twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Don Review: சிவகார்த்திகேயன் டான் ஆக பாஸ் ஆகிவிட்டாரா? இல்லை ஃபெயிலா? டான் விமர்சனம் இதோ!

    |

    Rating:
    3.5/5

    சென்னை: அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படம் வெளியாகி உள்ளது.

    முன்னணி ஹீரோக்கள் வரிசைக்கு முன்னேறி விட்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகாலை 4 மணிக்கே ஸ்பெஷல் ஷோ, FDFS கொண்டாட்டம் என தியேட்டர்கள் களைகட்டி உள்ளன.

    அப்பாவின் டார்ச்சரால் இன்ஜினியரிங் சேரும் சிவகார்த்திகேயன் கடைசியில் என்ன ஆனார் என்கிற கதையை செம ஜாலியாகவும் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை ரசிகர்களின் கண் முன் நிறுத்தி சொல்லி இருக்கும் இந்த டான் திரைப்படம் பாஸ் ஆனதா? அல்லது ஃபெயில் ஆனதா? என்கிற முழு விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

    நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி

    இசை: அனிருத்

    இயக்கம்: சிபி சக்கரவர்த்தி

    பக்காவாக ரிலீசுக்கு தயாரான டான்... சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட் பத்தி பாக்கலாமா!பக்காவாக ரிலீசுக்கு தயாரான டான்... சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட் பத்தி பாக்கலாமா!

    சிவகார்த்திகேயனின் டான்

    சிவகார்த்திகேயனின் டான்

    டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ள சூழலில் அந்த மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் மேலும், அதிகரிக்க வேண்டும் என்பதில் நல்ல தெளிவாகவே சிவகார்த்திகேயன் உள்ளார் என்பதை டான் படத்தை பார்த்தாலே தெரிகிறது. ஆக்‌ஷன் டானாக இப்போதைக்கு நடித்தால் செட் ஆகாது என்பதை உணர்ந்து கொண்டு தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தையும் கதைகளையும் அழகாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    இயக்குநரின் கதையா

    இயக்குநரின் கதையா

    இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் வாழ்க்கை வரலாறு தான் இந்த டான் படத்தின் கதையாகவே இருக்கும் என தோன்றுகிறது. ஹீரோ சிவகார்த்திகேயனுக்கும் தனது 'சக்கரவர்த்தி' பெயரையே சூட்டி உள்ளார். தன்னுடைய அப்பா கொடுத்த டார்ச்சர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான் செய்த அல்லது செய்ய நினைத்த சேட்டைகளின் தொகுப்பாகவே டான் திரைப்படத்தை அவர் உருவாக்கி உள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    டார்ச்சர் செய்யும் சமுத்திரகனி

    டார்ச்சர் செய்யும் சமுத்திரகனி

    கிராமத்தில் இருக்கும் அப்பா சமுத்திரகனிக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற ஆசை இருந்த நிலையில், ஆண் குழந்தையாக பிறந்து சிவகார்த்திகேயன் ஏமாற்ற அப்போதிருந்தே மகன் மேல் பாசம் இல்லாமல் வெறுப்பு காட்டும் தந்தையாக வளர்ப்பதும் அவர் ஏன் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டார் என்கிற காரணமும் பாராட்டுக்களையும் கைதட்டல்களையும் ரசிகர்கள் மத்தியில் அள்ளுகிறது.

    Recommended Video

    Don Movie Review | Yessa ? Bussa ? | டான் | Sivakarthikeyan | S. J. Suryah | Filmibeat Tamil
    சிவகார்த்திகேயன் சிக்ஸர்

    சிவகார்த்திகேயன் சிக்ஸர்

    சிவகார்த்திகேயனின் பள்ளி மற்றும் கல்லூரி போர்ஷன்களை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அழகாக படமாக்கி உள்ளார். சிவகார்த்திகேயனை டாக்டர் படத்தில் எந்தளவுக்கு சைலன்ட்டாக நடிக்க வைத்தார்களோ அதில் இருந்து அப்படியே சேஞ்ச் ஆகி அவரை நல்லாவே பேச வைத்து, அவரது காமெடிக்கான ஸ்கோப்பை இயக்குநர் தாராளமாக கொடுத்துள்ளார். பள்ளி பருவத்தில் இருந்தே நாயகி பிரியங்கா மோகன் உடன் காதல் பின்னர் ஒரு சிறிய பிரேக்கப் அதன் பின்னர் மீண்டும் கல்லூரியில் காதல் மலர்வது என ரொமான்டிக் சிவகார்த்திகேயனும் சிக்ஸர் அடித்துள்ளார்.

    கேட் அண்ட் மவுஸ் கேம்

    கேட் அண்ட் மவுஸ் கேம்

    கல்லூரியில் ஸ்ட்ரிக்ட்டான ஆசிரியர் பூமிநாதனாக வரும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் லாஸ்ட் பென்ச் ஸ்டூடன் சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் மோதல்கள் எதார்த்தத்தை மீறினாலும் படத்தை பார்க்க வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்கள் வாத்தியார்களை நினைத்துக் கொண்டு சிரிக்கவும் கைதட்டவும் வைத்து விடுகிறது.

