twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்!

    அக்கா - தம்பி பாசம், மாமன் - மச்சான் உறவை மையமாக வைத்து இயக்குனர் சசி படைத்திருக்கும் அறுசுவை விருந்து தான் சிவப்பு மஞ்சள் பச்சை.

    |

    Rating:
    3.5/5
    Star Cast: சித்தார்த், ஜி வி பிரகாஷ் குமார், லிஜிமோல் ஜோஸ், காஸ்மீர பர்தேஷி, தீபா ராமானுஜன்
    Director: சசி

    சென்னை: மாமன் - மச்சானுக்கு இடையேயான பகையால் இருதலைக்கொல்லி எறும்பாக தவிக்கும் ஒரு பெண்ணின் நிலையை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம்.

    தாய் தந்தையை இழந்த ஜி.வி.பிரகாஷுக்கும், அவரது அக்கா ராஜிக்கும் (லிஜிமோல் ஜோல்) அத்தை தான் ஒரே ஆதரவு. ஜி.வி.க்கு அக்கா தான் எல்லாமே. தம்பியாக இருந்தாலும் அப்பா ஸ்தானத்தில் இருந்து அக்காவை பார்த்துக்கொள்கிறார். அதேபோல் தான் அக்காவுக்கும். தம்பி தான் உலகமே. தாயாக, தகப்பனாக இருந்து அவரை பார்த்துக்கொள்கிறார்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    ஜி.வி.பிராஷுக்கு அக்காவுக்கு அடுத்தப்படியாக பிடித்த விஷயம் பைக் ரேஸிங். லோக்கல் பசங்களுடன் சேர்ந்து கொண்டு ஊரைச் சுற்றி பைக் ஓட்டி திரிகிறார். அப்படி ஒரு நாள் சென்னையின் பீக் ஹவரில் பைக் ரேஸ் போகும் போது, ஜி.வி.யை துரத்திப் பிடிக்கிறார் டிராபிக் எஸ்.ஐ. சித்தார்த். பிடித்ததோடு மட்டும் விடாமல், ஜி.விக்கு பெண்கள் அணியும் நைட்டியை உடுத்தி தெருவில் இழுத்து செல்கிறார். இந்த வீடியோவை யூடியூபிலும் அப்லோட் செய்து அவமானப்படுத்துகிறார் சித்தார்த்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    இதனால் சித்தார்த் மீது கோபம் கொள்ளும் ஜி.வி., அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என மனதில் சபதம் செய்கிறார். அப்போது தான் நடக்கிறது அந்த டிவிஸ்ட். ஜி.வி.யின் அக்காவை பெண் பார்க்க வருகிறார் சித்தார்த். இருவருக்கும் பிடித்துப்போக 'மயிலாஞ்சி மயிலாஞ்சி மாமன் ஓன் மயிலாஞ்சி' லவ் மூடு ஆரம்பமாகிறது. பைக் ரேஸ் ஓட்டி மாட்டியதை அக்காவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் ஜி.வி. இந்த திருமணத்தை தடுக்க இமாலய பிரயத்தனம் செய்கிறார்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    ஆனால் எதுவும் வேலைக்கு ஆகாமல் போக, கடைசியில் சித்தார்த்தின் கரம் பிடிக்கிறார் லிஜிமோல். அப்போது நடக்கும் களேபரங்களால் அக்கா - தம்பி உறவு அறுந்து போகிறது. மாமனும் மச்சானும் ஜென்ம விரோதிகளைப் போல் மோதிக்கொள்கிறார்கள். இதனால் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கிறார் அக்கா. இவர்கள் மூவருக்குள் நடக்கும் சண்டையும், உணர்ச்சிமிகு பாசப் போராட்டமும் தான் மீதிப்படம்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    பிச்சைக்காரன் படத்தை அடுத்து சசி இயக்கியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த பேரை கேட்டதும் ஏதோ டிராபிக் ரூல்ஸ் பற்றி பாடம் நடத்தப் போகிறார் என நினைத்தால், மனித உணர்வுகளை வைத்து கண்ணாமூச்சி ஆடியிருக்கிறார். பல ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு அக்கா - தம்பி, மாமன் - மச்சான் பாசத்தை வைத்து வந்திருக்கும் படம் என்பதாலேயே படத்துடன் ஈஸியாக இணைந்துவிட முடிகிறுது.

