Thalainagaram 2 Review: தலைநகரமா? தலைவலி நரகமா? வடிவேலுவும் இல்லை.. தலைநகரம் 2 விமர்சனம் இதோ!

Rating:
2.0/5

நடிகர்கள்: சுந்தர். சி, பாலக் லால்வானி
இசை: ஜிப்ரான்
இயக்கம்: வி.இசட் துரை
நேரம்: 2 மணி நேரம் 23 நிமிடம்

சென்னை: இயக்குநர் துரை இயக்கத்தில் சுந்தர். சி முதன்முறையாக ஹீரோவாக நடித்த தலைநகரம் படத்தின் பார்ட் 2 சுமார் 17 ஆண்டுகள் கழித்து இன்று வெளியாகி உள்ளது.

தலைநகரம் படத்தில் வடிவேலு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களின் நடிப்பும் சுந்தர். சியின் எதார்த்தமான ஆக்ரோஷமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அந்த படம் வெற்றிப்படமாக மாறியது.

Thalainagaram 2 Review in Tamil: Sundar Cs solo action failed to entertain the fans

இந்நிலையில், அதன் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ள இந்த படத்தில் நாய்சேகர் வடிவேலு மிஸ்ஸிங் மேலும், வடிவேலுவை பங்கமாக கலாய்க்கும் சுந்தர். சி படம் முழுக்க ஸ்டோன் ஃபேஸ் உடன் காட்சி தந்து ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளார்.

தலைநகரம் 2 கதை: பிரபல ரவுடியாக இருந்த ரைட்டு ரவுடிசத்தை விட்டு விட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். ஆனால், சென்னையில் உள்ள மூன்று முக்கிய ரவுடிகள் ரைட்டை அமைதியாக வாழ விடவில்லை. அந்த மூவரையும் தனித்தனியாக போட்டுத் தள்ள மீண்டும் ரவுடிசத்தை கையில் எடுப்பது தான் இந்த தலைநகரம் 2 படத்தின் கதை.

தலைநகரம் படம் ரசிகர்களை கவர அதுவரை இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த சுந்தர். சி ஹீரோவாக நடித்தது மற்றும் அந்த படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நாய்சேகர் காமெடி தான். வடிவேலு இரண்டாம் பாகத்தில் இல்லை அப்படியே இருந்திருந்தாலும் முதல் பாகம் அளவுக்கு காமெடி வொர்க்கவுட் ஆகியிருக்குமா? என்பதும் கேள்விக்குறி தான்.

பிளஸ்: அரண்மனை 4ம் பாகத்தில் ஹீரோவாக நடித்து வரும் சுந்தர். சி கடைசியாக விஇசட் துரை நடிப்பில் நடித்த இருட்டு படம் பேய் பட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல இன்னொரு ஹிட் கொடுக்கும் என்றே இந்த படத்தை சுந்தர். சி தேர்வு செய்தது நல்ல பிளான் தான். அதற்கு ஏற்றார் போல ஆக்‌ஷன் காட்சிகளில் ஒவ்வொரு வில்லனையும் சுந்தர். சி பந்தாடும் இடங்களில் அவருடைய ஆக்ரோஷ முகம் அட்டகாசமாக வெளிப்படுகிறது.

தம்பி ராமைய்யா மற்றும் அவருக்கு மகளாக நடித்துள்ள பெண் இருவருக்கும் இடையே உள்ள சென்டிமென்ட் காட்சி இந்த படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. காமெடி மிஸ்ஸான நிலையில், ஆக்‌ஷன் மற்றும் ஸ்டன்ட்டை வைத்து மேட்ச் செய்ய முயற்சித்து இருக்கிறார் இயக்குநர். ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக் சுந்தர். சியின் ரைட்டு கதாபாத்திரத்திற்கு எந்தளவுக்கு மாஸ் கொடுக்க முடியுமோ அதை கச்சிதமாக இந்த படத்தில் கொடுத்து ஆக்‌ஷன் பிரியர்களை திருப்திப்படுத்தி உள்ளார்.

Thalainagaram 2 Review in Tamil: Sundar Cs solo action failed to entertain the fans

மைனஸ்: ஏற்கனவே சொன்னது போல வடிவேலு காமெடி மற்றும் அவரை அடிக்கடி ட்ரோல் செய்யும் சுந்தர். சியின் கவுன்ட்டர் காட்சிகள் இல்லாதது இந்த படத்திற்கு பெரிய மைனஸ். மேலும், ஹீரோயினாக இந்த படத்தில் பெயருக்காக வரும் பாலக் லால்வானியின் கதாபாத்திரமே படத்தைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

மொத்தத்தில் சமீப காலமாக வரும் பார்ட் 2 படங்கள் முதல் பாகத்தின் பெயரை எந்தளவுக்கு கெடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கெடுத்து வரும் நிலையில், அந்த லிஸ்ட்டில் இந்த வாரம் இன்னொரு படமும் சேர்ந்துள்ளது. ஜிப்ரானின் இசை பிஜிஎம் ஆகவும், பாடலாகவும் எங்கேயும் வொர்க்கவுட் ஆகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X