twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Beast Review: வெறித்தனமா.. விளையாட்டுத்தனமா.. வீரராகவன் வேட்டை எப்படி இருக்கு? பீஸ்ட் விமர்சனம்!

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்: விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன்

    இசை: அனிருத்

    இயக்கம்: நெல்சன்

    சென்னை: நடிகர் விஜய்க்காக வித்தியாசமான தளபதி விஜய் டைட்டில் கார்டில் இருந்தே ரசிகர்களை கொண்டாட வைத்து விடுகிறார் இயக்குநர் நெல்சன்.

    Recommended Video

    Beast FDFS Audience OPINION | Thalapathy | Nelson | Theatre Response | Filmibeat Tamil

    சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது பீஸ்ட் திரைப்படம்.

    கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி பிளஸ் ஆக்‌ஷனை கொடுத்து இருக்கிறார் இதில் இரண்டுமே சரியாக ஒட்டவில்லை என்பது தான் பிரச்சனையாக முடிகிறது.

    Beast FDFS: பாலாபிஷேகம், பட்டாசு என திருவிழா கோலத்தில் களைகட்டிய தியேட்டர்கள்.. வெளியானது பீஸ்ட்!Beast FDFS: பாலாபிஷேகம், பட்டாசு என திருவிழா கோலத்தில் களைகட்டிய தியேட்டர்கள்.. வெளியானது பீஸ்ட்!

    வீரராகவன் இன்ட்ரோ

    ராஜஸ்தானின் ஜோத்பூரில் படம் ஆரம்பிக்கிறது. கட் பண்ணா பாகிஸ்தானில் குழந்தையின் பலூன் ஒன்று அதன் கையை விட்டு பறக்க வீரராகவன் என்ட்ரி கொடுத்து அந்த பலூனை பிடித்து குழந்தையின் கையில் கொடுக்கிறார் ஆனால், பலூன் உடைந்து விடுகிறது. படமும் அங்கேயே உடையப் போகிறது என்பதை சிம்பாளிக்காக சொல்லி உள்ளாரா நெல்சன் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

    விஜய். அங்கே திடீரென நடக்கும் பயங்கரவாத தாக்குதலில் எதிரிகளை பறந்து பறந்து பந்தாடுகிறார் விஜய். ஸ்னைபர் கன் எடுத்து பயங்கரவாதி ஒருவரின் காரை சுட்டு வீழ்த்தும் போது, நடிகர் விஜய் எந்த குழந்தையை சிரிக்க வைத்தாரோ அந்த குழந்தை இறந்து விடுகிறது. வீரராகவன் விரக்தி அடைந்து அப்செட் ஆகும் இடத்தில் பீஸ்ட் டைட்டிலை போட்டு படத்தை ஆரம்பிக்கும் இடத்திலேயே இயக்குநர் நெல்சன் கைதட்டல்களை பெறுகிறார். துப்பாக்கி படத்திலும் பஸ் பாம் பிளாஸ்ட்டின் போது விஜய் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டதை நினைத்து ஃபீல் பண்ணுவார் (அதுதானடா.. அதேதான்).

    நெல்சன் டச்

    நெல்சன் டச்

    கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை போலவே பீஸ்ட் படத்திலும் காமெடிக்கு பஞ்சமே இல்லை. அந்த குழந்தை இறந்ததும் ராணுவத்தின் மீதே நம்பிக்கை இழந்து RAWல் இருந்து வெளியேறுகிறார் விஜய். விடிவி கணேஷ் நடத்தும் டாமினிக் செக்யூரிட்டி சர்வீஸில் பூஜா ஹெக்டே ப்ரீத்தி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். விடிவி கணேஷ் மற்றும் பூஜா ஹெக்டே காம்போவில் காமெடி ரொம்ப நல்லாவே வொர்க்கவுட் ஆகி உள்ளது. வீரராகவன் அந்த செக்யூரிட்டி சர்வீஸில் பணியாற்ற வருகிறார்.

    மால் ஹைஜாக்

    மால் ஹைஜாக்

    சென்னையில் உள்ள பிரம்மாண்ட மாலுக்கு செக்யூரிட்டி சர்வீஸ் கொடுக்கும் காண்ட்ராக்ட் விடிவி கணேஷுக்கு கிடைக்க, அவரோட டீம் அங்கே செல்கிறது. அந்த நேரத்தில் அந்த மால்-ஐ பயங்கரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர். பயங்கரவாத தலைவனை விடுவித்தால் தான் இங்கே உள்ள மக்களை உயிரோடு விடுவோம் என பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். வீரராகவனும் அங்கே அவர்களுடன் பிணையக் கைதியாக உள்ளார். யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி பண்ணும் காமெடியை விட விடிவி கணேஷ் இந்த படத்தில் தனக்கே உரிய பாணியில் காமெடி பண்ணி ஸ்கோர் செய்கிறார்.

