twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுதேசி: யெப்பப்பா... உங்கள் பிரண்ட் யாரையாவது செமையாக வெறுப்பேத்த வேண்டுமா?விஜய்காந்தின் சுதேசி படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பி வையுங்கள்.எம்ஜிஆர் இறந்தபோது ஜானகி அணியுடன் கூட்டணி போட்டார் சிவாஜி கணேசன். அதற்காக ஒரு கட்சியைஅமைத்ததோடு என் நாடு என் மக்கள் என்று ஒரு படத்தையும் எடுத்தார்.தனது அரசியல் பிரச்சாரத்துக்காக டாகுமெண்டரி மாதிரி ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை தியேட்டர்களில்ரிலீஸ் செய்து மக்கள் காசு கொடுத்து அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அந்தப்படம் சிவாஜியின் படங்களிலேயே பெரும் தோல்வி கண்ட படமாக அமைந்தது.அன்று சிவாஜிகணேசன் செய்ததை இன்று கேப்டன் செய்துள்ளார். சுதேசியா? பேரரசுவா? எந்தப் படத்தைமுதலில் ரிலீஸ் செய்வது என்று குழம்பிய கேப்டன் தனது சொந்தப் படமான சுதேசியை ரிலீஸ் செய்துவிட்டார்.(விஜயகாந்த்தின் மச்சான் சுதீப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இது)சும்மாவே ரீல் கணக்கில் வசனம் பேசும் பழக்கத்துக்கு அடிமையான விஜய்காந்த், இந்த தேர்தல்-பிரச்சாரஸ்பெஷல் படத்தில் நின்னா வசனம், எறும்பு கடிச்சா ஒரு வசனம், தண்ணி குடிச்சா ஒரு வசனம், தடுக்கி விழுந்தாவசனம், பொண்ணு பார்க்கப் போனாலும் நீண்ட வசனம் என்று படம் பார்க்க வந்தவர்களை சவட்டி எடுக்கிறார்சவட்டி.தனது கட்சியின் கொள்கைகள், தான் சொல்ல நினைப்பது ஆகியவற்றை வழக்கமான தனது அடிக் குரலில் ஏற்ற,இறக்கத்தோடு, முகத்தை கடுகடுப்பாகவும், புருவத்தை வளைத்து நெளித்தும், ஹெங்... என்று நாக்கையும்உதட்டையும் லெப்ட்-ரைட்டாக குவித்தும் பேசிக் கொண்டே இருக்கிறார், படம் முழுவதும்...படத்தில் ஹீரோ வரும் காட்சிகளைத் தான் அதிகமாக மக்கள் ரசிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தைப்பொறுத்தவரை அய்யய்யோ விஜய்காந்து மறுபடியும் வந்துர்டார்டா என்று தியேட்டரில் கலங்கி நிற்கும்ரசிகர்களை அதிகமாகவே பார்க்க முடிகிறது.அதுவும் பஞ்ச் டயலாக் என்ற பெயரில் டயர் கிழிந்து, டியூப் வெடித்து, படு பஞ்சரான டயலாக்குகளாக அவர்அடுக்கிக் கொண்டே போக, அய்யோ.. அய்யோ என்று சுயமாக நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும்செய்ய முடியவில்லை.முதல்வர், ஆட்சி, அமைச்சர்கள், டாக்டர்கள், நோயாளிகள், ரவுடிகள், பள்ளிக் கூடம், அதிகாரிகள், கல்வி,சுகாதாரம், சிறை, கள்ள ஓட்டு, ஜனநாயகம், அரசு மருத்துவமனைள், காடுகள், நிலம், விவசாயிகள், ஆறுகள், ஏரி,தண்ணீர் பிரச்சனை, பதவி, பணம் என்று சமூகத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளையும் மொத்தமாக ஒருகுண்டாவில் போட்டு கலக்கி வேக வைக்கிறார் விஜய்காந்த்.அந்த வேக்காட்டில் படம் பார்ப்பவர்களும் சேர்ந்து வெந்து போகிறார்கள் வெந்து. முதல் ரீலில் ஆரம்பிக்கும்விஜய்காந்த் படம் முடியும் வரை நிறுத்தாமல் பேசுகிறார்.ஒரு காட்சியில் பெண் பார்க்கப் போகிறார் விஜய்காந்த். லேட்டாக வந்துவிடுகிறார். அவரிடம் என்ன மாப்ளேலேட்டு என்று விவரந்தெரியாமல் ஒருவர் கேட்டுவிடுகிறார்.அதற்கும் ஒரு வசனம் தான் பதில்.நான் லேட்டா வந்து மக்கள காக்க வைக்கவும் மாட்டேன், முன்னாடியே வந்து.. என்று ஆரம்பித்து விஜய்காந்த்பேசி முடிக்கும்போது தியேட்டருக்கு வெளியே நிறைய கூட்டம்..தியேட்டரை விட்டு பாதியில் கிளம்பியவர்கள் கூட்டம் தான்....இப்போது மீண்டும் முதல் வரியைப் படித்துவிட்டு.. பிரண்ட் யாராவது சிக்குகிறாரா என்று பாருங்கள்...ஆசிரியர்கள் டென்சன்:இதற்கிடையே, படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கடுமையாக விமர்சித்து வசனம் வைக்கப்பட்டிருப்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு விஜயகாந்த் மீது வழக்குப் போடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.ஆசிரியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அந்த இரு காட்சிகள்:காட்சி நம்பர் ஒன்: அரசுப் பள்ளிக் கூட ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை தனது வீட்டு வேலைக்காக அனுப்புகிறார். வாத்தியார் வீட்டுக்குப் போனமாணவன், அங்குள்ள மின்விசிறியை துடைக்கிறான். அப்போது கால் தவறி கீழே விழுந்து மரணமடைகிறான்.இதனால் அதிர்ந்து போன ஆசிரியர், தனது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து பிணத்தை சாக்குப் பையில் கட்டி சாக்கடையில் போட்டு விடுகிறார்.போலீஸ் நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து சரி கட்டுகிறார் அந்த ஆசிரியர். இதைபுலனாய்வு அதிகாரியான விஜயகாந்த் கண்டுபிடித்து விடுகிறார். கோர்ட்டில் கொண்டு போய் அந்த ஆசிரியரை நிறுத்துகிறார்.காட்சி நம்பர் டூ: விஜயகாந்த் வீர வசனம் பேசுகிறார் - அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு, அந்தப் பணத்தை வைத்து, தங்களதுபிள்ளைகளை மட்டும் தனியார் கான்வென்ட்களிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் படிக்க வைக்கிறார்கள் அரசு ஆசிரியர்கள் என்கிறார் விஜயகாந்த்.தொப்புளில் பம்பரம் விட்ட விஜய்காந்த்:இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், தமிழ் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஒரு நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டு ஆபாசமாக நடித்த விஜயகாந்த் எப்படி அரசுப் பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தி, அவமானப்படுத்தி பேசலாம்.சுதேசி படத்தில் இடம்பெற்றுள்ள இந்த கீழ்த்தரமான காட்சிகள் மற்றும் வசனங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். விஜயகாந்த்தும், இந்தக்காட்சிகளில் நடித்த மற்றவர்களும் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதொடர்பாக விஜயகாந்த்துக்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.இந்தக் கடிதத்தை மதித்து சுதேசி படத்திலிருந்து இந்தக் காட்சிகளை விஜயகாந்த் நீக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றனர்.