    அக்கா - தம்பி பாசம், மாமன் - மச்சான் சண்டை, பைக் ரேஸ், இருவேறுவிதமான காதல்கள், போலீஸ் ஆக்ஷன், முரட்டு வில்லன் என ஒரே படத்தில் பல விஷயங்களை கோர்த்து சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறார் சசி. சிறப்பான திரைக்கதை அமைத்து, ஆடியன்சை போராகவிடாமல் அழகாக கதையை நகர்த்தி இருக்கிறார்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    வருங்கால மனைவியின் போன் நம்பரை 'மை கன்ட்ரோல் ரூம்' போனில் பதிவது, ஜி.வி.பிரகாஷின் ஜோடி காஷ்மீரா ஸ்டைலாக நடந்து வந்து சில்லரை வாங்குவது, அக்காவுக்கும் தம்பிக்குமான குழந்தைப் பருவக் காட்சிகள், அவர்கள் இருவரும் கை சூப்பும் போட்டோ பிரேம், சென்னையை அலறவிடும் பைக் ரேஸ், சிசிடிவிக்கு பதில் கோக் டின்னை செட் செய்து வைத்திருப்பது என படத்தில் ரசித்து லயிக்க பல விஷயங்கள் உள்ளன.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    குறிப்பாக அந்த அத்தை கேரக்டர் அத்தனை சூப்பர். கைதட்டிக் கொண்டே இருக்கலாம். 'அன்பு எனும் பேரில் பெண்கள் மீது ஆண்கள் அதிகாரம் தான் செலுத்துறோம்', 'பூன பீர் குடிக்க ஆரம்பிச்சுடுச்சு' என வசனங்களிலும் 'நச்' என ஸ்கோர் செய்கிறார் சசி. ஆண்களின் உடைகளை பெண்கள் அணியும் போது அவர்களுக்கு ஏற்படும் உணர்வையும், அதே அவர்களின் உடையை ஆண்கள் அணிவது அசிங்கம் என நினைக்கும் மனநிலையையும் எடுத்துச் சொல்லி சிந்தனை பொத்தானை தட்டிவிடுகிறார்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    படத்தில் எமோஷன்ஸ் சூப்பர். நிறைய எமோஷன் இருந்தாலும், அளவை தாண்டி போகாமல் இருப்பதால் ரத்தக் கண்ணீர் வடிக்காமல் பார்க்க முடிகிறது. எமோஷன்ஸை அள்ளிக் கொட்டாமல், அளவாக தெளித்து முறுகலான நெய் ரோஸ்ட் போல் படத்தை டேஸ்டாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் கடைசியில் பைக் ரேஸ், முரட்டு வில்லன் என சினிமாதனத்தைக்கூட்டி காமெடியாக்கிட்டீங்களே சசி. 'இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால் திரைக்கதையில் வேறு என்ன தான் செய்ய முடியும் ', என 23 ஆம் புலிகேசி படத்தில் வி.எஸ்.ராகவன் கேட்பது போலாகிவிடுகிறது க்ளைமாக்ஸ்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    சித்தார்த், ஜி.வி., லிஜிமோல் இடையே ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு சண்டையே நடக்கிறது. யார் அதிகம் ஸ்கோர் செய்வது என போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். கடைசியில் அக்கா லிஜிமோல்தான் அதிக அப்பாஸ் அள்ளுகிறார். மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு மீண்டும் சூப்பர் வரவு. மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் பார்த்த லிஜியா இது என வியக்கும் அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மிடுக்கான போலீஸ் அதிகாரி, அன்பான கணவன், மெச்சூர்டான லவ்வர், மாஸ் காட்டும் மாமா என வெரைட்டியாக கலக்கியிருக்கிறார் சித்தார்த். செம ப்ரோ. பாசமான தம்பி, கோபக்கார இளைஞன், பைக் ரேஸர், க்யூட்டான லவ்வர் என ஜி.வி.யும் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ள காஷ்மிராவும் சூப்பர் தான்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    இவர்கள் எல்லோரையும் விட அதிகமாக கவர்வது அத்தை கேரக்டர் தான். சின்ன சின்ன டயலாக்குகளில் சடாலென சிரிக்கவும், படாலென அழவும் வைத்து விடுகிறார். சித்தார்த்தும், ஜி.வி.யும் க்ளைமாக்சில் சேர வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட பொது எதிரி மதுசூதனன். தனது பாத்திரம் உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்.

    சித்து குமார் இசையில் 'மயிலாஞ்சி மயிலாஞ்சி' கொஞ்சி குலாவுகிறது. 'ராக்காச்சி ரங்கம்மா' செம பீட்டு. இந்த சிச்சுவேஷனுக்கு இந்த மியூசிக் தான் என டெம்ப்லேட்டாக உள்ளது பின்னணி இசை. பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு எமோஷன்களை அழகாகவும், பைக் ரேஸிங்கை பரபரப்பாகவும் பதிவுசெய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் போர்ஷனை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களையும் அளவாக வைத்து, படத்தை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் எடிட்டர் சான் லோகேஷ்.

    Sivapu manjal pachai review: A sentimental film with lots of emotions

    அண்ணன் - தங்கச்சி, அம்மா - மகன் செண்டிமென்ட், அக்கா - தம்பி பாசம், மாமன் - மச்சான் உறவு போன்றவைகளை வைத்து பாசமலர் காலத்தில் இருந்து படங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த படத்தின் நாட் கூட ரன் படத்தில் ரகுவரன் - மாதவன் இடையான உறவு தான். ஆனால் அதில் நிறைய கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து அரைத்த மாவையே தான் அறைத்திருக்கிறார் சசி. ஆனால் குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய படங்கள் அரிதாகிவிட்ட இந்த சூழ்நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சைக்கு நிச்சயம் கிரீன் சிக்னல் கொடுத்து தான் ஆக வேண்டும்.

    English summary
    The tamil film Sivapu Manjal Pachai starring G.V.Prakash, Siddharth, Lijimol Jose, Kashmira Pardheshi in the lead roles is a family bonding sentimental movie with lots of emotions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X