Blue sattai maran: கொஞ்சம் கூட சம்மந்தமே இல்ல.. ஏலியன் பாவம்.. அயலானை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான அயலான் நேற்று ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. இதில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் , யோகி பாபு கருணாகரன், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இத்திரைப்படம் குறித்து ப்ளு சட்டை மாறனின் விமர்சனம் வெளியாகி உள்ளது.
கேஜேஆர் ஸ்டூடியோ தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான், சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இயக்குநர் ரவிக்குமார் ஒட்டுமொத்தமாக சுமார் 6 ஆண்டுகள் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். ஆரம்பத்தில் பட்ஜெட் பிரச்சினை காரணமாக ட்ராப் ஆகும் சூழல் இருந்தாலும், அயலான் மீது நம்பிக்கை வைத்து படத்தை முடிக்க காத்திருந்தார். பின்னர் கிராபிக்ஸ் பணிகளுக்காக பல மாதங்கள் காத்திருந்து அயலான் படத்தை முடித்தார்.

ப்ளு சட்டை மாறன்: இந்நிலையில் இப்படம் குறித்து ப்ளு சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம். இந்த படத்தின் ஹீரோவான சிவகார்த்திகேயன் இயற்கை ஆர்வலராக இருக்கிறார். இவர் இயற்கை விவசாயம் செய்து அதில் தோல்வி அடைந்துவிட்டு, வேலை தேடி சென்னைக்கு வருகிறார். இந்த நேரத்தில், பூமியில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் பூமிக்கு எதிராக பல வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதால், அதை தடுக்க வேற்றுகிரகத்தில் இருந்து ஏலியன் ஒன்று பூமிக்கு வருகிறது. அந்த ஏலியனுடன் சிவகார்த்திகேயனுடன் நட்பாக பழக இருவரும் சேர்ந்து கொண்டு பூமிக்கு வர உள்ள ஆபத்தை தடுத்தாங்களா? இல்லையா? என்பதுதான் அயலான் படத்தோட கதை.
ரசிக்கும்படி எதுவும் இல்லை: இந்த படத்தை நாம பார்க்க போவதற்கு முன்பே இது குழந்தைகளுக்கான படம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு போகவேண்டும். ஆனால், குழந்தை ரசிக்கும்படியே இல்லை, குழந்தைகளை மகிழ்விக்கும் வகையிலோ எந்த ஒரு பாட்டோ, நகைச்சுவையோ இல்லை என்பது தான் மிகப்பெரிய வேதனை. உதாரணத்திற்கு மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் ரோபோ ஒன்று நடித்திருக்கும், அதில் அந்த ரோபோ கேட்கும் கேள்வி நகைச்சுவையாக இருக்கும் ஒரு கட்டத்தில், அந்த ரோபோவிற்கு எதுவும் ஆகக்கூடாது என்ற பதற்றம் நமக்கே வந்துவிடும். ஆனால், அயலான் படத்தில் அந்த ஏலியானைப் பார்த்து எந்தவிதமான பதற்றமும் நமக்கு வரவில்லை.
மிகப்பெரிய மைனஸ்: இதில் சிவகார்த்திகேயனின் வாழ்க்கை, காதல், படத்தில் வரும் வில்லன் என எதுவுமே சுவாரசியமா இல்லை. இந்த படத்தினுடைய மிகப்பெரிய மைனஸ் ஏஆர் ரஹ்மானுடைய இசைதான். படத்தில் வரும் ஒரு பாட்டுக்கூட மனதில் ஒட்டவே இல்லை. ஹீரோ, வில்லன், ஏலியன் என அனைவரும் தமிழ் பேசும் போது ஏஆர் ரஹ்மான் மட்டும் இங்கிலீசில் பாட்டு போட்டு இருக்கிறார். இப்படி எதுவுமே மனதில் ஒன்னுமே ஒட்டவில்லை.60
பூமிக்கு சம்மந்தமே இல்ல: மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கு என்றால், இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரமே ஏலியன் தான். ஆனால், இந்த ஏலியனுக்கும் நமக்கும் ஓட்டவே இல்லை. வழக்கமாக நிலாவிற்கு போய்ட்டு வருபவர்களை மூன்று நாளைக்கு தனிமைப்படுத்தி வைப்பார்கள். ஏன் என்றால் அவர்கள் மேல பூமிக்கு சம்மந்தமே இல்லாத பல பார்டிகல்ஸ் கதிர்கள் இருக்கும், அதை ஏலியன் பார்டிகல்ஸ் என்று சொல்லுவார்கள். அப்படித்தான் பூமிக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கு இந்த படம் என்று ப்ளு சட்டை மாறன் அயலான் படத்தை பங்கமாக கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











