Bommai Twitter Review: எஸ்.ஜே. சூர்யாவின் ‘பொம்மை’ எப்படி இருக்கு.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: மொழி, அபியும் நானும், பயணம் உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள பொம்மை படம் பல தடைகளை கடந்து இன்று வெளியாகி உள்ளது.

எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தை தயாரித்து நடித்துள்ளார். மான்ஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே. சூர்யாவுடன் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஜோடிப் போட்டு நடித்துள்ளார். சாந்தினி தமிழரசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

SJ Suryas Bommai Twitter Review and Reactions in Tamil

எஸ்.ஜே. சூர்யாவின் கண்களுக்கு மட்டும் ஒரு பொம்மை பெண்ணாக (பிரியா பவானி சங்கர்) தெரியும் வித்தியாசமான படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் படம் பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஒன்லி ஃபார் மை கிங்: பொம்மை படத்தை என் ராஜா யுவன் சங்கர் ராஜாவுக்காகவும் எஸ்.ஜே. சூர்யாவுக்காக மட்டும் தான் பார்க்கிறேன். என்ன பர்ஃபார்மன்ஸ், என்ன பிஜிஎம், படம் வேறலெவல் அனுபவத்தை தரும் மிஸ் பண்ணாம பாருங்க என இந்த ரசிகர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

SJ Suryas Bommai Twitter Review and Reactions in Tamil

சைல்டிஷா இருக்கு: பாதி படம் பார்த்துட்டேன். இதுவரை ஓகே தான். சில வசனங்கள் எல்லாம் குழந்தைத்தனமா இருக்கு.. இரண்டாம் பாதி தான் படத்தை காப்பாற்ற வேண்டும் என இந்த ரசிகர் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

மதன் கார்கி ட்வீட்: "ஒரு பொம்மையின் மீதொருவன் காதல் கொண்டால்... அக்காதலை நோய் எனவே ஊரும் கண்டால்... #பொம்மை இன்றுமுதல் திரையரங்கில்" என கவிதையாகவே படத்தின் கதையை பாடலாசிரியர் மதன் கார்கி பதிவிட்டுள்ளார்.

SJ Suryas Bommai Twitter Review and Reactions in Tamil

ரொம்ப ஆவரேஜ்: யூகிக்கக் கூடிய கதையை எடுத்துக் கொண்டு அதில், எஸ்.ஜே. சூர்யாவின் மகத்தான நடிப்பை இயக்குநர் ராதா மோகன் டோட்டலாக வேஸ்ட் பண்ணி விட்டார். ரொம்ப ஆவரேஜான படம் இது என இந்த ரசிகர் 2.25 ரேட்டிங் கொடுத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொம்மையோடு வாழலாம் போல: "மொத்த படமும் குழந்தை போல நம்மை அறியாமல் ரசிக்கவே வைக்கிறது... பொம்மையொடு ( priya_Bshankar ) வாழலாம் போல.." என இந்த ரசிகர் படத்தை பாராட்டி உள்ளார்.

SJ Suryas Bommai Twitter Review and Reactions in Tamil

எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பொம்மை படத்தில் பலரும் பாராட்டி உள்ளனர். மேலும், அவரது கண்ணுக்கு மட்டுமே பெண்ணாக தெரியும் பிரியா பவானி சங்கர் பொம்மையாகவே வாழ்ந்துள்ளார் என பலரும் படத்தின் பர்ஃபார்மன்ஸ் சூப்பர் என்றும் திரைக்கதை அதற்கு ஏற்ற அளவுக்கு வலுவாக இல்லாதது தான் பெரிய குறை என கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X