Don't Miss!
- Sports
மீண்டும் உம்ரான் மாலிக்கிற்கு செய்யப்படும் துரோகம்.. நியூசி.யிடம் அடிவாங்கியதற்கு காரணமே இது தான்
- Finance
ஆபீஸ் வந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக மார்க்.. அப்ரைசலில் TCS வைத்த செக்.. இனி வேற வழி?
- News
விஜயகாந்த் வேற "சைஸா" நுழைந்துட்டாரே.. ஈர்க்கும் ஈரோடு.. அங்கே ஸ்பெஷாலிட்டியே இதான்.. பளபள கட்சிகள்
- Technology
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- Automobiles
பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஒன்றின் ஆயுட்காலம் இத்தனை மணிநேரமே!! தெரியாம போய் டிடிஆர்-கிட்ட மாட்டிக்காதீங்க...
- Lifestyle
பிறப்புறுப்பை சுற்றி இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பாலியல் தொற்றுநோய் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
TamilRockerz Web series Twitter Review: அருண் விஜய்யின் தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸ் எப்படி இருக்கு?
சென்னை: ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸ் நாளை சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அதன் பிரத்யேக ப்ரீமியர் ஷோவை பார்த்த பிரபலங்கள் ட்விட்டரில் தங்களின் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
முதல் முறையாக வெப்சீரிஸில் நடித்துள்ள அருண் விஜய் எப்படி மிரட்டி உள்ளார், தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் எப்படி இருக்கு என்பது பற்றி இங்கே பார்ப்போம்..
டிரைலரே இப்படின்னா...அப்போ மெயின் பிக்சர் எப்படி இருக்கும்...மிரள வைத்த தமிழ்ராக்கர்ஸ் டிரைலர்

தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸ்
சினிமா உலகிற்கே சாபக்கேடாக மாறி உள்ள பைரஸி வெப்சைட்கள் மற்றும் திருட்டு டிவிடிக்கள் பற்றிய கதை தான் இந்த தமிழ்ராக்கர்ஸ். தமிழ்ராக்கர்ஸ் எனும் பெயரில் வெப்சைட் தொடங்கப்பட்டு ரிலீஸாகும் புதிய படங்கள் படம் தியேட்டரில் 3 மணி நேரம் ஓடி முடித்த அடுத்த நொடியே அப்லோடு ஆகி ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட வைக்கும் அபாயத்தை உண்டு செய்துள்ளது.

பைரஸியை தடுக்க முடியல
இன்று வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மற்றும் நாளை சோனி லைவ்வில் வெளியாக உள்ள தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸ் உள்பட அனைத்துமே பைரஸியாக வந்து விடுகின்றன. அதை எவராலும் தடுக்க முடியவில்லை. ஓடிடி படைப்புகள் என்றால், உடனடியாக ஹெச்டி தரத்துடனே வெளியாகி விடுகிறது. பல ஓடிடிக்களுக்கு சப்ஸ்கிரைப் செய்ய முடியாத சூழலில் மக்களும் இதுபோன்ற திருட்டு வெப்சைட்களை ஆதரிப்பது தான் அதன் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

சாம் ஆண்டன் விமர்சனம்
டார்லிங், 100, கூர்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் தற்போது அருண் விஜய்யின் அறிமுக வெப்சீரிஸான தமிழ்ராக்கர்ஸ் பார்த்து விட்டு தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 4 எபிசோடுகள் பார்த்தேன். அருண் விஜய் சார் அசத்திட்டீங்க, இயக்குநர் அறிவழகன் ஒவ்வொரு காட்சியிலும் பக்கா டீட்டெய்ல், தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸ் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தை எடுத்து சொன்ன விதம் அருமை என பாராட்டி உள்ளார்.

பிரசாந்த் விமர்சனம்
சிறப்பு காட்சியில் திரையிடப்பட்ட முதல் 4 எபிசோடுகளை பார்த்தேன். இயக்குநர் அறிவழகன் ரொம்பவே என்கேஜிங்காக இந்த வெப்சீரிஸை இயக்கி உள்ளார். வழக்கம் போல அளந்த நடிப்பை அருண் விஜய் கொடுத்து தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார் என பிரசாந்த் ரங்கசாமி விமர்சித்துள்ளார்.

என்ன கதை
"பல சாமானிய மக்கள் பங்கேற்கப்படும் குற்றத்தின் கதை! #Tamilrockerz - #SonyLIV தமிழ் web series Aug 19 முதல்." என ஏவிஎம் நிறுவனமே தமிழ்ராக்கர்ஸ் வெப்சீரிஸின் கதையை அறிவித்துள்ளனர். ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் செம ட்ரீட் காத்திருக்கிறது. அருண் விஜய்யின் யானை திரைப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.