ஆண்டனி - படம் எப்படி இருக்கு? ஒன்இந்தியா விமர்சனம்

மண்ணுள் புதைந்த மனிதனின் வாழ்க்கைப் போராட்டமே ஆண்டனி

Rating:
2.0/5
Star Cast: நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா
Director: குட்டி குமார்

சென்னை: மண்ணுக்குள் புதைந்த ஒரு மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை, சஸ்பென்ஸ், திரில்லர், காதல் கலந்து சொல்லும் படம் ஆண்டனி.

நடிகர்கள் - நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா, சம்பத்ராஜ், வெப்பம் ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர்.

தயாரிப்பு - ஆண்டனி புரோடக்ஷன்ஸ் கிறிஸ்டோபர், இயக்கம் - குட்டி குமார், ஒளிப்பதிவு - ஆர்.பாலாஜி,

படத்தொகுப்பு - கார்த்திக், குட்டி குமார், இசை - சிவாத்மிகா.

கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானல் நகரின் ஸ்டிரிக்டான போலீஸ் எஸ்.ஐ. அவரது தந்தை ஜார்ஜும் (லால்) முன்னாள் போலீஸ் அதிகாரி. தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி. ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம். ஜார்ஜின் போலீஸ் நண்பர் சம்பத்ராம்.

Tamil movie Antony review

படம் துவங்கியதுமே ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் இருந்து மயக்கம் தெளிகிறார். தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்பும் ஹீரோவுக்கு, சிறிது நேரம் கழித்துதான் காருடன் மண்ணுக்குள் புதைந்து கிடப்பது புரிகிறது. பதற்றமடையும் ஹீரோ தன்னை யார் இங்கு அடைத்து வைத்திக்கிறார் என புரியாமல், வெளியேற முயல்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை.

இதற்கிடையே, ஹீரோயின் மகா, காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் முன் காத்திருக்கிறார். வெகு நேரம் ஆகியும் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜிடம் தன் போகத்தை வெளிபடுத்திவிட்டு புறப்படுகிறார்.

இரவு முழுவதும் தன்னுடன் மது அருந்திய மகன், காலையில் திருமணத்துக்கு வராமல் எங்கே சென்றிருப்பான் என குழப்பும் ஜார்ஜ், மகனை தேடி கண்டுப்பிடிக்க புறப்படுகிறார். தந்தை ஜார்ஜ், மகனை கண்டுபிடித்தாரா?, மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா? என்ற கேள்விகளுக்கு விடையை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.

ஆண்டனி மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிஷாந்துக்கு முதல் படத்திலேயே கனமான பாத்திரம். மண்ணுக்குள் புதைந்து பெரும் சிரமப்பட்டிருக்கிறார். ஓரளவுக்கு திறம்படவே நடித்திருக்கிறார்.
ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் வைஷாலிக்கு, வழக்கமான தமிழ் சினிமா நாயகிக்கான டெம்பிளேட் கதாபாத்திரம். பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.

தமிழ் சினிமாவில் வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட லாலுக்கு, மகனை தேடும் தந்தை பாத்திரம். அவரளவுக்கு சரியாக செய்திருக்கிறார். ரேகாவிற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சும்மா வந்து போகிறார். வில்லனாக அறிமுகமாகி இருக்கம் தயாரிப்பாளர் வெப்பம் ராஜா, சுமார் ரகத்தில் மிரட்ட முயல்கிறார்.

படம் ஆரம்பிக்கும் போது, மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஒரு மனிதனின் படப்படப்பும், மூச்சுத்தனறலும் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனால் போகப் போக சலிப்பை ஏற்படுத்தி போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. முதல் பாதிக்கு மேல் நகர முடியாமல் கதையும் மண்ணுக்குள் புதைந்துவிடுகிறது.
ஒளிப்பதிவாளர் பாலாஜியும், இசையமைப்பாளர் சிவாத்மிகாவும் தான் படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடித்திருக்கிறார்கள். பாலாஜியின் ஒளிப்பதிவு காதல், ஃபோபியா, ஆக்ஷ்ன் என அனைத்தையும் அழகாக பிரித்து காட்டுகிறது.

இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆண்டனி. அதைத்தவிர படத்தில் புதிதாக எதுவும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X