    By Staff
    |

    உங்கள் பிரண்ட் யாரையாவது செமையாக வெறுப்பேத்த வேண்டுமா?

    விஜய்காந்தின் சுதேசி படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பி வையுங்கள்.

    எம்ஜிஆர் இறந்தபோது ஜானகி அணியுடன் கூட்டணி போட்டார் சிவாஜி கணேசன். அதற்காக ஒரு கட்சியைஅமைத்ததோடு என் நாடு என் மக்கள் என்று ஒரு படத்தையும் எடுத்தார்.

    தனது அரசியல் பிரச்சாரத்துக்காக டாகுமெண்டரி மாதிரி ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை தியேட்டர்களில்ரிலீஸ் செய்து மக்கள் காசு கொடுத்து அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அந்தப்படம் சிவாஜியின் படங்களிலேயே பெரும் தோல்வி கண்ட படமாக அமைந்தது.

    அன்று சிவாஜிகணேசன் செய்ததை இன்று கேப்டன் செய்துள்ளார். சுதேசியா? பேரரசுவா? எந்தப் படத்தைமுதலில் ரிலீஸ் செய்வது என்று குழம்பிய கேப்டன் தனது சொந்தப் படமான சுதேசியை ரிலீஸ் செய்துவிட்டார்.(விஜயகாந்த்தின் மச்சான் சுதீப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இது)


    சும்மாவே ரீல் கணக்கில் வசனம் பேசும் பழக்கத்துக்கு அடிமையான விஜய்காந்த், இந்த தேர்தல்-பிரச்சாரஸ்பெஷல் படத்தில் நின்னா வசனம், எறும்பு கடிச்சா ஒரு வசனம், தண்ணி குடிச்சா ஒரு வசனம், தடுக்கி விழுந்தாவசனம், பொண்ணு பார்க்கப் போனாலும் நீண்ட வசனம் என்று படம் பார்க்க வந்தவர்களை சவட்டி எடுக்கிறார்சவட்டி.

    தனது கட்சியின் கொள்கைகள், தான் சொல்ல நினைப்பது ஆகியவற்றை வழக்கமான தனது அடிக் குரலில் ஏற்ற,இறக்கத்தோடு, முகத்தை கடுகடுப்பாகவும், புருவத்தை வளைத்து நெளித்தும், ஹெங்... என்று நாக்கையும்உதட்டையும் லெப்ட்-ரைட்டாக குவித்தும் பேசிக் கொண்டே இருக்கிறார், படம் முழுவதும்...

