Story Of Things Review..உயிரற்ற பொருட்கள் பேச ஆரம்பித்தால் என்னவாகும்..ஸ்டோரி ஆஃப் திங்ஸ் விமர்சனம்!

நடிகர்கள் : கௌதமி, ரித்திகா சிங், அதிதி பாலன், சாந்தனு , பரத்
இயக்கம்: ஜார்ஜ் கே ஆண்டனி
ஓடிடி: சோனி லைவ்

Rating:
3.5/5

சென்னை : ஆந்தாலஜி திரைப்படமான 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஜார்ஜ் கே ஆண்டனி இயக்கியுள்ள இந்த படத்தில்,கௌதமி,அதிதி பாலன், சித்திக், சாந்தனு பாக்யராஜ், வினோத் கிஷன், நஜியா, ரோஜூ, ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

Cellular, Weighing Scale, Compressor, Car, Mirror என ஐந்து வித்தியாசமான கதைகளைக் கொண்ட கதையாகும்.

ஸ்டோரி ஆஃப் திங்ஸ்

ஸ்டோரி ஆஃப் திங்ஸ்

நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் நம்மிடம் பேசினால், நம்மை பயமுறுத்தினால், நம் உணர்வுகளை புரிந்து கொண்டால் என்னவாகும் என்பதை இயக்குநர் வித்தியாசமாக சிந்தித்து இயக்கி இருக்கிறார். மனிதனுக்குள் இருக்கும் குற்ற உணர்வு, வருத்தம், குழப்பம், பயம்,பாவம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Weighing Scale

Weighing Scale

ஸ்டோரி ஆஃப் திங்ஸ் ஆந்தாலஜி படத்தின் முதல் கதை 'Weighing Scale' இந்த கதையில் பரத் மற்றும் லிங்கா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். ராம் மற்றும் லிங்கா இருவரும் சினிமாவில் நடிகராக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது, கார் எதிர்பாராத விதமாக ஒருவர் மீது மோத, அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார்.

உணர்ந்தாரா? இல்லையா?

உணர்ந்தாரா? இல்லையா?

இந்த சம்பவத்தை மறந்து விட்டு கொஞ்சம் கூட குற்றஉணர்ச்சியே இல்லாமல் வாழ்ந்து வருகிறார் பரத். ஆனால், லிங்கா தான் செய்த தவறை தினமும் எண்ணி வருந்துகிறார். இறுதியில் பரத் தான் செய்த தவறை உணர்ந்தாரா? இல்லையா? என்பது தான் வெயிட் ஸ்கேல் கதையாகும். இதில் குற்ற உணர்ச்சியும் ஒருவித பாரம் தான் என்பதை கதையில் கூறிய விதம் அழகாக இருந்தது.

செல்லுலார்

செல்லுலார்

"செல்லுலார்" கதையில் கௌதமி, அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். பாபநாசம் படத்திற்கு பிறகு கௌதமி இந்த படத்தில் அம்மாவாக நடித்து அசத்தி உள்ளார். கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்படும் அதிதி பாலனுக்கு சென்னையில் வேலை கிடைக்க, அம்மாவிடம் போராடி அனுமதி வாங்கி சென்னை வருகிறார். கௌதமியும் தினமும் இரவு 10.30 மணிக்கு போன் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகளை சென்னைக்கு அனுப்புகிறார்.

அருமையான கருத்து

அருமையான கருத்து

ஆனால், சென்னை வாழ்க்கை, புதிய நண்பர்கள் அதிதி பாலனை மொத்தமாக மாற்றிவிடுகிறது. இது ஒரு அமானுஷ்ய த்ரில்லர் கதை என்றாலும், உளவியல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் ஒரு பெண் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார் என்பதை இந்த கதையின் கருத்தாக உள்ளது.

Compressor

Compressor

'கம்ப்ரஸர்' ஒரு ஃபேன்டஸி த்ரில்லர் கதையாகும். இதில் ரோஜு மற்றும் ரித்திகா சிங் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். இவர்கள் தங்கள் வீட்டுக்கு செகண்ட் ஹேண்ட் ஏசி வாங்குகின்றனர். ஆனால், ஏசியில் இருந்து வித்தியாசமான ஒலி வருவதையும், ஏசிக்கு பின்னால், ஒரு மர்மம் இருப்பதையும் தெரிந்து கொண்ட ரகு, ஏசியைப்பார்த்து அலறுகிறார். இறுதியில் ரகு அந்த ஏசியை என்ன செய்தார் என்பது தான் கம்ப்ரஸரின் கதையாகும்.

கார்

கார்

மோசமான தந்தையால் மகனுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும், குழந்தை வளர்ப்பின் அவசியம் குறித்து பேசும் படம் தான் கார். அப்பாவை பார்த்து பயந்து நடுக்கும் மகனாக நடித்து இருக்கிறார் சாந்தனு. இதில் பல காட்சிகள் நயன்தாரா நடித்த டோரா படத்தை நினைவு படுத்துகிறது. Cellular, Weighing Scale, Compressor போன்ற கதைகளை வித்தியாசமாக சிந்தித்த இயக்குநர் ஜார்ஜ் கே ஆண்டனி, இந்த கார் படத்தை கோட்டைவிட்டுள்ளார்.

"மிரர்"

"மிரர்" ஸ்டோரி ஆஃப் திங்ஸ் ஆந்தாலஜி படத்தின் கடைசி தொடராகும். கதை தொடங்கும் போது கொஞ்சம் மெதுவாக ஆமை வேகத்தில் நகர்கிறது. இதில் வினோத் கிஷன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். இவர் புதிதாக ஒரு வீட்டிற்கு வாடகைக்கு வர, அங்கு இருக்கும் பழைய கண்ணாடி வினோத் கிஷன அவருடன் அன்பாக பேசி அவரின் மனஅழுத்தத்தை குறைந்து அவனை புது மனிதனாக மாற்றுகிறது. இந்த மிரர் படம் உண்மையில் ரசிக்கும் படி இருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மனித உணர்வுகளை அடிப்படையாக வைத்து 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்தாலஜி படத்தை சோனி லிவ்வில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X