twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Soorarai Pottru Review: அசத்தும் சூர்யா.. அள்ளும் அபர்ணா.. இது மாறாவின் பெருங்கனவு!

    By
    |

    Rating:
    3.5/5
    Star Cast: சூர்யா சிவகுமார், அபர்ணா பாலமுரளி, விவேக் பிரஷன்னா, அர்ஜுனன், அச்யுத் குமார்
    Director: சுதா கொங்கர பிரசாத்

    உயரப் பறக்கிற விமானத்தில் சாமானியனும் செல்ல வேண்டும் என்று நினைக்கிற ஒருவரின் கனவும் அதற்கானப் போராட்டமும்தான் சூரரைப் போற்று!

    Recommended Video

    Soorarai Pottru Review | 'Equally Balanced' Surya • Sudha Kongara

    முன்னாள் ஏர்போர்ஸ் வீரரான சோழவந்தான் சூர்யாவுக்கு விமான நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது ஆசை. அதன் மூலம் எளிய மக்களையும் பறக்க வைக்க நினைக்கிறார். தன் ஆசைக்கு, நண்பர்களையும் சேர்த்துகொள்கிறார்.

    முட்டி மோதுகிறது

    முட்டி மோதுகிறது

    பெரிய மனிதர்களின் பிசினஸில் சாதாரண ஒருவனின் முயற்சி முட்டி மோதுகிறது. அதிகார பலங்களின் முன்னே அவருடைய ஒவ்வொரு செயலும் தவிடு பொடியாக, இறுதியில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான், படம். இடையில் காதல், கல்யாணம், குழந்தை, அப்பா, அம்மா சென்டிமென்ட் என வழக்கமான ஏரியாவும் இருக்கிறது.

    எதிர்பார்ப்பு நியாயம்

    எதிர்பார்ப்பு நியாயம்

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். அந்த எதிர்பார்ப்பு நியாயம்தான் என்பதை சொல்கிறது, படத்தின் ஒவ்வொரு பிரேமும். அதற்காகவே சொல்லலாம் சூர்யாவுக்கும் சுதா கொங்கரா டீமுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகளை.

    அடிதடி தப்புன்னா

    அடிதடி தப்புன்னா

    நெடுமாறன் ராஜாங்கம் என்கிற மாறாவாக சூர்யா, தான் தேர்ந்த நடிகன் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். அடிதடி தப்புன்னா எதுக்கு அடிச்சீங்க? என்று அப்பாவிடம் காட்டும் கோபம், தான் விரும்புகிற விமான நிறுவன அதிபருடைய வேறொரு முகம் தெரியும்போது கொள்ளும் ஆவேசம், ஒவ்வொரு முயற்சியிலும் தோல்விகளை எதிர்கொள்ளும்போது துடிக்கும் தவிப்பு, காதலியிடம் காட்டும் அந்த நெளிவு, அவரே மனைவியானதும் மனம் தொடிந்து கடன் கேட்கும் சோகம், தடைகள் தாண்டி விமானம் பறக்கும் போது அந்த ஆனந்தம் என அந்த கேரக்டருக்கான மெனக்கெடலும் நடிப்பும் ஆசம் சூர்யா!

    நெகிழ வைக்கிறார்

    நெகிழ வைக்கிறார்

    மரணப் படுக்கையில் இருக்கும் அப்பாவை பார்க்கச் செல்லும்போது, ஏர்போர்ட்டில் உதவிக்கு தவித்துக் கதறும்போதும் கொள்ளி வைக்க முடியாத மகனிடம் எரிந்து விழும் அம்மாவிடம் காலைப் பிடித்துக் கொண்டு கதறும்போதும் நெகிழ வைக்கிறார். சூர்யாவின் மனைவியாக அபர்ணா பாலமுரளி. யார்ரா இந்தப் பொண்ணு என வியக்க வைக்கிறார் நடிப்பில்.

    பார்த்துக்கக் கூடாதா?

    பார்த்துக்கக் கூடாதா?

    மாப்பிள்ளையை ஏன் பிடிக்கலை என்று கேட்கிற குடும்பத்தினரிடம், 20 பேர் என்னை நிராகரிக்கும் போது நீங்க ஏன், இதை அவங்ககிட்ட கேட்கலை? என்று கேட்கிற குசும்பு, ஆண்தான் மனைவியை பார்த்துக்கணுமா? மனைவி பார்த்துக்கக் கூடாதா? என்று கேட்கிற உரிமை, அவருடைய பேக்கரி கனவு, கணவன் துவழும்போது தாங்கும் ஆதரவு என நிறைவு செய்கிறார் அர்பணா.

    எத்தனை சைபர்னே

    எத்தனை சைபர்னே

    அப்பா பூ ராமு, அம்மா ஊர்வசி, கோபக்கார ஏர்போர்ஸ் அதிகாரியாக இருந்து ஆதரவாளராக திரும்பும் மோகன்பாபு, அத்தனை கோடிக்கு எத்தனை சைபர்னே தெரியாது என அப்பாவியாக கேட்கிற கருணாஸ் என்று ஒவ்வொருவருமே தங்கள் கேரக்டரை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

    அப்படியே பொருந்துகிறார்

    அப்படியே பொருந்துகிறார்

    அந்த பெரிய மனுஷ தொழிலதிபர் கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறார், இந்தி நடிகர் பரேஸ் ராவல். டீலிங் பேச அழைக்கும் அந்த இன்னொரு விமான அதிபர் யாரென்று சொல்லாவிட்டாலும் அவரது தோற்றம் யார் என்று காண்பித்து விடுகிறது.

    தாராளமாகச் சொல்லலாம்

    தாராளமாகச் சொல்லலாம்

    ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும் பாடல்களும் படத்தின் கதையோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. நிகேத் பொன்னிரெட்டியின் ஒளிப்பதிவு படத்தோடு கைபிடித்து அழைத்துச் செல்கிறது. ஏர்டெக்கான் உரிமையாளரின் பயோபிக்தான் என்றாலும் அதைச் நேர்த்தியாகச் சொன்ன விதத்தில் வெற்றிபெறுகிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சினிமாத்தனங்களும் சிறு தொய்வுகளும் இருந்தாலும் தாராளமாகச் சொல்லலாம், சூரரைப் போற்று என!.

    English summary
    Soorarai Pottru Review- a Young man's airline dream
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X