Retro Review: ரெட்ரோ சூர்யாவை தூக்கிவிட்டதா? பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. இதில், பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஷ்ரேயா சரண் என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நேற்று தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், படம் குறித்து விமர்சனத்தை கொடுத்து இருக்கிறார்.
ரெட்ரோ படத்தின் கதை என்னவென்றால், ஜோஜு ஜார்ஜ் தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால், அனாதையாக இருக்கும் சூர்யாவை தத்து எடுத்து வளர்க்கிறார் ஜோஜு ஜார்ஜின் மனைவி. இது ஜோஜு ஜார்ஜுக்கு பிடிக்கவில்லை. இதனால், பல நேரத்தில் சூர்யாவை அனாதை பயலே என்றும், அப்பா என்று கூப்பிடாதே என்றும் பலமுறை சொல்லுகிறார் ஜார்ஜ். ஆனால், ஒரு காலகட்டத்தில் அப்பாவின் உயிரை காப்பாற்றி ஜோஜு ஜார்ஜின் மனதில் இடம் பிடிக்கிறார் சூர்யா. அந்த ஊரில் பெரிய தாதாவாக, அடிதடி மன்னனாக, கொலை, கொள்ளை, அரசாங்க தங்கங்களை கடத்துவது என பல மோசடி வேலைகளை செய்து வருகிறார் ஜோஜு ஜார்ஜ். ஆனால், தங்கத்தை தந்திரமாக தான் எடுத்துக் கொள்கிறார் சூர்யா. ஜோஜு ஜார்ஜ் எவ்வளவோ கேட்டும் தர மறுத்து விடுகிறார் சூர்யா. இதனால், இருவருக்குள்ளும் சண்டை வருகிறது.

ரெட்ரோ கதை: இதற்கிடையில் தான் பூஜா ஹெக்டாவை காதலிக்கிறார் சூர்யா, அப்போது, பூஜா, நான் உன் கூட சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறேன், தினம் தினமும் பயத்தோடு என்னால் வாழ முடியாது, நீ அடிதடியை விட்டு விலகி வா, நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்ல, சூர்யாவும், பூஜாவிடம் இனி மேல் அடி தடிக்கு போக மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான். இந்த நேரத்தில் ஜோஜு ஜார்ஜுக்கும் சூர்யாவிற்கும் சண்டை வர, இந்த சண்டையில் சூர்யா, அப்பா என்று கூட பார்க்காமல், ஜோஜு ஜார்ஜின் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு செல்கிறான். பின் 7 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்து, பூஜா ஹெக்டேவை தேட அவர் அந்தமானியில் இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து, சூர்யா அந்தமான் செல்கிறான். அப்போது தான், ஒரு கொடிய அரக்கனிடம் ஜோஜு ஜார்ஜ் சிக்கி அடிமையாக இருப்பது தெரியவருகிறது. அதில் இருந்து ஜோஜு ஜார்ஜை மீட்டாரா... பூஜா ஹெக்டேவை திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பது தான் ரெட்ரோ படத்தின் கதை.
ஆக்ஷன் கிங் சூர்யா: இந்த படத்தில் சூர்யா சிரிக்கவே தெரியாத ஜென்மமாக முகத்தை எப்போதும் 'உர்' என்று வைத்து இருக்கிறார். அதேபோல படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பின்னி எடுத்திருக்கிறார் சூர்யா. ஒரு படத்தில் நான்கு ஐந்து சண்டை காட்சித்தான் இருக்கும். ஆனால், இந்த படத்தில் தாங்கவே முடியாத அளவிற்கு 21 சண்டை காட்சி இடம் பெற்று போதும்டா சாமி என சொல்ல வைத்துவிட்டது. இந்த படத்தில் சூர்யா முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் நடிகராக இருக்கிறார். இந்த படம் நிச்சயம் சூர்யாவின் கெரியரில் ஒரு மைல் கல்லாகத்தான் இருக்கும், அக்ஷன் கிங் என்ற பட்டத்தை இனி மேல் தாராளமாக சூர்யாவிற்கு தரலாம், அந்த அளவிற்கு ரத்தமும் சதையுமாக கடுமையாக உழைத்து இருக்கிறார் சூர்யா.
நடிகர் சூர்யா நடித்த திரைப்படங்கள் தோல்வித் திரைப்படமாக அமைந்த நிலையில், ரெட்ரோ சூர்யாவை தூக்கிவிட்டுள்ளது. அடிக்கும் வெளியிலுக்கு ஏசியில் உட்காந்து கொண்டு, சென்டிமெண்ட், காதல், நகைச்சுவை, சண்டை என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருக்கும் ரெட்ரோ படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











