twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்....கிரைம் ரிப்போர்டர் பார்வையில்

    |

    Rating:
    4.0/5

    நடிகர்கள்:

    விக்ரம் பிரபு
    அஞ்சலி நாயர்
    லால்
    மதுசூதன் ராவ்
    எம் எஸ் பாஸ்கர்
    போஸ் வெங்கட்

    ரேட்டிங்: 4/5.

    சென்னை: கிரைம் ரிப்போர்டராக போலீஸாருடன் பழகிய அனுபவம் போலீஸாரின் மன உளைச்சல் நெருக்கடிகளை நேரில் பார்த்த, போலீஸாரின் மனிதாபிமானமற்ற நடத்தை, அடக்குமுறை, மனிதநேய போலீஸார் நடத்தை, மிகுந்த அறிவார்ந்த போலீஸார்களை கண்ட கிரைம் ரிப்போர்ட்டராக டாணாக்காரன் படத்தை அணுகியுள்ளேன்.

    என்னது, கேஜிஎப் 2- ல் இணைகிறாரா பிரபாஸ்?... எதுக்குன்னு பாக்கலாமா? என்னது, கேஜிஎப் 2- ல் இணைகிறாரா பிரபாஸ்?... எதுக்குன்னு பாக்கலாமா?

    போலீஸுக்கு இருக்கு முகமுடி

    போலீஸுக்கு இருக்கு முகமுடி

    "போலீஸ்ல சிங்கம், புலி, நரி, நாயுன்னு எல்லா முகமுடியும் நம்ம கையில் கொடுத்திருவானுங்க இதில் எந்த முகமுடியை எந்த இடத்துல போடுவது என்பதிலேயே போலீஸ் வாழ்க்கை போய்கிட்டே இருக்கும்" மிக அழகாக போலீஸ் துறையில் உள்ள வாழ்க்கையை இதைவிட அழகான வரிகளில் சொல்லி விட முடியாது. உயர் அதிகாரி கெட்ட வார்த்தைகளால் திட்டும்போது நாய் மாதிரி குழைந்து வெளியில் வந்து பொதுமக்களிடம் சிங்கம் போலும், கீழுள்ள போலீஸாரிடம் புலி போலும் பல முகமுடிகள் அணியும் பணி போலீஸில் உண்டு.

    போலீஸார் குறித்த காட்சி

    போலீஸார் குறித்த காட்சி

    மக்கள் பிரச்சினை என்றால் முதலில் வருவது போலீஸ் தான் அந்த போலீஸ் சரியாக இருந்தால் நம்ம பிரச்சினை தீர்ந்திருக்கும் இல்லப்பா? என தந்தை லிவிங்க்ஸ்டனிடம் மகன் விக்ரம் பிரபு கேட்கும் காட்சியில் சமுதாயத்தில் போலீஸார் எப்படி செயல்பட வேண்டும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நம்மை உணர வைத்திருப்பார்.

    இதுதாங்க கதை

    இதுதாங்க கதை

    படத்தின் கதை ஒற்றை வரிதான் 9 மாத போலீஸ் பயிற்சி, அதில் போலீஸார் அடையும் துன்பங்கள், அடக்குமுறை, அவமானம், ஏன் அவர்கள் மிஷின்கள் போல் மனிதாபிமானமற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள், அதுதான் சிஸ்டம் என்பதாக சொல்வது சரியா என்பதே கதை. இதை அழகான கதாபாத்திரங்கள் மூலம் சிக்கலில்லாமல் கொண்டுச் சென்றுள்ளார் இயக்குநர் தமிழ். எழுத்து, இயக்கம் இரண்டும் அவரே. முதல் படமாம் நம்புங்க, ஆனால் பல காட்சிகளில் நம்ப முடியவில்லை.

    இதில் உண்மைச் சம்பவமும் இருக்காம்

    இதில் உண்மைச் சம்பவமும் இருக்காம்

    கதையுடன் இணைப்பாக 1997 ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவங்களை சேர்த்துள்ளார். 16 ஆண்டுகள் நீதிமன்ற வழக்கு வெற்றிக்குப்பின் பயிற்சிக்கு வரும் 40 வயதை கடந்தவர்கள் அடையும் அவமானம், துன்பம் பார்ப்போரை கலங்க வைக்கிறது. ஓரிரு காட்சிகளே வந்தாலும் சந்திரன் கலக்குகிறார். போலீஸ் சிஸ்டத்தையே எதிர்த்து வழக்காடி வந்துள்ளாயா என வச்சி செய்யும் அதிகார வர்க்கம், ஓடிப்போய்டு இல்ல பிணமாகத்தான் போவாய் என மிரட்டும் பயிற்சியாளர் லால் மிரட்டுகிறார்.

    போலீஸார் கடுமையாக இருப்பது ஏன்?

    போலீஸார் கடுமையாக இருப்பது ஏன்?