    லாஜிக் இடிக்குதே

    லாஜிக் இடிக்குதே

    ஒரு கட்டத்தில் எஸ்.ஜே. சூர்யாவை கல்லூரியில் இருந்து வெளியேற்ற சிவகார்த்திகேயன் போடும் பிளான் அவருக்கே எப்படி பெரிய ஆபத்தாக வந்து முடிகிறது என்கிற இடத்தில் எல்லாம் இன்ஜினியரிங்கில் ஆர்வம் இல்லாதவர் எப்படி இதையெல்லாம் செய்தார் என்கிற கேள்வியை எழுப்பத்தான் செய்கிறது.

    காமெடி படை

    காமெடி படை

    கல்லூரியில் காமெடி கலாட்டாவிற்கு சிவாங்கி, பால சரவணன், ஆர்ஜே விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் என அனைவரும் ஸ்கோர் செய்கின்றனர். அதே நேரத்தில் கிராமத்தில் தனது நண்பனாக வரும் சூரியுடன் சிவகார்த்திகேயன் செய்யும் அலப்பறைகள் வேற லெவல். அதிலும், ஒரு காட்சியில் சூரியை அப்பாவாக அழைத்து வரும் காட்சியில் காமெடி பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது.

    இதுதான் கதை

    இதுதான் கதை

    சிவகார்த்திகேயன் பிளான் பண்ணி வெளியே அனுப்பிய எஸ்.ஜே. சூர்யா மீண்டும் அதே பள்ளிக்கு பிரின்ஸிபாலாக வந்து அவரை எப்படி பழி வாங்க துடிக்கிறார் என்பதும், தான் என்ன ஆக வேண்டும் என்கிற கேள்வியுடன் வளரும் சிவகார்த்திகேயன் கடைசியில் எப்படி இயக்குநர் ஆனார் என்பதுமே டான் திரைப்படத்தின் கதை.

    இதை முழுக்க முழுக்க காமெடி மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களால் மாணவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளையும் கொஞ்சம் தொட்டுக் கொண்டு இயக்குநர் டான் படத்தை உருவாக்கி உள்ளார்.

    பிளஸ்

    பிளஸ்

    படத்தின் பிளஸ் என்று பார்த்தால் இயக்குநரின் மேக்கிங் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பு பெரிய பலமாக உள்ளது. தியேட்டர்களில் செம ஜாலியாக இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள். அனிருத்தின் இசையில் பாடல்கள் எல்லாமே பக்கா.. அதிலும் அந்த பே பாடல் தாஜ்மகாலில் அவ்வளவு அழகாக படமாக்கப்பட்டு இருப்பது கூடுதல் பிளஸ். கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவு, நாகூரான் ராமசந்திரனின் எடிட்டிங் எல்லாமே படத்திற்கு ரிச் வேல்யூவை கொடுத்துள்ளது. ஜலபுல ஜங் பாடலில் நடனத்தில் பின்னி எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

    மைனஸ்

    மைனஸ்

    ஆனால், ஆசிரியர்களுக்கு ரொம்பவே கடுப்பை இந்த படம் கொடுக்கும் என்பது கன்ஃபார்ம். அதிலும் குறிப்பாக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்து அவர்களை தேர்வு செய்வதெல்லாம் ரொம்பவே டூமச். 96 வகையறா படங்கள் பள்ளிகளை நினைவுப்படுத்தும், நண்பன் வகையறா படங்கள் கல்லூரிகளை நினைவுப்படுத்தும் சிவகார்த்திகேயனின் இந்த டான் படத்தில் இரண்டையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். ராஜ்குமார் ஹிரானியின் பாதிப்பு தெளிவாகவே தெரிகிறது. கல்லூரிகளில் இப்படியெல்லாம் நடக்குமா? என்கிற கேள்விகள் படத்திற்கு மைனஸ் ஆகாமல் இருந்தால் நல்லது தான். மொத்தத்தில் இந்த டான் ரசிகர்கள் மார்க் போட்டு பாஸ் ஆகிவிட்டான்!

    பெரியவங்க வாக்கு பெருமாள் வாக்கு

    அப்பா சமுத்திரகனியின் போர்ஷன் இரண்டாம் பாதியில் ஓவர் எமோஷனலாக வந்து நிற்பது இரண்டாம் பாதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. நண்பன் பிளஸ் விண்ணைத் தாண்டி வருவாயா மிக்ஸிங்காவே டான் பல இடங்களில் தெரிகிறது. டான் படத்தின் மூலம் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்ன சொல்ல வருகிறார் என்றால், அப்பா, அம்மா, ஆசிரியர் கண்டிப்புக்கு பின்னால் ஒரு பெரிய அர்த்தம் இருக்கும். அதை மதித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதை சொல்லத் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

    English summary
    Don Review in Tamil [டான் விமர்சனம்]: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகாத்திகேயன் , பிரியங்கா மோகன் , சிவாங்கி உள்ளிட்டோர் நடித்திருக்கும் டான் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X