Squid Game 3 Review: ஸ்க்விட் கேம் சீசன் 3 விமர்சனம்.. மனுஷங்க இவ்வளவு கொடூரமானவங்களா?.. வெப்சீரிஸ் எப்படி?

Rating:
3.0/5

சென்னை: நெட்பிளிக்ஸ் ரசிகர்கள் உலகளவில் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்த ஸ்க்விட் கேம் 3வது சீசன் வெளியாகி உள்ளது. எப்படியாவது ஹீரோ லீ ஜுங் ஜே போட்டியில் வெற்றிப் பெற்று விடுவார் என்றும் வில்லன் டீமை கூண்டோடு அழித்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு இந்த 3வது சீசன் என்ன என்ன ட்விஸ்ட்டுகளையும் ஷாக்கிங் மொமண்ட்டுகளையும் கொடுத்துள்ளது என்பது குறித்து இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..

தென் கொரிய வெப்சீரிஸான ஸ்க்விட் கேம் முதல் பாகம் வெளியான போது ஒட்டுமொத்த உலக ஓடிடி ரசிகர்களும் விளையாட்டில் பங்கேற்றால் பணம் கிடைக்குமா? என்றும் பிளேயர்கள் எலிமினேட் என்றால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்பதை கேட்டும் பார்த்தும் ஆச்சர்யத்தில் அந்த வெப்சீரிஸை பார்க்கத் தொடங்கினர்.

Squid Game Season 3 Review in Tamil  Mild Spoilers Ahead
Photo Credit:

ஸ்க்விட் கேம் சீசன் 1ன் முடிவில் 2வது சீசனுக்காக லீடு வைத்த போதே ரசிகர்களுக்கு மேலும், ஆர்வம் அதிகரித்தது. ஆனால், 2வது சீசன் வெளியான போது, பாதியிலேயே நிறுத்தி விட்டு, 3வது சீசனில் தான் அது முழுமையாக முடிவடையும் என்றதும் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகினர். இந்நிலையில், 3வது சீசனாவது ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? அதன் கிளைமேக்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்ததா? இந்த வெப்சீரிஸை பார்க்கலாமா? வேண்டாமா? உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்குமான விடையை இங்கே பார்க்கலாம்.

ஸ்க்விட் கேம் சீசன் 3 கதை: சீசன் 2வின் இறுதியில் ஸ்க்விட் கேம் நிகழ்ச்சியை நடத்தும் மெயின் வில்லனான தி ஃப்ரண்ட் மேன் மற்றும் அந்த போட்டியை ஹோஸ்ட் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த லீ பியூங் ஹுன் ஹீரோவை சுடுவது போல காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த சீசன் தொடக்கத்தில் ஒரு சவப்பெட்டியில் பிளேயர்ஸ் இருக்கும் அறைக்கு போட்டியை நடத்தும் குழுவில் இருக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் எடுத்து வந்த வைக்க, ஹீரோ பிளேயர் 456 சியோங் ஜி ஹுன்னுக்கு உயிர் இருப்பது தெரிய வருகிறது. அவரது காது ஓரத்தில் மட்டுமே ரத்தக் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் பிழைக்கும் அவர் தன்னை ஏன் சாகடிக்கல என வில்லனை பார்த்து கேட்பது போல கேமராவை பார்த்து கேட்கிறார்.

முதல் எபிசோடான நைவ்ஸ் அண்ட் கீஸ் விளையாட்டில் சிகப்பு பந்தை எடுத்த டீமுக்கு கத்தியும் நீல நிற பந்தை எடுத்த டீமுக்கு தப்பிக்க சாவியும் கொடுக்கப்படுகிறது. அதிலிருந்து ஹீரோ தப்பிக்க போன சீசனில் கடைசியில் தோட்டாக்களை எடுத்து வராமல் பயந்து நடுங்கியவனை கொல்லும் காட்சியிலேயே ரசிகர்கள் ஷாக் ஆகிவிடுகின்றனர். அதே போல போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் காட்சிகளும் அதை கோடீஸ்வரர்கள் ரசித்து பார்க்கும் காட்சியும் மனதை ரொம்பவே உலுக்குகின்றன.