    போலீஸார் ஏன் இத்தனை கடுமையாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப்படத்தில் சில இடங்களில் டைரக்டர் டச் வைத்துள்ளார் இயக்குநர் தமிழ். உள்ளுக்குல்லேயே இருக்கும் லஞ்சம், சாதாரண கோரிக்கைக்கூட இது பயிற்சியில் ஒருவகை அய்யா நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன் என எஸ்.பி அந்தஸ்து கமாண்டண்டுக்கே புத்தி சொல்லும் ஏட்டய்யா பாத்திரம் மூலம் சொல்லும் போது அதிகாரி சரி என போவதும் வெள்ளைக்காரன் சிஸ்டம் எவ்வளவு வலுவாக திணிக்கப்பட்டு மாறாமல் உள்ளது என்பதை காட்டுகிறது.

    பயிற்சியில் மாற்றம் தேவையா?

    பயிற்சியில் மாற்றம் தேவையா?

    ஏதாவது குறையிருக்கா என்று கேட்கும் இன்ஸ்பெக்டரிடம் கூடுதலாக ஒரு கக்கூஸ் கேட்கும்போது இருப்பதையும் குறைப்பதும் இதுதான் சிஸ்டம் என்பதும் இதில் பயிற்சி முடித்தவர் பின் மனிதாபிமானத்துடனா இருப்பார் என்பதை காட்டுகிறது. எவ்வளவு முக்கியமான பயிற்சிகள் எல்லாம் தரவேண்டிய இடத்தில் வெறும் கவாத்து பயிற்சி மூலம் மட்டும் இப்படி கடுமையாக நடப்பது முறையா என விக்ரம் பிரபு கேட்பதன் மூலம் இந்தப்பயிற்சி முறையில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

    மாறாத பிரிட்டீஷ் கால நடைமுறை

    மாறாத பிரிட்டீஷ் கால நடைமுறை

    "120 வருஷமா சட்டையைக்கூட மாற்ற நினைக்காத டிபார்ட்மெண்ட்ல மாற்றத்த கொண்டு வரணும்னு நினைக்கிறியே'' என எம்.எஸ்.பாஸ்கர் விக்ரம் பிரபுவிடம் கேட்கும் கேள்வியில் அரத பழசான பிரிட்டீஷ் காலத்து மாற்றப்பட வேண்டிய விஷயங்களை அதிகாரிகளின் சடங்குத்தனமான போக்கு காரணமாக எதுவும் மாறாமல் இருப்பதை காட்டுகிறது. வேப்பமரத்தின் கீழ் நிற்கும் கார்டு காட்சி இன்றைக்கும் காவல்துறையின் மாறாப்போக்குக்கு உதாரணம். அடிமைத்தனமாக இரு கேள்விக்கேட்காதே, செய், சிந்திக்காதே எனும் காலனித்துவ மனநிலை.

    காவல்துறையில் சேரும் பட்டமேற்படிப்பு படித்த இளைஞர்கள்

    காவல்துறையில் சேரும் பட்டமேற்படிப்பு படித்த இளைஞர்கள்

    முன்புபோல் காவல்துறை இல்லை, படித்த பட்டமேற்படிப்பு படித்த இளைஞர்கள் காவல்துறைக்கு வருகிறார்கள், சிலரது பொது அறிவு, சமயோசித அறிவை உயர் அதிகாரிகளிடம் கூட பார்க்க முடிவதில்லை. இந்தப்படத்தில் காட்டப்படும் பயிற்சிகள் எக்ஸ்ட்ரா ட்ரில் ஒழிக்கப்பட்டது போல் காட்டுகிறார்கள், ஆனால் இன்றளவும் அது உள்ளது. பயிற்சி தாண்டி பணியில் இணைந்தப்பின்னும் ஆயுதப்படை, சிறப்பு காவல்படையில் கூட இடி இருக்கிறது.

    சிஸ்டத்துக்குள் சிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள்

    சிஸ்டத்துக்குள் சிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள்

    ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் மாற்றத்தைச் சொல்லும் இன்ஸ்பெக்டரிடம் இந்த சிஸ்டம் இப்படித்தான் இருக்கும் ஈஸ்வர மூர்த்தி தனி நபர் அல்ல அதுதான் காவல்துறை என்று லஞ்சம், அடக்குமுறையின் மொத்த உருவமாக இருக்கும் பயிற்சியாளர் லால் பற்றி சொல்லும் காட்சியில் காவல்துறையில் மாற்றம் வருமா? என்கிற கேள்வி நம் மனதில் எழுகிறது.

    அடிமைத்தனமாக இருந்தால் மட்டுமே போலீஸ்

    அடிமைத்தனமாக இருந்தால் மட்டுமே போலீஸ்

    குறையாக படத்தில் அதிகம் சொல்ல முடியாது. காவல்துறையின் அத்தனை அம்சங்களையும் படத்தில் வைத்துள்ளார். சில இடங்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கர் 28 ஆண்டுகள் ஒரே இடத்தில் சிக்கியுள்ளதாக அமைக்கப்பட்டுள்ள காட்சி, அவர் மீண்டும் தன் பட்டாலியனுக்கு திரும்பும் வாய்ப்பு இருக்கு. ஆனால் இதெல்லாம் பெரிய குறை அல்ல. போலீஸை போலீஸே தாக்கும் தடியடி காட்சி அரசாங்கம் சொல்லும் சிஸ்டத்துக்கு உதாரணம். 1978 ஆம் ஆண்டு போலீஸ் சங்கம் கேட்டு போலீஸார் எழும்பூரில் கடுமையான தடியடிக்குள்ளானது ஞாபகத்துக்கு வருகிறது.