    படத்தில் ஹீரோ வரும் காட்சிகளைத் தான் அதிகமாக மக்கள் ரசிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தைப்பொறுத்தவரை அய்யய்யோ விஜய்காந்து மறுபடியும் வந்துர்டார்டா என்று தியேட்டரில் கலங்கி நிற்கும்ரசிகர்களை அதிகமாகவே பார்க்க முடிகிறது.

    அதுவும் பஞ்ச் டயலாக் என்ற பெயரில் டயர் கிழிந்து, டியூப் வெடித்து, படு பஞ்சரான டயலாக்குகளாக அவர்அடுக்கிக் கொண்டே போக, அய்யோ.. அய்யோ என்று சுயமாக நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும்செய்ய முடியவில்லை.

    முதல்வர், ஆட்சி, அமைச்சர்கள், டாக்டர்கள், நோயாளிகள், ரவுடிகள், பள்ளிக் கூடம், அதிகாரிகள், கல்வி,சுகாதாரம், சிறை, கள்ள ஓட்டு, ஜனநாயகம், அரசு மருத்துவமனைள், காடுகள், நிலம், விவசாயிகள், ஆறுகள், ஏரி,தண்ணீர் பிரச்சனை, பதவி, பணம் என்று சமூகத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளையும் மொத்தமாக ஒருகுண்டாவில் போட்டு கலக்கி வேக வைக்கிறார் விஜய்காந்த்.


    அந்த வேக்காட்டில் படம் பார்ப்பவர்களும் சேர்ந்து வெந்து போகிறார்கள் வெந்து. முதல் ரீலில் ஆரம்பிக்கும்விஜய்காந்த் படம் முடியும் வரை நிறுத்தாமல் பேசுகிறார்.

    ஒரு காட்சியில் பெண் பார்க்கப் போகிறார் விஜய்காந்த். லேட்டாக வந்துவிடுகிறார். அவரிடம் என்ன மாப்ளேலேட்டு என்று விவரந்தெரியாமல் ஒருவர் கேட்டுவிடுகிறார்.

    அதற்கும் ஒரு வசனம் தான் பதில்.

    நான் லேட்டா வந்து மக்கள காக்க வைக்கவும் மாட்டேன், முன்னாடியே வந்து.. என்று ஆரம்பித்து விஜய்காந்த்பேசி முடிக்கும்போது தியேட்டருக்கு வெளியே நிறைய கூட்டம்..

    தியேட்டரை விட்டு பாதியில் கிளம்பியவர்கள் கூட்டம் தான்....

    இப்போது மீண்டும் முதல் வரியைப் படித்துவிட்டு.. பிரண்ட் யாராவது சிக்குகிறாரா என்று பாருங்கள்...


    ஆசிரியர்கள் டென்சன்:

    இதற்கிடையே, படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கடுமையாக விமர்சித்து வசனம் வைக்கப்பட்டிருப்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு விஜயகாந்த் மீது வழக்குப் போடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    ஆசிரியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அந்த இரு காட்சிகள்:

    காட்சி நம்பர் ஒன்: அரசுப் பள்ளிக் கூட ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை தனது வீட்டு வேலைக்காக அனுப்புகிறார். வாத்தியார் வீட்டுக்குப் போனமாணவன், அங்குள்ள மின்விசிறியை துடைக்கிறான். அப்போது கால் தவறி கீழே விழுந்து மரணமடைகிறான்.

    இதனால் அதிர்ந்து போன ஆசிரியர், தனது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து பிணத்தை சாக்குப் பையில் கட்டி சாக்கடையில் போட்டு விடுகிறார்.

    போலீஸ் நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து சரி கட்டுகிறார் அந்த ஆசிரியர். இதைபுலனாய்வு அதிகாரியான விஜயகாந்த் கண்டுபிடித்து விடுகிறார். கோர்ட்டில் கொண்டு போய் அந்த ஆசிரியரை நிறுத்துகிறார்.


    காட்சி நம்பர் டூ: விஜயகாந்த் வீர வசனம் பேசுகிறார் - அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு, அந்தப் பணத்தை வைத்து, தங்களதுபிள்ளைகளை மட்டும் தனியார் கான்வென்ட்களிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் படிக்க வைக்கிறார்கள் அரசு ஆசிரியர்கள் என்கிறார் விஜயகாந்த்.

    தொப்புளில் பம்பரம் விட்ட விஜய்காந்த்:

    இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், தமிழ் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒரு நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டு ஆபாசமாக நடித்த விஜயகாந்த் எப்படி அரசுப் பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தி, அவமானப்படுத்தி பேசலாம்.

    சுதேசி படத்தில் இடம்பெற்றுள்ள இந்த கீழ்த்தரமான காட்சிகள் மற்றும் வசனங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். விஜயகாந்த்தும், இந்தக்காட்சிகளில் நடித்த மற்றவர்களும் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதொடர்பாக விஜயகாந்த்துக்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தக் கடிதத்தை மதித்து சுதேசி படத்திலிருந்து இந்தக் காட்சிகளை விஜயகாந்த் நீக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X