For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Suzhal Review: யாரையும் சந்தேகிக்காதே.. யாரையும் நம்பாதே.. புஷ்கர் - காயத்ரியின் சுழல் விமர்சனம்!

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி

  இசை: சாம் சி.எஸ்

  கதை: புஷ்கர் - காயத்ரி

  இயக்கம்: பிரம்மா, அனு சரண்

  ரேட்டிங்: 3.5/5.

  சென்னை: விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி எழுத்தில் உருவாகி உள்ள சுழல் வெப்சீரிஸ் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

  சாம்பலூர் எனும் மலை கிராமத்தில் 9 நாட்கள் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. முதலாம் நாள் திருவிழாவில் அந்த ஊரில் இரு பெரும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

  சிமெண்ட் ஃபேக்டரி ஒன்று தீக்கிரையாகிறது. அதே நேரத்தில் அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் யூனியன் லீடர் சண்முகம் (பார்த்திபன்) மகள் நிலா காணாமல் போகிறாள்.

  இன்ஸ்டா வீடியோவில் கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..ஏன் என்ன ஆச்சு பதறிய ரசிகர்கள் !இன்ஸ்டா வீடியோவில் கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..ஏன் என்ன ஆச்சு பதறிய ரசிகர்கள் !

  சுழன்றடிக்கும் சுழல்

  சுழன்றடிக்கும் சுழல்

  இந்த இரு பிரச்சனையையும் விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகளாக ரெஜினா (ஸ்ரேயா ரெட்டி) மற்றும் சக்கரவர்த்தி (கதிர்) கதை முழுக்க அசத்தலான நடிப்பை மட்டுமின்றி ஆழமான பல எமோஷன்களையும் வெளிப்படுத்தி உள்ளனர். ஃபேக்டர் ஓனர் திரிலோக் வாடியாக வரும் ஹரிஷ் உத்தமன், பார்த்திபனின் மகளாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நாத்திகவாதியான பார்த்திபனுக்கும் ஆத்திகவாதியான அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருப்பது, மூணாறுக்கு போகும் ஸ்ரேயா ரெட்டியின் மகன் கார் அந்த பொண்ணை இழுத்து செல்வதை சிசிடிவி காட்சியில் கண்டு பிடிக்கும் கதிர் என கதாபாத்திரங்களும், கதைகளும் பார்ப்பவர்களை சுழன்று அடிக்கச் செய்கிறது.

  சந்தேக நோய்

  சந்தேக நோய்

  8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸில் யாரை சந்தேகிப்பது, யாரை சந்தேகப்படாமல் இருப்பது என்றே தெரியாத அளவுக்கு திரைக்கதையை அட்டகாசமாக வடிவமைத்துள்ளனர் புஷ்கர் மற்றும் காயத்ரி. விக்ரம் வேதா படத்திற்கு பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர்கள் தமிழில் மேலும், சில படங்களை இயக்கி இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது. ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரிஷ் உத்தமன், ஸ்ரேயா ரெட்டியின் மகன், ஹரிஷ் உத்தமனின் அப்பா, மசான கொள்ளையர்கள், நரபலி, பள்ளியில் நடக்கும் பாலியல் தொல்லை என ஏகப்பட்ட விஷயங்கள் பல வித சந்தேகங்களை கடைசி வரை எழுப்பி இறுதியில் யார் குற்றவாளி என்பதை சொல்லிய விதத்தில் மிரட்டுகிறது.

  யாரையும் நம்பாதே

  யாரையும் நம்பாதே

  போலீஸ் அதிகாரி சக்கரையாக கதிர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இருக்கும் பழைய லவ் டிராக், தம்பி மாதிரி இருந்த ஒருவருக்கு என்ன ஆனது என்பதை தேடும் ஆர்வம், சந்தேகிக்கும் நபர்கள் எல்லாம் கெட்டவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் என பல விஷயங்கள் சந்தேகிக்க வேண்டாம் என்று சொன்னாலும், கடைசியில் சொல்லும் கிளைமேக்ஸ் யாரையும் கண்மூடித் தனமாக நம்பி விடக் கூடாது என்பதை கனமாக மனதில் இறக்குகிறது.

  பிளஸ்

  பிளஸ்

  பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி என முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு அத்தனையுமே படத்திற்கு பலம் தான். முகேஷ்வரனின் ஒளிப்பதிவில் அந்த மலை கிராமத்தின் அழகு. ஹெலிகேம் ஷாட்களை பயன்படுத்திய விதம். அந்த மயான கொள்ளையை காட்சிப்படுத்திய விதம். அதன் பின்னணி இசையில் பயமுறுத்தும் சாம் சி.எஸ் என பல பிளஸ்கள் இந்த வெப்சீரிஸில் உள்ளன. அனைத்திற்கும் மேலாக, ஒரு கட்டத்தில் இவர் தான் வில்லன் என சந்தேகிக்கப்பட்டாலும், மீண்டும் அவரை மறக்கடிக்க வைக்கும் திரைக்கதை மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது.

  மைனஸ்

  மைனஸ்

  புஷ்கர் - காயத்ரி எழுதி இயக்கி உள்ள வெப்சீரிஸில் எந்தவொரு மைனஸும் இல்லையா? என்று பார்த்தால் பல இடங்களில் சில மைனஸ்கள் நிறையவே தென்படுகின்றன. காதல் போர்ஷன் கொஞ்சம் போரடிக்க வைக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டிய கதையை ரொம்பவே இழுத்து சொல்லி இருப்பது போலும் தெரிகிறது. குற்றவாளியின் மோட்டோ அவன் ஏன் அத்தனை நாட்கள் தப்பிக்கிறான் என்கிற கேள்விகள் கடைசியாக எழத்தான் செய்கிறது. சுழல் கொஞ்சம் சுத்தல்! ஆனால், கடைசியாக போடப்படும் அந்த கார்டு மகள்களை பெற்ற பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைப்பது நிச்சயம்.

  English summary
  Suzhal: The Vortex webseries Review in Tamil
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X