    சார்ஜ் நடைமுறையில் உள்ள சிக்கலாம் அவதிப்படும் போலீஸார்

    சார்ஜ் நடைமுறையில் உள்ள சிக்கலாம் அவதிப்படும் போலீஸார்

    போலீஸ் என்றாலே அடிமைத்தனம், சொல்வதை கேள், மரியாதை குறைவாக நடத்தப்பட்டால் மவுனமாக இரு, எதிர்த்து செயலாற்றினால் அதன் விளைவு சார்ஜ் கொடுக்கப்படும், இதற்காக மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தால் அதைவிட அதிகமான வசவுகள் கிடைக்கும். இதை பல போலீஸார் சொல்லி கேட்டுள்ளோம். சார்ஜ் ரிவோக் செய்ய முடியாமல் முறையீடு, முறையீடு என்றே காலம் கழியும், அத்தி பூத்தாற்போல் மனிதாபிமான ஐபிஎஸ் அதிகாரிகள் வந்தால் மட்டுமே சார்ஜ் ரிமூவ் ஆகும். இதை இந்தப்படத்தில் காட்சியாக வைத்திருப்பார்.

    விட்டோடிகள் ஆவது ஏன்?

    விட்டோடிகள் ஆவது ஏன்?

    விட்டோடிகள் என போலீஸில் சொல்வார்கள், ட்ரைனிங் பீரியடில் ஓடிப்போவது. இதை சாதாரணமாக நினைப்பவர்கள் இந்தப்படத்தில் அதற்கான பதில் கிடைக்கும். அடிமைத்தனம் உள்ளே அடக்குமுறை வெளியே பிரிட்டீஷ் காலத்து காலனி ஆதிக்க மனோபாவத்தில் இன்று போலீஸார் தயார் செய்யப்படுகின்றனர்( இந்த வார்த்தைத்தான் பொறுத்தமானது) இதை மாற்றவேண்டும், நம்பிக்கையோடு இரு நம்மை நம்பி வரும் மக்களுக்கு உதவி செய் என ஆங்காங்கே தெரியும் நம்பிக்கை போலீஸார் போஸ் வெங்கட் பாத்திரம் இயக்குநர் விருப்பத்தை காட்டுகிறது.

    நெருடும் சில காட்சிகள்

    நெருடும் சில காட்சிகள்

    கதாநாயகன் கேள்வி கேட்கும் மன நிலையில் உள்ளவன், உள்ள உறுதி மிக்கவன் என்பதை காட்ட அவன் படிப்பாளி என்பதுபோல் காட்டுகிறார் இயக்குநர். ஆனால் காரல் மார்க்ஸ் புத்தகம் படிப்பதுபோல் காட்டுவது நெருடலாக உள்ளது. சினிமா தனத்துக்காக கதாநாயகி திணிக்கப்பட்டது போல் உள்ளது. பாவம் வந்து போகிறார். தமிழ் சினிமாவில் சமீப காலமாக கதாநாயகிகள் நிலை கொலு பொம்மையாகி வருகிறது.

    கேமரா, இசை மொத்த டீமும் அசத்துகிறது

    கேமரா, இசை மொத்த டீமும் அசத்துகிறது

    படத்தில் கதை, காட்சி அமைப்பு எந்த அளவுக்கு வலுவானதோ, அதே அளவுக்கு கேமரா மூலம் மிரட்டுகிறார் மாதேஷ். ஜிப்ரான் முக்கியமான காட்சிகளில் நான் இருக்கிறேன் என நிரூபிக்கிறார். பாடல்கள் இருக்கிறதா என தெரியாத அளவுக்கு காட்சியோடு ஒன்றிப்போய்விடுகிறோம் இயக்குநர் அதில் வெல்கிறார். பெரிய படங்களுடன் போட்டியிட முடியாததால் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. கதை நகரும் வேகம் எங்குமே தொய்வில்லை எடிட்டர் மெனக்கிட்டது தெரிகிறது.

    சாகசம் செய்யும் போலீஸா எண்ணத்தை மாற்றுகிறது படம்

    சாகசம் செய்யும் போலீஸா எண்ணத்தை மாற்றுகிறது படம்

    போலீஸார் குறித்து பல சாகசப்படங்கள் வந்தாலும், போலீஸ் பார்வையில் போலீஸாரின் துயரங்களை அழகாக பதிவு செய்துள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் தமிழின் எழுத்து இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த இப்படம் விக்ரம் பிரபுவின் படங்களில் குறிப்பிடத்தக்க படமாக இருக்கும்.

    English summary
    Review of the movie Taanakkaran as a Crime Reporter. Review of the story that reveals the opposite side of the police despite being closely acquainted with the police.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X