Kanguva Teaser: பெருமாச்சி!.. வெளியானது கங்குவா டீசர்.. பில்டப் பண்ண அளவுக்கு வொர்த்தா? இல்லையா?
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், அமேசான் பிரைம் நிகழ்ச்சி கால தாமதம் ஆனதால் கங்குவா படத்தின் டீசர் சற்றே தாமதமாக வெளியாகி உள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் வரிசையாக தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்கள் மற்றும் ஓடிடி வெளியீடு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. கங்குவா படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் உரிமத்தையும் அமேசான் பிரைம் வாங்கி உள்ள நிலையில், கங்குவா டீசரே அமேசான் பிரைம் நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டு வெளியிட்டுள்ளார்.

சமந்தா, வருண் தவான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 6 மணிக்கு வெளியாகும் என கடைசியாக அறிவித்து விட்டு திடீரென அதற்குள் டீசரை வெளியிட்டு விட்டனர்.
கங்குவா டீசர் ரிலீஸ்: சூர்யா நடிப்பில் பாகுபலி ரேஞ்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் கங்குவா படத்தின் டீசர் மிரட்டும் என எதிர்பார்த்தால், மோகன்லால் நடிப்பில் இந்த ஆண்டு குடியரசு தினத்துக்கு வெளியான மலைக்கோட்டை வாலிபன் ஸ்டைலில் டீசர் இருப்பது பெரும் பயத்தை கொடுக்கிறது.

அமேசான் நிகழ்ச்சியில் சூர்யா: ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் என வரிசையாக சூர்யா மற்றும் ஜோதிகாவின் படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், கங்குவா படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நல்ல தொகைக்கு வாங்கி உள்ள நிலையில் நடிகர் சூர்யா அதன் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கேயே கங்குவா டீசரை வெளியிட்டுள்ளார்.
கங்குவா டீசர் எப்படி?: நடிகர் சூர்யா மற்றும் பாபி தியோலை தூக்கி விட்டால் அந்த டீசரில் ஒரு காட்சி கூட ரசிகர்களை கவரும் வண்ணம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முன்னதாக வெளியான க்ளிம்ப்ஸ் எல்லாமே கங்குவா படத்தின் மீது ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தை சிவாவின் சொதப்பலான மேக்கிங் இந்த டீசரின் ஒவ்வொரு ஃபிரேமில் பல்லிளித்துக் காணப்படுகிறது. நிச்சயம் சூர்யாவுக்கு இது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக அமையுமா என்றால் அந்த படத்தின் திரைக்கதையை பொறுத்துத்தான் கூற முடியும் என்கிற அளவுக்குத்தான் உள்ளது.
மோசமான சிஜி காட்சிகள்: பொன்னியின் செல்வன் படத்தின் விஷுவலே பரவாயில்லை என்கிற ரகத்தில் கங்குவா படத்தின் சிஜி காட்சிகள் உள்ளன. பெருமாச்சி என சூர்யா பேசும் ஒரே ஒரு வசனம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஒரே ரத்தக்களரியாக இருக்கிறதே தவிர பெரிதாக சுவாரஸ்யமாக டீசரில் எந்தவொரு மாஸான காட்சியும் இல்லாதது பயங்கர வீக்னெஸ் ஆக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











