புல்லரிக்கவைத்த… ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்… எப்படி இருக்கு!
சென்னை : ஸ்பைடர் மேன் சீரிஸின் புதிய படமான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் இன்று இந்தியாவில் வெளியானது.
Recommended Video
இந்த வருடம் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் இந்தப் படத்துக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இளம் ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
டாக்டர் ஆக்டோபஸ்
'Spider man : No way Home' திரைப்படத்தில் ஸ்பைடர்மேன் முந்தைய படங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இந்தப் பாகத்திலும் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் ஆக்டோபஸ் மிரட்டலாக நடித்துள்ளார்.
இன்று ரிலீஸ்
டிசம்பர் 16ந் தேதியான இன்று இந்தியா முழுவதும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பைடர்மேனின் பரம எதிரிகளான ஆக்டோபஸ், சண்ட் மேன், எலக்ட்ரோ, கினீன் காப்ளின், உள்ளிட்ட அனைத்து ஸ்பைடர்மேன் வில்லன்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
டாம் ஹெலன்
எண்ட் கேம் திரைப்படத்தைவிட மிகவும் ஹைப் உள்ள திரைப்படம் தான் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம். ஸ்பைடர்மேன் ரசிகர்களாக இல்லாதவர்களையும் இத்திரைப்படம் கவர்ந்திழுத்துள்ளது. அனைத்து திரைப்படங்களிலும் இளமையான வந்த டாம் ஹாலணுக்கு பெரிய அளவில் ஒரு ரசிகர் பட்டாளத்தை இத்திரைப்படம் உருவாக்கி உள்ளது. அயன் மேன் ஃபேனாக இருந்தவர்கள் கூட இனி டாம் ஹெலன் ரசிகராக மாறுவார்கள்.
காட்சிக்கு காட்சி சர்ப்ரைஸ்
இப்படத்தில் பல டிரைலர்கள் வெளியானதால், இப்படத்தின் மீதான சுவாரசியம் குறைந்துவிடும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், படத்தில் காட்சிக்கு காட்சி சர்ப்ரைஸ் கொடுத்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளனர் படக்குழுவினர்.
கிரீன் காப்ளின்
ஹீரோ வில்லன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்தும் கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, கிரீன் காப்ளின் பயங்கரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் பேசிக்கொண்டே போகலாம். இப்படம் புல்லரிக்க வைத்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும் கூறி இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஸ்பைடர் மேன் உடையில்
5 மொழியில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை இன்று காலை முதலே ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ஸ்பைடர் மேன் உடையில் ஒரு சிறுவன் முதல் காட்சியை பார்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications











