TTT Review: தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்.. எஸ்எம்எஸ் மோடில் அதகளப்படுத்திய ஜீவா.. படம் எப்படி?

Rating:
3.0/5
Star Cast: ஜீவா, பிரார்த்தனா
Director: நிதிஷ் சகாதேவ்

சென்னை: மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான பக்கா காமெடி டிராமா படமான Falimy படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா, பிராத்தனா, தம்பி ராமைய்யா, இளவரசு, ஜென்சன் திவாகர், அனுராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் விஷ்ணு விஜய் இசையில் பொங்கல் வெளியீடாக இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது 'தலைவர் தம்பி தலைமையில்' (TTT) திரைப்படம்.

"படிச்சு படிச்சு சொன்னேன்னே கேட்டீங்களா" என அரசியல் நய்யாண்டியுடன் வெளியான அறிமுக டீசரே ரசிகர்களின் கவனத்தை இந்த படத்தின் மீது திருப்பியது. நடிகர் ஜீவா மீண்டும் நல்ல கதைகளையும் நல்ல இயக்குநர்களையும் தேடித் தேடி படம் பண்ணி வருகிறார்.

Thalaivar Thambi Thalaimaiyil Review in Tamil  Jiiva done a super job in this comedy entertainer

மலையாள படங்கள் மாதிரி தமிழில் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்கள் வருவதில்லையே என ஃபீல் பண்ணும் ரசிகர்களுக்கான பொங்கல் விருந்து படமாக இந்த படம் வெளியாகி உள்ள நிலையில், படம் எப்படி இருக்கு? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

தலைவர் தம்பி தலைமையில் கதை: கிராம பிரசிடன்ட்டாக இருக்கும் ஜீவா அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில், முதல் ஆளாக நாம தலைமை ஏற்று திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைத்தால், நிறைய ஓட்டுக்கள் நமக்கு விழும் என்பதற்காக மூக்கை நுழைக்க, அந்த பெண்ணின் திருமணத்தை சுற்றி ஏற்படும் சிக்கல்களை ஜீவா தீர்த்து வைத்தாரா? அல்லது அதில் சிக்கி சின்னாபின்னமானாரா? என்பது தான் தலைவர் தம்பி தலைமையில் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா நடிப்பில் ஒரு ஸ்பீடு மற்றும் எனர்ஜி அதிகமாகவே இருக்கும். அதுதான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணம். அதே போன்ற ஒரு எனர்ஜியை இயக்குநர் நிதிஷ் சகாதேவ் மீண்டும் கொண்டு வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். கதையின் நாயகி என்று பார்த்தால் அது திருமணம் ஆகப்போகும் மணப்பெண் பிரார்த்தனா தான். மார்த்தாண்டத்தில் இருந்து அவரை திருமணம் செய்துக் கொள்ள மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் வருகிறார். தம்பி ராமைய்யாவின் பொண்ணான பிரார்த்தனாவுக்குத்தான் திருமணம் நடைபெற போகிறது.

பக்கத்து வீட்டுக்காரரான இளவரசுக்கும் தம்பி ராமைய்யாவுக்கும் ஏற்கனவே ஈகோ மோதல் இருக்கும் சூழலில் திருமணத்துக்கு முன்பாக ஒரு சம்பவம் நடந்து விடுகிறது. திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைக்க வந்த ஜீவா பிரச்னையை உருவாக்கினாரா? அல்லது பிரச்னையை தீர்த்து வைத்தாரா? என்பதை தியேட்டரில் சென்று பாருங்கள்.

செம காமெடியாக ஒரு அரசியல் நய்யாண்டி படத்தை கிராமத்தில் நடக்கும் ஒரு திருமணத்தை வைத்து சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. லப்பர் பந்து, குடும்பஸ்தன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக கலக்கிய ஜென்சன் திவாகர் இந்த படத்தில் ஜீவாவுக்கு எதிர்கட்சி போட்டியாளராக உள்ளார். அவர் செய்யும் அலப்பறை தான் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

Thalaivar Thambi Thalaimaiyil Review in Tamil  Jiiva done a super job in this comedy entertainer

பிளஸ்: ஜீவா இந்த படத்தில் படம் முழுக்க ஒரே காஸ்ட்யூமான வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் வருகிறார். ஒரே நாள் இரவில் நடைபெறுவது போல விறுவிறுப்புக்கு பஞ்சம் குறையாத திரைக்கதை. 1 மணி நேரம் 55 நிமிடத்தில் ரசிகர்களை போர் அடிக்காத வகையில் எடிட்டர் அர்ஜுன் பாபு படத்தை செதுக்கிய விதம் தான் படத்திற்கு பெரிய பலம். கண்ணன் ரவி தயாரிப்பில் புரொடக்‌ஷன் வேல்யூவுக்கும் எந்தவொரு குறையும் இல்லை.

மைனஸ்: மலையாள படங்களுக்கே உரித்தான ஸ்லோவான நரேட்டிவ் இந்த படத்திலும் உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் அதை ஏற்றுக் கொண்டால் இந்த பொங்கல் வின்னராக கூட இந்த 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் மாறும். மலையாள இயக்குநர் மற்றும் கதையாசிரியர்கள், டெக்னிஷீயன்கள் என பலரும் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ஹெவியான மலையாள வாடை அடிப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த பொங்கலுக்கு ஃபேமிலியோட ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமானால் இந்த படத்திற்கு செல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X