twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெர்மினேடர் சினிமா விமர்சனம் - ஹீரோவுக்கு நிகரான வில்லன்

    மனித உணர்வும் ரோபோ உடம்பையும் கொண்ட கிரேஸ் மற்றும் டெர்மினேடர்அர்னால்டு மற்றும் சிலர் இணைந்து 'டேனியை' வில்லன் டெர்மினேடரிடம்இருந்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் மையக்கதை.

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்:அர்னால்டு
    லின்டா ஹேமில்டன்
    மார்க்கென்ஸி டேவீஸ்
    கேப்ரீயல் லுனா
    நட்டாளியா ரைஸ்

    இயக்கம் : ஜேம்ஸ் கேமரூன்

    சென்னை : டெர்மினேட்டர் திரைவிமர்சனம்

    டெர்மினேடர் மற்றும் அர்னால்ட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து
    காத்திருக்கும் திரைப்படம் டெர்மினேடர் டார்க் ஃபேட். இதனோடு சேர்த்து
    இதுவரையில் 6 பாகங்களாக டெர்மினேடர் தொடர்கள் தொடர்ந்து வெளியாகி
    ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது.

    டெர்மினேடர் படத்தின் முதல் பாகத்தை ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர்
    என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய படம் 1984ல் வெளியாகியது.
    இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜட்ஜ்மெண்ட் டே 1991 ல் வெளியானது. இந்த
    படத்தையும் ஜேம்ஸ் கேமரூனே இயக்கி இருந்தார். படத்தின் மூன்றாம் பாகமான
    ரைஸ் ஆப் த மெஷின் 2003ல் வெளியானது. டெர்மினேடர் சால்வேஷன் நான்காம்
    பாகமாக 2009ல் ரிலீஸ் ஆனது . படத்தின் ஐந்தாம் பாகம் 2015ல் வெளியானது.
    தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் படத்தின் ஆறாம் பாகமான
    டார்க் ஃபேட் திரைப்படத்தை டிம் மில்லர் இயக்கி இருக்கிறார்.

    Terminator movie review, Terminator review, Terminator Tamil review,

    டெர்மினேடர் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏன் டெர்மினேடர்
    படங்களை பார்த்த பின்னரே பலரும் அர்னால்டு ரசிகர்கள் ஆனார்கள் . 2015ல்
    அர்னால்டு பட இசைவெளியீட்டுகாக இந்தியா வந்த போது பல அர்னால்டு
    ரசிகர்களும் அந்த விழாவிற்கு சென்றிருந்தனர் . டெர்மினேடர் பட வரிசையில்
    தற்போது வந்திருக்கும் படம் 6வது படமாகும் . இந்த டெர்மினேடரின் அனைத்து
    தொடர் படங்களிலும் அர்னால்டு தான் டெர்மினேடராக நடித்திருப்பார்.

    மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் டெர்மினேடர் டார்க் ஃபேட்
    திரைப்படத்தின் திரை விமர்சனம் - டெர்மினேடர் 6 பாகமான இந்த படத்தை
    இயக்கி உள்ளார் டிம் மில்லர். படத்தில் வழக்கம் போல டெர்மினேடராக
    நடித்திருக்கிறார் அர்னால்டு. சாராவாக லின்டா ஹேமில்டன் ,கிரேஸாக
    மார்க்கென்ஸி டேவீஸ்,வில்லன் டெர்மினேடராக கேப்ரீயல் லுனா,டேனியாக
    நட்டாளியா ரைஸ் போன்ற பலரும் படத்தில் நடித்திருக்கின்றனர்.

    Terminator movie review, Terminator review, Terminator Tamil review,

    இதுவரை வந்த டெர்மினேடர் படங்களிலே டெர்மினேடர் ஜட்ஜ்மெண்ட் டே படம் தான்
    மிகபெரிய வெற்றிப்படம் அந்த படத்தில் வில்லனாக வரும் மெர்குரி மேன் அந்த
    சமயத்தில் மிக பிரபலமான வில்லன். இந்த படத்திற்கு பிறகு நான்கு
    டெர்மினேடர் படங்கள் வெளியானாலும் அந்த படத்திற்கு ஈடான தாக்கத்தை எந்த
    ஒரு பாகமும் தரவில்லை. அந்த படத்தில் அர்னால்டு 'அஸ்டல பிஸ்டல பேபி'
    என்று ஒரு வசனம் பேசியிருப்பார் அது அந்த தலைமுறையின் ட்ரெண்டிங்
    வசனமாக அமைந்தது. தற்போது ரிலீஸாகி இருக்கும் டார்க் ஃபேட் படம் கூட
    ஜட்ஜ்மெண்ட் டே படத்திற்கு சரிசமாக எடுக்கபட வில்லை என்பதே உண்மை .

    மனித உணர்வும் ரோபோ உடம்பையும் கொண்ட கிரேஸ் மற்றும் டெர்மினேடர்
    அர்னால்டு மற்றும் சிலர் இணைந்து 'டேனியை' வில்லன் டெர்மினேடரிடம்
    இருந்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு .
    ஜட்ஜ்மெண்ட் டே படத்திற்கும் இந்த படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை அந்த
    படத்தின் வில்லனை போலவே இந்த படத்து வில்லனும் மெட்டலாக இருந்து உருகி
    உருகி வந்து டேனியை கொல்ல வருகிறான். அவன் ஏன் கொல்ல வருகிறான்,அவனை ஹீரோ
    அர்னால்டு எப்படி தடுத்தார் என்பதே படத்தின் மீதி கதை.

    Terminator movie review, Terminator review, Terminator Tamil review,

    படத்தில் இரண்டாம் பாதியில் தான் அர்னால்டு வருகிறார் ,அது ரசிகர்கள்
    இடையே சின்ன ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ஜட்ஜ்மெண்ட் டேவில்
    இருந்து இன்று வரை இங்கு பல உடற்பயிற்சி கூடங்களில் அர்னால்டு போட்டோ
    நிச்சயம் இரண்டு அல்லது மூன்று இருக்கும். அந்த அளவிற்கு தீவிர
    அர்னால்டு ரசிகர்களுக்கு அவர் இரண்டாம் பாகத்தில் மட்டுமே வருவது ஒரு
    சின்ன ஏமாற்றம் தான் .

    Terminator movie review, Terminator review, Terminator Tamil review,

    மொத்தத்தில் படம் டெர்மினேடர் ரசிகர்களுக்கு ஒரு விருந்து. ஒரு படத்தில்
    வில்லன் எந்த அளவுக்கு கடினமாக இருக்கிறானோ அப்போது தான் அதை எதிர்த்து
    நின்று ஹீரோ வெற்றி பெற முடியும். அந்த பார்முலாவுக்கு சற்றும் சலிக்காத
    வகையிலே எல்லா டெர்மினேடர் படங்களும் எடுக்க பட்டிருக்கும் அதே போல்
    இப்படமும் அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறது.

    English summary
    Terminator movie review, Terminator review, Terminator Tamil review,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X