Test Review: டெஸ்ட் விமர்சனம்.. நயன்தாரா, மாதவன், சித்தார்த்.. நடிப்புக்காகவே பார்க்கலாம்!

Rating:
3.0/5
Star Cast: மாதவன், நயன்தாரா, சித்தார்த்
Director: சசிகாந்த்

சென்னை: தயாரிப்பாளராக இருந்த சசிகாந்த் இயக்குநராக மாறி இயக்கியுள்ள டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று மதியம் வெளியானது. அன்னபூரணி படம் தியேட்டரில் வெளியாகி பெரிதாக ஓடாத நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், வட இந்தியாவில் அந்த படத்துக்கு எதிராக கிளம்பிய சர்ச்சைகள் காரணமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. ஆனால், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அவரது திருமண ஆவணப்படம் வெளியானது. அதுவும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

Test Review in Tamil  Nayanthara  Madhavan and Siddharth performance are top notch

இந்நிலையில், தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் திரைப்படம் கடைசியாக இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களை கவருமா? ஓடிடியில் நேரத்தை செலவு செய்து பார்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

டெஸ்ட் கதை: சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் டெஸ்ட் படம் உருவாகியுள்ளது. இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரராக சித்தார்த் அர்ஜுன் எனும் கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். ஹைட்ரோ பெட்ரோல் கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக கஷ்டப்படும் குடும்ப வாழ்க்கையில் எப்படியாவது சாதனை செய்துவிட வேண்டும் என சரவணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடிப்பு அரக்கனாகவே மாறியுள்ளார். அவருடைய மனைவியாக குமுதா கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா குழந்தையை பெற்றுக் கொள்ள iVF ட்ரீட்மெண்டுக்காக தனது கணவரிடம் பணத்தை ரெடி பண்ண சொல்கிறார். மாதவன் புராஜெக்ட் மத்தியில் சான்க்‌ஷனாக 5 கோடி ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். சித்தார்த்துக்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்றும் அவரை விருப்ப ஓய்வு கொள்ள அணியினர் வற்புறுத்த இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச்சை வைத்து மும்பை டான் ஒருவர் பெட்டிங்கும் நடத்துகிறார்.

இதில், மாதவன், சித்தார்த், நயன்தாரா எப்படி சிக்கிக் கொள்கின்றனர் என்றும் கடைசியில் என்ன ஆனது? யார் வெற்றிப் பெற்றார்கள்? யார் ஹீரோ? யார் வில்லன்? என்கிற பல கேள்விகளுக்கு விடையாக டெஸ்ட் படத்தை சசிகாந்த் இயக்கியுள்ளார்.

நயன்தாரா, மாதவன், சித்தார்த் செம: இந்த படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு சித்தார்த்தின் மனைவி ரோல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் சித்தார்த்தின் கன்னத்தில் பளார் விடும் காட்சிகளில் பிரம்மாதப்படுத்தியுள்ளார். அவரை தாண்டி இந்த மூன்று பேரின் நடிப்புத் தான் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. சித்தார்த்தை பார்க்கும் போது ரியல் கிரிக்கெட் வீரர் உணர்வை அப்படியே கடத்துகிறார். நயன்தாராவின் நடிப்பு ஆரம்பத்தில் கொஞ்சம் ஒட்டாத மாதிரி இருந்தாலும் போக போக அவரது நடிப்பு அப்ளாஸ் அள்ளுகிறது. அனைவரையும் விட இந்த டெஸ்ட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் போட்டு 2.30 மணி நேரம் செலவு செய்து பார்க்கலாம் என்றால் அதற்கு மாதவனின் நடிப்பு மட்டுமே போதும் என்று சொல்லலாம். மனுஷன் போராட்ட குணத்திலும், சாதிக்க வேண்டிய வெறியிலும், நெகடிவ் ஷேடிலும் பிரித்து மேய்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பிளஸ்: சிறிய பட்ஜெட்டில் சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு அதை பக்காவாக இயக்கிய விதத்தில் சசிகாந்த் ஸ்கோர் செய்கிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மீன் என காஸ்டிங்கை தேர்வு செய்த இடத்தில் தான் இயக்குநரின் திறமை தெரிகிறது. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவு, பின்னணி இசை என சின்ன வீட்டுக்குள்ளே பல கோடி டீலிங் எல்லாம் நடப்பதையும் டெஸ்ட் மேட்ச்சை ரியல் கிரிக்கெட் மேட்ச் போல பிரம்மாண்டமாக காட்டியுள்ள விதமும் படத்துக்கு பிளஸ் தான்.

மைனஸ்: ஆரம்பத்தில் இருந்த இன்டென்ஸ் படத்தின் இரண்டாம் பாதியில் குறையத் தொடங்குகிறது. மாதவனை வில்லனாக காட்டியிருக்காமல், அவரை ஒரு சூழ்நிலை கைதியாகவே மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி வேறு வழியின்றி அந்த காரியத்தை செய்வது போல காட்டியிருந்தால், கிளைமேக்ஸில் சித்தார்த், மாதவன் இருவரும் எப்படி தப்பிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உருவாகியிருக்கும். ஆனால், இயக்குநர் அங்கே கோட்டை விட்டு விட்டார் என்று தான் தோன்றுகிறது. பெரிய நடிகர்களை வைத்துக் கொண்டு குறைந்த செலவில் சீரியல் போன்ற மேக்கிங்கை தவிர்த்திருக்கலாம். ஓடிடியில் கண்டிப்பாக ஒரு முறை இந்த டெஸ்ட்டை டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X