Jee Karda Review: தமன்னாவின் தாராளத்துக்காக பார்க்கலாம்.. மற்றபடி? ஜீ கர்தா வெப்சீரிஸ் விமர்சனம்!
நடிகர்கள்: தமன்னா, சுஹைல், அஷிம் குலாட்டி
ஓடிடி: அமேசான் பிரைம்
எபிசோடுகள்: 8 (சுமார் 4.30 மணி நேரம்)
இயக்கம்: அருணிமா ஷர்மா
சென்னை: அருணிமா ஷர்மா இயக்கத்தில் தமன்னா, சுஹைல், அஷிம் குலாட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 8 எபிசோடுகள் கொண்ட ஜீ கர்தா வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நெட்பிளிக்ஸுக்கு போட்டியாக நாங்களும் அடல்ட் கன்டென்ட்டை தருகிறோம் பாருங்க என்கிற ரேஞ்சில் இப்படியொரு வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

நடிகை தமன்னா இதுவரை சினிமாவில் காட்டாத தாராளத்தை இந்த இந்தி வெப்சீரிஸில் இஷ்டத்துக்கு காட்டி நடித்துள்ளது தான் இந்த வெப்சீரிஸை பேசு பொருளாக மாற்றியுள்ளது. அடல்ட் காட்சிகள் அதிகம் அடங்கிய ஒரு திருமண டிராமா வெப்சீரிஸ் எப்படி இருக்கிறது என்கிற முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்: 7 நண்பர்கள் பள்ளியில் இருந்து பெரியவர்கள் ஆவது வரை ஒன்றாகவே உள்ளனர். சிறு வயதில் பொருட்காட்சி ஒன்றுக்கு செல்லும் போது, அங்கே ஃபேஸ் ரீடர் ஒருவரை சந்திக்கும் இவர்களுக்கு வித்தியாசமான விஷயங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கப் போவதாக எச்சரிக்கிறார்.
லாவண்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னாவுக்கு 2022ல் ஜாக்கிரதையாக இரு? என எச்சரிக்கிறார். கட் பண்ணா தமன்னா தனது காதலருடன் 2022ல் நிச்சயம் செய்துக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ள தயாராக இருக்கிறார்.
சிறு வயதில் இருந்தே தமன்னா மீது ஒரு தலையாக காதல் கொண்டு இருக்கும் பிரபல பாடகராக மாறிவிட்ட அர்ஜுன் (AG the OG) காதல் கொள்ள கடைசியில் தமன்னா யாரை திருமணம் செய்துக் கொண்டார் என்கிற முக்கோண காதல் கதையில், ஏகப்பட்ட காமக் காட்சிகளை தூவி இளைஞர்களை ஈர்க்கும் விதமாக ஒரு வெப்சீரிஸை உருவாக்கி உள்ளனர்.

ஜீ கர்தா விமர்சனம்: நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸில் சுடிதார் அணிந்து கச்சிதமாக நடித்து கலக்கி இருந்த தமன்னா இந்தி வெப்சீரிஸான ஜீ கர்தாவில் கவர்ச்சியை மீறிய ஆட்டத்தை போட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகைகள் தோற்றுப் போகும் அளவுக்கு படுக்கையறை காட்சிகளில் அப்படியொரு எக்ஸ்பிரஷனை கொடுத்து பலான காட்சிகளில் பக்காவாக ஸ்கோர் செய்து நடித்துள்ளார்.
கீழே வேக்ஸின் பண்ணல வேண்டாம் என தமன்னா பேசும் காட்சிகளின் தமிழ் டப்பிங்கில், காடாக இருந்தால் அந்த காட்டுக்கே நான் தான் ராஜா என பாலிவுட் நடிகர் சோஹேல் சொல்வது முதல் எபிசோடிலேயே வந்து ரசிகர்களை பதற விடுகிறது.
சோஹேல் உடன் திருமணத்துக்கு தமன்னா ரெடியாக மாப்பிள்ளையின் பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சியில் சைவம் போடணும், சரக்கு பார்ட்டி கூடாது என கண்டிஷன் போட, திருமணத்துக்கு முன்பாகவே மாமியாரை எதிர்த்து என் நண்பர்களுக்கு நான் வெஜ் தான் பிடிக்கும் என தமன்னா பேசும் இடங்கள் எல்லாம் தேவையில்லாத ஆணியாகவே தெரிகிறது.
அனைத்து பெண்களும் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் ஹனி சிங் போன்ற பாடகராக அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் தாஜ் வெப்சீரிஸில் தாறுமாறு செய்த அசிம் குலாட்டி இதில், ஆரம்பம் முதலே ஹார்னியாகவே நடித்துள்ளார்.
லைவில் அவரது மேட்டர் வீடியோ லீக் ஆவது போலத்தான் அறிமுகமே இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்து வரும் அவருக்கு சிறு வயதில் தமன்னாவுக்கு வராத காதல் திருமணத்துக்கு முன்பாக வர என்ன கச்சேரி நடக்கிறது என்பதெல்லாம் வழக்கமான டெம்பிளேட் கதையாகவே கடக்கிறது.

பிளஸ்: தமன்னாவின் ஹாட் சீன்கள் இப்படியொரு வெப்சீரிஸ் வந்துள்ளது என்பதற்கான விளம்பரமாகவே மாறி உள்ளது. இளைஞர்கள் எப்படியாவது தமன்னாவுக்காக இந்த வெப்சீரிஸை பார்த்து விடுவார்கள். பார்ட்டி மோடில் பளிச்சென காட்சிகள் குவாலிட்டியாக உருவாக்கப்பட்டு இருப்பது இந்த வெப்சீரிஸின் ஹைலைட்.
மைனஸ்: மற்றபடி காமெடி காட்சிகளோ ஆழமான அழுத்தமான கதைக்களமோ இல்லாதது இந்த வெப்சீரிஸின் மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. அடல்ட் வெப்சீரிஸ் எடுக்க வேண்டுமென்றால் ஒரு கே ஸ்டோரி, சில ஆபாச காட்சிகள், கெட்ட வார்த்தைகள் இருந்தால் போதும் என நினைத்து இப்படியொரு வெப்சீரிஸை உருவாக்கி உள்ளனர் என்று தான் தோன்றுகிறது. 7 நண்பர்கள் வாழ்க்கை என அறிமுகப்படுத்தும் கதையில், மற்றவர்களின் கதை எல்லாம் ஊறுகாய் போல தொட்டுச் செல்வது வெப்சீரிஸை ஒரு கட்டத்திற்கு மேல் பார்க்க முடியாதபடி செய்கிறது. 10 எபிசோடுகளாக கொண்டு செல்லாமல் 8 எபிசோடுகளில் முடித்தது மிகப்பெரிய ஆறுதல்.


Click it and Unblock the Notifications