Soodhu Kavvum 2 Review: சூது கவ்வும் 2 விமர்சனம்.. என்ன கண்ட இடத்துல கவ்வுதே.. முடியலடா சாமி!

ரேட்டிங்:

Rating:
2.0/5

நடிகர்கள்: மிர்ச்சி சிவா, கருணாகரன்
இசை: எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
இயக்கம்: அர்ஜுன் எஸ்.ஜே

சென்னை: இந்த ஆண்டு ஏகப்பட்ட பார்ட் 2 படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களை சோதித்த நிலையில், புஷ்பா 2 மிகப்பெரிய வெற்றிப் படமாக வசூலில் வேட்டையாடினாலும் முதல் படம் அளவுக்கு ரசிக்கும்படி இல்லை. இந்நிலையில், சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் என்கிற டைட்டிலில் மிர்ச்சி சிவா நடித்துள்ள படம் இன்று வெளியாகி ரசிகர்களை தியேட்டரில் கண்ட இடங்களில் கவ்வி வருகிறது.

அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு இணையாக நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், சந்திரபாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிக்கும்படி இருக்கும். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், கடைசியாக சந்தானம் நடிக்கும் படங்கள் கூட சிரிக்கும்படி இருக்கும்.

soodhu kavvum 2  soodhu kavvum 2 review  mirchi shiva                                     2                                     2

ஆனால், தமிழ்ப்படத்தை தவிர மிர்ச்சி சிவா நடித்து வரும் படங்கள் எல்லாம் முடிஞ்சா சிரிச்சு பார் என சவால் விடும் ரகமாகவே உள்ளன. ஆனாலும், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருவதும் அகில உலக சூப்பர் ஸ்டார் என பட்டம் போட்டுக் கொள்வதும் எல்லாம் எப்படித்தான் என்று தெரியவே இல்லை. சூது கவ்வும் படம் கல்ட் படம் இதுல கழட்டுறதுக்கு ஒண்ணுமே இல்லை என அவரே முதல் விமர்சனத்தைக் கொடுத்த நிலையில், படமும் அதே போலத்தான் மரண மொக்கையாக உள்ளது..

சூது கவ்வும் 2 கதை: முதல் பாகத்தில் எம்.எஸ். பாஸ்கரனின் மகனாக வந்த கருணாகரன் இந்த பாகத்தில் நிதியமைச்சராகவே ஆகிவிடுகிறார். ஏகப்பட்ட ஊழல் செய்து வரும் அவரை மிர்ச்சி சிவா மற்றும் அவரது கடத்தல் கேங் திட்டம் போட்டு கடத்துகிறது. விஜய் சேதுபதியை போலவே இவரும் காமெடி கிட்னாப்பிங் கிங்காக வருகிறார். ஆனால், காமெடி தான் வரவில்லை. மிர்ச்சி சிவா எதற்காக நிதியமைச்சரை கடத்துகிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: இயக்குநர் நலன் குமாரசாமி இல்லை, ஹீரோ விஜய் சேதுபதி இல்லை, குறிப்பாக ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி இல்லை என்றதுமே படம் அடிவாங்கும் என எதிர்பார்த்தது தான். மிர்ச்சி சிவா செல்ஃப் ட்ரோல் செய்து வந்த நிலையில், தன்னடக்கத்துடன் பேசுகிறார். ஒருவேளை படம் நல்லா இருக்குமோ என நம்பிப்போய் படத்தை ரசிகர்கள் பார்த்தால், அவருடைய பேச்சைக் கேட்டுவிட்டு தம்பி அந்தப் பக்கம் போகாதே என்றே இருந்திருக்கலாம். முதல் பாகத்தை ஸ்பூஃப் செய்து குறைந்த பட்ஜெட்டில் எந்தவொரு மெனக்கெடலும் உழைப்பும் இல்லாமல் ஒரு உப்புமா படமாகத்தான் சூது கவ்வும் 2வை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.

பிளஸ்: ஒரு சில இடங்களில் சம்பிரதாயத்துக்கு சிரிப்பதை தவிர படத்தில் பெரியதாக பிளஸ் இல்லை. சில அரசியல் நய்யாண்டி வசனங்கள் கைகொடுக்கின்றன. மிர்ச்சி சிவாவை தாண்டி கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி, ஹரிஷா உள்ளிட்ட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மைனஸ்: படம் மொத்தமே மைனஸ் ஆகத்தான் உள்ளது. மிர்ச்சி சிவா நடித்த மற்ற படங்கள் கூட கொஞ்சம் ரசிகர்களை பார்க்க வைக்கும். ஆனால், இந்த படம் அந்த வேலையையும் பெரிதாக பார்க்கவில்லை. ஜாலியாக நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு தியேட்டரில் சீன் பை சீன் ட்ரோல் செய்ய ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் தாராளமாக போய் பாருங்கள்.. அடுத்து வரப்போகும் விடுதலை 2 படமாவது ரசிகர்களை கவருமா என்பதை அடுத்த வாரம் தெரிந்துக் கொள்வோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X