஸான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிக்கலான ஜெயம் ரவி வழக்கை கண்டுபிடிக்க போராடும் விதம் மற்றும் படத்தின் கிளைமேக்ஸ் பக்கா என ஸ்ரீதேவி ஸ்ரீதர் விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

விஸ்வாசம், சர்தார் கதையாசிரியர்: இந்த படத்தை இயக்கிய ஆண்டனி பாக்கியராஜ் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் கார்த்தியின் சர்தார் படத்திற்கு உதவி கதையாசிரியராக இருந்தவர். சைரன் படத்திற்கு அவர் எழுதிய பிரில்லியன்ட்டான ஸ்க்ரீன்பிளே தான் இந்த படத்தை வெற்றிப் படமாக ஆக்கியுள்ளது. 3.5 ரேட்டிங் தருகிறேன் என ரமேஷ் பாலா தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

மதுரை ரசிகர்களுடன் ஜெயம் ரவி: மதுரையில் உள்ள சினி ப்ரியா தியேட்டரில் ஜெயம் ரவி இன்று ரசிகர்களுடன் சைரன் படத்தை பார்த்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சமுத்திரகனி உயர் காவல் அதிகாரியாகவும் அனுபமா பரமேஸ்வரன் ஜெயம் ரவியின் மனைவியாகவும் நடித்துள்ளனர். மதுரைக்கு சென்ற ஜெயம் ரவிக்கு அங்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு வழங்கி உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கீர்த்தி சுரேஷுக்கு பேனர்: சைரன் படத்தில் போலீஸ் அதிகாரியாக காக்கிச் சட்டையில் கலக்கி உள்ள கீர்த்தி சுரேஷுக்கு அவரது ஆர்மியினர் பெரிய பெரிய பேனர்களை எல்லாம் வைத்து தியேட்டர்களில் ஜெயம் ரவியின் கட் அவுட்டுக்கே டஃப் கொடுத்து வருகின்றனர்.

படம் பார்க்கலாம்: ஜெயம் ரவியின் அகிலன், இறைவன் படங்கள் ரசிகர்களை படுத்தி எடுத்த நிலையில், சைரன் படம் ஜெயம் ரவிக்கு சோலோவாக கம்பேக் கொடுத்திருக்கிறது என்கிற பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளன. 1000 ஸ்க்ரீன்களுக்கும் மேல் இன்று வெளியாகி உள்ள இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