இதற்கு இடையே பிளேயர் 222வுக்கு குழந்தை வேறு பிறந்து விடுகிறது. அந்த குழந்தையுடன் அவர் தப்பித்தாரா? அடுத்த அடுத்த போட்டிகளில் ஹீரோ மற்றவர்களை சாகவிடாமல் தடுத்தாரா? அல்லது அவர் உயிர் தப்பிக்க மற்றவர்களை கொன்று குவித்தாரா என ஏகப்பட்ட பரபரப்பான காட்சிகளுடன் ரொம்பவே வயலன்ஸ் நிறைந்த காட்சிகளுடன் இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

Squid Game Season 3 Review in Tamil  Mild Spoilers Ahead
Photo Credit:

மனுஷங்க இவ்வளவு கொடூரமானவங்களா?: தாயே மகனை கொல்லும் கட்டாயம், பெற்ற குழந்தையை பலி கொடுக்கும் தந்தை என இப்படியெல்லாம் மனுஷங்க இருப்பாங்களா என்கிற கேள்வியையும் இதை விட கொடூரமானவர்களாக மனிதர்களை பணப்பேய் மாற்றி வருகிறது என்கிற உண்மையை முகத்தில் அறையும் விதத்திலேயே இப்படியொரு வெப்சீரிஸை இயக்குநர் Hwang Dong-hyuk இயக்கியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. பணத்துக்காக சக மனிதனை கொல்ல நினைக்கும் ராட்சதர்களும், அதை பார்த்து ஆனந்தமாக சிரிக்கும் பணக்கார கோழைகள் குறித்தும் படமாக்கிய விதம் அருமை.

பார்க்கலாமா? வேண்டாமா?: தமிழ் டப்பிங் எல்லாம் தரமாக இருந்தாலும் அதிகப்படியான ஆபாச வசனங்கள் இந்த சீசன் முழுக்கவே நிறைந்து காணப்படுகின்றன. அதை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஓடிடியில் சென்சார் இல்லாத நிலையில், இன்னமும் மோசமான காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும் என தெரிகிறது. குடும்பத்துடனோ குறிப்பாக குழந்தைகளுடனோ இந்த வெப்சீரிஸை பார்ப்பதை தவிர்த்துவிடுவது நல்லது. 18 வயதுக்கு வந்தவர்கள் இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். "Knives and Keys", "The Starry Night", "It's Not Your Fault", "222", "Circle, Triangle , Square", "Humans are.." என 6 எபிசோடுகளும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தாலும், கிளைமேக்ஸ் காட்சி நிச்சயம் ரசிகர்களை எந்தளவுக்கு கவரும் என்பது கேள்விக்குறிதான். தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரையில், கிளைமேக்ஸை ரசிகர்களை மனதில் கொண்டு இன்னமும் சிறப்பாக செதுக்கியிருக்கலாம். கடைசியாக ஹீரோ லீ ஜுங் ஜே "மனிதர்கள் ஒன்றும் சூதாட்ட பொருள் அல்ல" என பேசும் வசனம் மிகப்பெரிய பிளஸ். படகை எடுத்துக் கொண்டு அந்த தீவை தேடி கண்டுபிடிக்கிறேன் என அந்த ஆபிசர் டீம் பண்ணது எல்லாமே தேவையில்லாத ஆணிகளாகவே மாறிவிட்டன.

மனிதர்கள் மனிதாபிமானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் இப்படி அரக்க குணம் கொண்டு இருக்கக் கூடாது என்பதை எடுத்துக் காட்ட இப்படியொரு வெப்சீரிஸை எடுத்துள்ள நோக்கத்திற்காக ஒருமுறை இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். இதிலும், விளையாட்டு காட்சிகள் எல்லாம் ரொம்பவே த்ரில்லாக படமாக்கப்பட்டுள்ளன. அதிலும், அந்த பாலத்தில் நடந்துக் கொண்டே கயிறை தாண்டும் விளையாட்டு தரமான சம்பவம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X