twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    RRR Review: ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

    |

    சென்னை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி தியேட்டர்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

    Recommended Video

    RRR Review | ரெண்டு பேறும் தாறு மாறு performance | Ram Charan | NTR | SS Rajamouli

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி, ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு மக்கள் ட்விட்டரில் என்ன விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் என்பதை இங்கே காண்போம்..

    ஆர்ஆர்ஆர் ரிலீஸ்

    ஆர்ஆர்ஆர் ரிலீஸ்

    சுமார் 2.5 ஆண்டுகளாக காத்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25ம் தேதியான இன்று திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் வானவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க FDFS கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்தவர்கள் அந்த படம் எப்படி இருக்கிறது என தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    3 மணி நேரம் போனதே தெரியல

    3 மணி நேரம் போனதே தெரியல

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள RRR திரைப்படம் தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் என வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள். இவ்வளவு நீளமான படத்தை தியேட்டரில் ரசிகர்கள் முழுவதுமாக என்ஜாய் செய்வார்களா என்கிற கேள்வி எழுந்த நிலையில், 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என்றும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு எலிவேஷன் காட்சி வைக்கப்பட்டு தெறிக்கவிட்டுள்ளார் ராஜமெளலி என கொண்டாடி வருகின்றனர்.

    மாஸ்டர்பீஸ்

    மாஸ்டர்பீஸ்

    டோலிவுட் திரையுலகில் வெளியான படங்களிலேயே இந்த படம் சிறந்த மாஸ்டர்பீஸ் என சொல்லலாம். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ராம் மற்றும் பீமாகவே வாழ்ந்துள்ளனர். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என இந்த ரசிகர் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

    நடிப்பின் கடல்

    நடிப்பின் கடல்

    ஆர்ஆர்ஆர் படம் ஒரு விருது பெறும் மெட்டீரியல் என்றும் ஜூனியர் என்டிஆர் சிங்கம் மாதிரி நடித்துள்ளார். இந்த படத்தில் நீங்கள் தண்ணீர். ஆம், நடிப்பின் கடல் என ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போய் கொண்டாடி வருகின்றனர்.

    செம எமோஷன்

    செம எமோஷன்

    எவ்வளவு பெரிய பிரம்மாண்ட படமாக இருந்தாலும், அதில் ரசிகர்களை தூண்டும் எமோஷன் காட்சிகள் இல்லை என்றால் அந்த படம் தோல்வியை தழுவி விடும். ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் எமோஷன் காட்சிகளில் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கின்றனர். இந்த படம் இந்தியாவின் சிறந்த படம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    பாகுபலியை பீட் பண்ணியதா

    பாகுபலியை பீட் பண்ணியதா

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி படத்தை ஆர்ஆர்ஆர் பீட் பண்ணியதா என்றும் இந்த இரண்டு படத்தில் எந்த படம் சிறந்த படம் என்றும் பெரும் போட்டியே நிலவி வருகிறது. தனித்தனியாக இரு படங்களும் அதன் ஜானருக்குள் சிறந்த படம் என்றும் கூறி வருகின்றனர்.

    யார் நடிப்பு சூப்பர்

    யார் நடிப்பு சூப்பர்

    அதே போல ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் நடிப்பு சிறப்பாக இருக்கா? அல்லது ஜூனியர் என்டிஆர் நடிப்பு சிறப்பாக இருக்கா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அல்லுரி சீதாராம ராஜுலுவாக ராம்சரண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொமரம் பீமாக ஜூனியர் என்டிஆர் தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    நெகட்டிவ் விமர்சனங்கள்

    நெகட்டிவ் விமர்சனங்கள்

    ஒரு முறை பார்க்கலாம். முதல் பாதி சூப்பராக இருக்கு, இரண்டாம் பாதி சொதப்பல். மிருகங்களுடன் ஜூனியர் என்டிஆர் இருக்கும் காட்சிகளில் சிஜி சொதப்பல். பாகுபலி 2ம் பாகம் அளவுக்கு படம் இல்லை என பிரபாஸ் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

    English summary
    RRR Twitter Review in Tamil (ஆர்ஆர்ஆர் ட்விட்டர் விமர்சனம்): SS Rajamouli’s screenplay and direction once again proved he his a Kingmaker in Direction.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X