Thaai Kizhavi X Review: தாய் கிழவி படம் எப்படி இருக்கு?.. ராதிகா சரத்குமார் மிரட்டினாரா?.. உருட்டினாரா?

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, முனிஷ்காந்த், பால சரவணன், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி திரைப்படம் பிப்ரவரி 27ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று திரையிடப்பட்ட சிறப்புக் காட்சிக்குப் பிறகு படத்தின் விமர்சனங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

பிப்ரவரி மாதம் வித் லவ் படத்துக்குப் பிறகு வெளியான எந்தவொரு படமும் வசூல் செய்யாத நிலையில், பல தியேட்டர்களில் சிங்கிள் டிஜிட்டில் தான் ஆட்கள் வருகை தந்து படம் பார்த்து வரும் நிலை உருவாகி உள்ளது. அந்த சோகத்தை கண்டிப்பாக இந்த வாரம் தாய் கிழவி சரி செய்யும் என சினிமா வட்டாரம் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

Thaai Kizhavi X Review in Tamil  Sivakarthikeyan and Radhika Sarathkumar movie wil be a blockbuster
Photo Credit:

ராதிகா சரத்குமார் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம் என்கிற அளவுக்கு படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். தாய் கிழவி படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

சிரிப்பு சரவெடி: ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி திரைப்படம் சிரிப்பு சரவெடியாக உள்ளது. முனிஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் பால சரவணன் கதாபாத்திரங்கள் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளன. ராதிகா சரத்குமாரின் நடிப்பு வேறலெவல். அதிலும், கிளைமேக்ஸ் காட்சிகள் எல்லாம் அல்டிமேட் என ரிங்கு குப்தா படத்திற்கு தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளார்.

ராதிகாவை தவிர யாராலும் முடியாது: தாய் கிழவி படத்தை பார்த்த ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான திரை அனுபவத்தை இந்த படம் தந்தது என்றும் ராதிகாவை தவிர வேறு எந்தவொரு நடிகையும் இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் இந்த படத்துக்கு 5க்கு 4 ரேட்டிங் தரலாம் என விமர்சித்துள்ளார்.

தங்க முட்டை போடுற வாத்து: சித்தார்த் ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தாய் கிழவி திரைப்படம் ஒரு தங்க முட்டை போடுற வாத்து என பாராட்டியுள்ளார். அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஒரு சூப்பரான மெசேஜை செம ஜாலியான படத்தில் வைத்து மனதை நெகிழ வைத்துள்ளார். ராதிகாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. அவர் வரும் காட்சிகள் எல்லாமே அடிபொலி ரகம் தான். துணை நடிகர்களான அருள்தாஸ், பால சரவணன் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோரின் கதாபாத்திர வடிவு அவர்கள் நடித்துள்ள விதம் தான் படத்தை ஹிட் ஆக்கியிருக்கிறது என நீண்ட விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜாக்பாட்: கண்டிப்பாக சிவகார்த்திகேயன் கம்பெனிக்கு இந்த படம் மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, ஷாலினி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்களும் நேற்று நடைபெற்ற சிறப்புக் காட்சியை பார்த்து பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X