    செல்வராகவனுக்கு செம ரோல்

    செல்வராகவனுக்கு செம ரோல்

    அல்தாஃப் உசைன் எனும் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக மனுஷன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். சாணிக் காயிதம் படத்திற்கு முன்பாகவே செல்வராகவனை திரையில் பார்த்த ரசிகர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

    போக்கிரி வைப்

    போக்கிரி வைப்

    நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் தான் இயக்குநர் நெல்சன் என்பது அனைவருக்கும் தெரியும். ஃபேன் பாயாகவே இந்த படத்தை இயக்கி இருக்கிறார் நெல்சன். போக்கிரி படத்தில் இடியே விழுந்தாலும் பெரிய அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத கதாபாத்திரம் தான் வீரராகவன் கதாபாத்திரம். அதே போல இன்டர்வெல் பிளாக்கில் வரும் "ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்" காட்சி ரசிகர்களை அட போட வைக்கிறது.

    பீஸ்ட் பிளஸ்

    பீஸ்ட் பிளஸ்

    பீஸ்ட் படத்தின் பிளஸ் என்று பார்த்தால் இயக்குநர் நெல்சனின் டைமிங் காமெடி சென்ஸ் தான். தெரிந்த கதை தான் என்றாலும், அதை ஸ்க்ரீன்பிளே செய்த விதத்தில் அசத்தி உள்ளார் நெல்சன். நடிகர் விஜய்யின் வெறித்தனமான நடிப்பு, எனர்ஜி, ஃபிட்னஸ் என ஆக்‌ஷன் காட்சிகளை நம்பும் அளவுக்கு இருக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. கிரணின் மால் செட் பிரம்மிக்க வைக்கிறது. எடிட்டிங் இன்னும் சற்றே க்ரிஸ்ப்பியாக இருந்திருக்கலாம். அனிருத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் தான் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம்.

    பீஸ்ட் மைனஸ்

    பீஸ்ட் மைனஸ்

    பயங்கரவாதிகளில் ஒருவனாக வரும் பிரபல மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ வில்லனாக மிரட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரே விஜய்க்கு உதவுவது செம ட்விஸ்ட்டாக இருந்தாலும், படத்தை நகர்த்த வைத்ததை போலவே உள்ளது. படத்தின் ரியல் வில்லன் பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை. அதே போல, இயக்குநர் நெல்சன் ஆக்‌ஷன் மற்றும் காமெடி என பேக்கேஜ் பண்ணி கதை சொன்ன விதத்தில் பல இடங்களில் கோட்டை விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது.

    ஃபன் ரோலர் கோஸ்டர்

    ஃபன் ரோலர் கோஸ்டர்

    பீஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இருந்தால் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படம் சந்தோஷப்படுத்தி இருக்காது. ஏற்கனவே எதிர்பார்த்ததை போலவே டாக்டர் படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் சீரியஸான சீன்களுடன் டார்க் காமெடியை வைத்து இயக்குநர் நெல்சன் பாஸ் ஆகிவிட்டார்.

    லாஜிக் இல்லா மேஜிக்

    லாஜிக் இல்லா மேஜிக்

    சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் கதைக்களமும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அந்த படத்தின் ஸ்க்ரீன் பிளேவில் டார்க் காமெடியை கலந்து ஹிட் கொடுத்ததை போலவே இங்கேயும் முயற்சி செய்துள்ளார் நெல்சன். பயங்கரவாதிகளின் கோரிக்கையின் பேரில் கைது செய்து வைக்கப்பட்ட அந்த பயங்கரவாத கும்பலின் தலைவனை விடுவித்த நிலையில், கிளைமேக்ஸில் விஜய் ஸ்பேஸ் ஜெட்டில் பண்ணும் வித்தியாசமான சம்பவம் லாஜிக் இல்லா மேஜிக் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பீஸ்ட் சும்மா பறக்குது.. சிறகுகள் இல்லாமல்!

    English summary
    Beast Review in Tamil [பீஸ்ட் திரை விமர்சனம்]: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X