உடல் உறுப்புக்காக பெண்களை கடத்தும் “டாக்டர்“ டிரைலர் எப்படி இருக்கு!

சென்னை : சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Recommended Video

Sivakarthikeyan Speech | Naai Sekar Title Issue | Vadivelu | Sathish | Filmibeat Tamil

இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன்,வினய், யோகிபாபு, தீபா, விஜே அர்ச்சனா, அர்ச்சனாவின் மகள் சாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் அக்டோபர் 9ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

டாக்டர்

கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த படம் மூலமாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு. வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

ஹிட் பாடல்கள்

ஹிட் பாடல்கள்

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து 'செல்லம்மா செல்லம்மா' பாடல் மற்றும் so baby ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டாக்டர் ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். இதையடுத்து, கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சியை எடுத்து வந்த நிலையில், திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்கில் படம் வெளியாக உள்ளது.

மீண்டும் ஒரு கடத்தல்

மீண்டும் ஒரு கடத்தல்

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதில், நீங்க எல்லாம் சேர்ந்து ஒரு குடும்பமா நடிச்சி குழந்தைகளை கடத்துறீங்களா என்று டிரைலர் தொடங்குகிறது. இது கோலமாவு கோகிலா திரைப்படத்தை நினைவுப்படுத்துகிறது. படமும் அப்படித்தான் இருக்குமோ என்று யோசித்த நேரத்தில்... இது ஆட்களை கடத்தி உடல் உறுப்பை திருடி விற்கும் கடத்தல் குறித்த படம் போல் தெரிகிறது.

எகுறும் எதிர்பார்ப்பு

எகுறும் எதிர்பார்ப்பு

டிரைலரில் யோகிபாபு ஒரு சில காட்சிகளில் வருகிறார். அவர் சிவகார்த்திகேயனுக்கு உதவியாக சில உதவிகளை செய்கிறார் போலிருக்கிறது. இப்படத்தில் வினை மிரட்டி இருக்கிறார். ரத்தம் , கொலை , கடத்தல், சண்டை என டிரைலர் மிரட்டி உள்ளது. காட்சிக்கு காட்சி வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிரைலரை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X