twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தடுமாறும் ஆண்களை தாங்கிப்பிடிக்கும் பெண்கள்... ‘மணியார் குடும்பம்’ சொல்லும் மெசேஜ்! விமர்சனம்

    ஊதாரிதனமாக செலவு செய்து குடும்பத்தை தவிக்கவிடும் ஆண்களை, பெண்கள் எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பதை காமெடி, எமோஷன், ஆக்ஷன், காதல் கலந்து சொல்கிறது மணியார் குடும்பம்.

    |

    Recommended Video

    மணியார் குடும்பம் விமர்சனம்- வீடியோ

    Rating:
    3.0/5
    Star Cast: உமாபதி ராமையா, மிருதுளா முரளி, ராதா ரவி, தம்பி ராமையா, சிங்கம்புலி
    Director: Thambi ramaiah

    சென்னை: ஊதாரிதனமாக செலவு செய்து குடும்பத்தை தவிக்கவிடும் ஆண்களை, பெண்கள் எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பதை சொல்கிறது மணியார் குடும்பம்.

    மணியார் குடும்பத்தின் கதை
    ராராபுரம் ஊரின் பெரிய குடும்பம் இந்த மணியார் குடும்பம் தான். அப்பா சொத்தை குட்கார்ந்து தின்றே காலி செய்யும் நார்த்தங்காசாமிக்கு (தம்பி ராமையா), தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு தின்னையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசுவது தான் வழக்கமான பணி. குடும்பத்தின் மாத செலவுக்கு வீட்டின் கதவுகளை விற்கும் அளவுக்கு தான் நிலைமை. ஆனால் அதை பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் வெள்ளை வேட்டி சட்டையில் பந்தாவாக பழைய பண்ணையார் கெட்டப்பிலேயே திரிகிறார்.

    ஊதாரி பிள்ளை

    ஊதாரி பிள்ளை

    அப்பாவுக்கு தப்பாமல் இருக்கும் மகன் குட்டிமணியும் (உமாபதி) குடித்துவிட்டு ஊதாரித்தனமாக ஊரை சுற்றி திரிகிறார். தாய் மாமன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து ஊருக்குள் அலப்பறை செய்கிறார். வேலை வெட்டி இல்லாத வெட்டி பையன் உமாபதியை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் அவரது அத்தை மகள் மகிழம்பூ (மிருதுளா முரளி). தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊதாரியாக இருக்கும் உமாபதியை திருத்தி, கல்யாணம் செய்ய திட்டம் தீட்டுகிறார். அது என்ன ஆனது என்பது தான் க்ளைமாக்ஸ்.

    தனிஒருவன் அப்பா

    தனிஒருவன் அப்பா

    தனிஒருவன் படத்தின் அரவிந்த்சாமியின் அப்பாவி தந்தையாக நடித்திருப்பார் தம்பி ராமையா. சிறிய கதாபாத்திரமான அதை அப்படியே முழுபடத்துக்கான கேரக்டராக மாற்றியிருக்கிறார். சூதுவாது தெரியாமல் வெகுளிதனமாக தம்பி ராமையா செய்யும் செயல்கள், சிரிப்பு, பிரதாபம், கோபம், பாவம் என மிக்ஸ்டு ரியாக்ஷன்களை வரவைக்கிறது.

    ஆல் இன் ஆல் அழகுராஜா

    ஆல் இன் ஆல் அழகுராஜா

    படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்தையுமே செய்திருப்பவர் தம்பி ராமையா தான். ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை என்றால் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அழமான காட்சியமைப்புகளின் வழியே பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.

     பெண்ணால் முடியும்

    பெண்ணால் முடியும்

    கணவன் ஊதாரியாகவே இருந்தாலும் அவரது மனம் கோணாமல் பார்த்துக்கொள்ளும் பெண்கள் ஒருபக்கம். கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு பிறந்த வீட்டுடன் உறவு பாராட்ட முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றொரு பக்கத்தின். இதற்கிடையில், ஒரு பெண் நினைத்தால் ஆண்களை திருத்தி குடும்பத்தை நிலைநிறுத்த முடியும் என துணிச்சலாக களமிறங்கும் நவீன யுவதிகள் என மூன்று விதமான பெண்களையும் படத்தில் காட்டியிருக்கிறார் தம்பி ராமையா. இதற்காக தனித்தனியாக காட்சிகளை வைக்காமல், கதையினூடே அதை விளக்கிய விதம் சூப்பர்.

    உமாபதி

    உமாபதி

    நன்றாக நடித்துள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அதகளப் படுத்தியுள்ளார். நடனத்தில் ஹிருத்திக் ரோசனை ஞாபகப் படுத்துகிறார். குறிப்பாக ‘அடி பப்பாளிப் பழமே' பாடல் ஆஹா. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என மிகச் சிறந்த நடிகரான தம்பி ராமையாவின் பெயரை நிச்சயம் காப்பாற்றுவார் என நம்பலாம். அந்த பூனை மீசை கெட்டப்பை மட்டும் மாற்றினால், நிச்சயம் தம்பிக்கு தமிழில் நல்ல எதிர்காலம் உண்டு.

    மிருதுளா முரளி

    மிருதுளா முரளி

    கேரளாவில் இருந்து தமிழுக்கு கிடைத்த மற்றொரு நல்ல நடிகையாக மிருதுளா முரளியைச் சொல்லலாம். நடிப்பு ஓகே. கதாபாத்திரத்தின் தேவை அறிந்து, கிளாமரும் காட்டி இருக்கிறார்.

    இசை:

    இசை:

    அடி பப்பாளிப் பழமே, சிலேபிக்கண்ட மீனப் போல என பாடல்கள் எல்லாம் மனதில் நிற்கின்றன. நீண்ட காலங்களுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் கேட்பது காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. இத்தனை நாளா இம்புட்டுத் திறமைய எங்கிட்டு ஒளிச்சு வச்சிருந்தீங்க தம்பி ராமையா சார். தமிழ் சினிமா ஒரு நல்ல இசையமைப்பாளரை இத்தனை காலம் பயன்படுத்தாமல் இருந்துள்ளது.

    இவர்களும் இருக்கிறார்கள்

    இவர்களும் இருக்கிறார்கள்

    பவன் வில்லனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் மிரட்டல், பின்னர் பம்மல் என கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே சமுத்திரக்கனி. ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிச் செல்கிறார் ‘பிக் பாஸ்' யாஷிகா.

    பாட்டிக் கதை

    பாட்டிக் கதை

    பாட்டிக் கதைக் காட்சிகளில் கிளாமரைத் தவிர்த்திருக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. இவை மட்டுமே படத்தின் மைனஸ் எனலாம்.

    பாராட்டப்படும் க்ளைமாக்ஸ்

    பாராட்டப்படும் க்ளைமாக்ஸ்

    மற்றபடி, கிளைமாக்ஸ் டிவிஸ்ட் ரசிக்க முடிகிறது. குடும்ப கதைக்களத்தில் யூகிக்க முடியாத திரைக்கதையைத் தந்ததற்கு ஒரு சபாஷ். ஊதாரித்தனமாக தடுமாறும் ஆண்களை தாங்கிப் பிடிக்கும் பெண்கள் தான் படத்தின் பலம்.

    English summary
    The tamil movie Maniyar Kudumbam, directed by Thambi Ramaiah is a family drama which tells the importance of women in men's life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X