Kurangu Pedal Review: அரண்மனை 4 படத்துக்கு சிக்கல்?.. குரங்கு பெடல் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'குரங்கு பெடல்' திரைப்படம் நாளை அரண்மனை 4 படத்துக்கு போட்டியாக வெளியாகிறது. சமீபத்தில் நடைபெற்ற பிரஸ் ஷோவில் படத்தை பார்த்த பலரும் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் காமெடியனாக இருந்து ஹீரோவான நிலையில், பாடல்களை எழுதுவது, பாடல்களை பாடுவது என தனது திறமைகளை ஒவ்வொன்றாக வெளிக்காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனாக உயர்ந்து எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

Sivakarthikeyan s Kurangu Pedal Twitter Review and Reactions

முதல் படமே ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படம் அந்த படம் வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ் படங்களை தயாரித்தார். இந்நிலையில், அவர் தயாரிப்பில் அடுத்த படமாக 'குரங்கு பெடல்' உருவாகி உள்ள நிலையில், நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தை பார்த்த பலரும் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதன் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

அரண்மனை 4 படத்துடன் கிளாஷ்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி உள்ள குரங்கு பெடல் திரைப்படம் நாளை அரண்மனை 4 மற்றும் சாய் தன்ஷிகா நடித்துள்ள ப்ரூஃப் திரைப்படங்களுடன் போட்டி போட்டு வெளியாகிறது. மதுபானக்கடை படத்தை இயக்கிய கமலக்கண்ணன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் அரண்மனை 4 வெற்றி பெற வாழ்த்துகள். பெரிய பெரிய மரங்கள் இருக்கும் இடத்தில் சிறு பூச்செடிகளும் இருக்கத்தானே செய்யும் என பதில் அளித்துள்ளார்.

Sivakarthikeyan s Kurangu Pedal Twitter Review and Reactions

அப்பாக்கள் பார்க்க வேண்டிய படம்: இந்த திரைப்படம் குழந்தைகளுக்கான திரைப்படம் அல்ல... 1980 மற்றும் 90களில் பிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம் இது 1980 ஆம் ஆண்டு வாழ்க்கையில் திரும்பி பார்க்க செல்லுலாயுடு பதிய வைத்த திரைப்படம் என்றும் சொல்லலாம். உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று.. ஒரு சைக்கிளுக்கு எவ்வளவு அக்கப்போர்...? அப்பா எவ்வளவு கஷ்டங்களை பட்டிருக்கிறார் என்பதை காட்டி பெருமபட்டுக்கொள்ளலாம்" என ஜாக்கி சினிமாஸ் விமர்சகர் ஜாக்கி சேகர் விமர்சித்துள்ளார்.

4 ஸ்டார்: குறைந்த பட்ஜெட்டில் தரமான தமிழ் படமாக இந்த குரங்கு பெடல் வெளியாக உள்ளது. 80கள் மற்றும் 90களில் இருந்த வாழ்க்கையை படம் பிடித்து காட்டியுள்ளனர். காளி வெங்கட் மற்றும் குழந்தைகளின் நடிப்பு அசத்தல். கதை மற்றும் திரைக்கதை சுவாரஸ்யமாக உள்ளது. நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ணலாம் என இந்த நெட்டிசன் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Sivakarthikeyan s Kurangu Pedal Twitter Review and Reactions

முதல் சாதனை: குரங்கு பெடல் அடித்து சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் பசங்களின் முதல் சாதனையே நன்றாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது தான். அந்த காலத்தில் எக்ஸ்ட்ரா 2 சக்கரம் சப்போர்ட்டுக்கு எல்லாம் வைத்துக் கொண்டு சைக்கிள் இருக்காது. ஹைட் எட்டவில்லை என்றாலும் குரங்கு பெடல் அடித்து சைக்கிள் ஓட்டுவார்கள். அதை மையப்படுத்தி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் உருவாக்கப்பட்ட இந்த படத்தை சிவகார்த்திகேயன் தேர்வு செய்து வெளியிடுவது ரொம்பவே மகிழ்ச்சி அளிப்பதாக ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் பதிவிட்டுள்ளார். பிரஸ் ஷோவில் படத்தை பார்த்த பலரும் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், இந்த வாரம் அரண்மனை 4 படத்துக்கு குரங்கு பெடல் படம் செக் வைக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X