தாய் கிழவி படத்தை பிரபலங்கள் பாராட்டிட்டாங்க ஓகே.. ரசிகர்கள் என்ன சொல்றாங்க?.. இதோ விமர்சனம்
சென்னை: தாய் கிழவி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தியேட்டர்களில் ரிலீஸாவதற்கு முன்பே பிரபலங்களுக்கு திரையிடப்பட்ட ப்ரீமியர் ஷோவில் படத்துக்கு சூப்பரான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இருப்பினும் ரசிகர்கள்தான் எஜமானர்கள் என்பதால் அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதில் படக்குழு ஆர்வமாக இருந்தது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தாய் கிழவி திரைப்படம் பற்றித்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது. ராதிகா உள்ளிட்டோரின் நடிப்பு, சிவக்குமார் முருகேசனின் இயக்கம், வசனம் என அத்தனையும் பாராட்டப்படுகிறது. ப்ரீமியர் ஷோ பார்த்த நடிகை ஜோதிகா; 'இந்தப் படம் தமிழ் சினிமாவை ஒரு அடி முன்னேற்றும் படம் என்றும்; இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்' என புகழ்ந்திருந்தார். அதேபோல் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார்கள்.

ரசிகர்கள் விமர்சனம்: என்னதான் பிரபலங்கள் வெகுவாக படத்தை பாராட்டினாலும் ரசிகர்கள் பாராட்டினால்தான் படம் ஹிட்டாகும். அதுதான் உண்மையான வெற்றி என்று எடுத்துக்கொள்ளப்படும். எனவே ரசிகர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது குறித்து படக்குழு அதிக கவனத்துடன் இருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதை இதில் பார்க்கலாம்.
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?: படம் பார்த்த ரசிகை ஒருவர், 'படத்தின் க்ளைமேக்ஸ் ரொம்ப அருமையாக இருந்தது. பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுத்திருக்கிறார்கள். ராதிகா மேடம் சூப்பராக நடித்திருக்கிறார்' என்றார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ரசிகை கூறுகையில், 'படத்தில் காமெடியெல்லாம் சூப்பராக இருந்தது. இவ்வளவு காமெடியுடன் ஒரு படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. பெண்களுக்கான ஒரு நல்ல படம். எல்லா கேரக்டர்களும் அருமையாக இருக்கின்றன' என்றார். மேலும் ஒரு ரசிகையோ, 'என் பாட்டியை பார்த்தது மாதிரியே இருந்தது. நிச்சயம் எனது பாட்டியை அழைத்துவந்து இந்தப் படத்தை மீண்டும் பார்ப்பேன்' என மகிழ்ச்சியோடு கூறினார்.
படம் சூப்பராக இருந்தது: ஜென் ஸியை சேர்ந்த ரசிகர் ஒருவர், 'படம் க்ரிஞ்சாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் படம் சூப்பராக இருந்தது. இது பக்கா ஃபேமிலி என்ட்டெர்டெயினர். கண்டிப்பாக எல்லோரும் வந்து பார்க்கலாம்' என்றார். அதேபோல் இன்னொருவரோ, 'படம் ஜாலியாக இருந்தது. சுமாராகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் சூப்பராக இருந்தது. கமல்ஹாசனின் பாடல்களை எல்லாம் போட்டு அருமையாக செய்திருந்தார்கள். அது நன்றாக ஒத்து போயிருந்தது. அனைவருமே பார்க்கலாம்' என்றார்.
ஆண்களும் பார்க்க வேண்டும்: ஒரு ரசிகையோ இந்தப் படத்தை ஆண்களும் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். அவர் பேசுகையில், 'பெண்கள் மட்டுமில்லை எல்லா ஆண்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் சுயமாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை அருமையாக காட்டியிருக்கிறார்கள். ராதிகாவின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. இறுதியாக ராதிகா எல்லா பெண்களிடமும் கொடுக்கப்படும் ஸ்பீச் ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. அதை யாருமே மிஸ் செய்துவிடாதீர்கள்.இயற்கையாக இருக்கிறது" என்று பாராட்டினார். இப்படி ரசிகர்களிடமும் சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் 2026ஆம் ஆண்டின் மெகா ப்ளாக் பஸ்டர் லிஸ்ட்டில் தாய் கிழவி இணைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















